For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீவில் வாழ்ந்த லட்சக்கணக்கானோர் மர்ம மரணம்!

மரணத்தை கொடுக்கும் மர்மங்கள் நிறைந்த மிகவும் பயங்கரமான இடங்கள் உலகைச் சுற்றி எங்கெல்லாம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்

|

விபத்துக்களை எல்லாம் எங்கே எப்படி நடக்கும் என்று முன்னெச்சரிக்கையாக இருக்க முடியாது. நாம் எதிர்பாராத சமயத்தில் நடந்து முடிக்கும் அதற்கு எப்படி ரியாக்ட் செய்திட வேண்டும் என்று வேண்டுமானல தயாராக இருக்கலாம். அதே போல மர்மங்கள் குறித்த ஒரு மாயம் எல்லாரிடத்திலும் இருக்கும்.

காலங்காலமாக நம்பி வந்த ஓர் விஷயம் என்றாலும் இதை எப்படி சாத்தியப்படுத்தியிருப்பார்கள். அதன் ஆரம்ப இடம் இது போன்ற விஷயங்கள் குறித்த சந்தேகம் நமக்கு இருக்கும். அதிலும் மர்மம் நிறைந்த விஷயம் என்றால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இருக்காது. தொடர்ந்து அதைப் பற்றிய விவாதங்கள் ஆராய்ச்சிகள் இருந்து கொண்டேயிருக்கும்.

எல்லாருக்கும் எதைப் பற்றி பயம் இருக்கிறதோ இல்லையோ தங்கள் உயிர் குறித்த ஒரு பயம் இருக்கத்தன செய்யும் , அங்கே போனால் உயிரே பறிபோய் விடும் என்ற அளவுக்கு பயங்கரமான இடங்களைப் பற்றி தான் இப்போது தெரிந்து கொள்ளப்போகிறீர்கள், அங்கே செல்லமாட்டோமே என்றாலும் உலகில் இப்படியான இடங்கள் கூட இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 கொடுமைகள் :

கொடுமைகள் :

அந்த மலையின் முகட்டில் நின்று பார்த்த்தாலே ஏராளமான வீரர்களின் பிணங்கள் தெரியுமாம்.ராணுவ தளவாட சாமான்கள், வீரர்கள் பயன்படுத்திய பொருட்கள், எலும்புக்கூடுகள் என பார்ப்பவரை கதிகலங்க செய்யக்கூடிய இடமாக இருக்கிறது. கிட்டதட்ட 1944களில் ஜப்பான் நாட்டை அமெரிக்கா ஆக்கிரமித்திருந்தது. அப்போது அமெரிக்கர்கள் ஜப்பான் நாட்டினரை ஏராளமான கொடுமைகளை செய்தனர்.

அவர்களிடமிருந்து தப்பிக்க ஜப்பான் நாட்டினர் சைபன் என்ற இந்த மலையின் முகட்டிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்களாம்.

Image Courtesy

8000 பேர் :

8000 பேர் :

வீரர்களும் அவர்களின் கையில் சிக்கி சித்திரவதைக்கு உள்ளாவதை தற்கொலை செய்து கொள்வதே மேல் என்று நினைத்திருந்திருக்கிறார்கள்.

இதைத் தவிர அங்கு வசித்த பெண்களையும் அமெரிக்கப் படையினர் மானபங்கப் படுத்தியிருக்கிறார்கள்.

அதனால் பயந்தே பல பெண்களும் இந்த தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த சம்பவத்தில் கிட்டதட்ட எட்டாயிரம் பேர் வரை ஈடுபட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Image Courtesy

வறுத்த மனித உடல்கள் :

வறுத்த மனித உடல்கள் :

நீங்கள் சரியாகத்தான் படித்திருக்கிறீர்கள்..... வறுக்கப்பட்ட மனித உடல்களைப் பார்க்க வேண்டுமானால் இத்தாலிக்கு அருகில் இருக்கக்கூடிய போவெஜ்லியா என்ற தீவிற்கு செல்ல வேண்டும். ப்ளேக் நோயினால் கொத்து கொத்தாக மனிதர்கள் மடிந்த காலம் அது, ரோமானியர்கள் இந்த நோய்க்கு பெரிதும் அஞ்சினார்கள்.

அந்த நோய்க்கு மருத்துவமும் இல்லை என்ற நிலையில் ப்ளேக் நோய் தாக்கினால் கண்டிப்பாக மரணிகக் வேண்டிய நிலைமை.

Image Courtesy

 ஒரு லட்சம் :

ஒரு லட்சம் :

அதோடு இந்த ப்ளேக் நோய் எனப்படக்கூடியது ஒரு வகை தொற்று வியாதி, மிக வேகமாக பிறருக்கு பரவிடும். அதனாலும் பெரிதும் அச்சம் நிலவியது. இதனால் ப்ளேக் நோய் தாக்கியவர்களை எல்லாம் கப்பலில் ஏற்றி இந்த தீவில் இறக்கிவிட்டார்கள் அதோடு இந்த நோய் பரவக்கூடாது என்பதற்காக அந்த இடத்தை நெருப்பு மூட்டி விட்டிருக்கிறார்கள். அந்த நெருப்பில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் ஒரு லட்சத்தை தாண்டிடும்.

Image Courtesy

டாக்‌ஷா:

டாக்‌ஷா:

மர்மங்கள் நிரம்பிய ஒரு தீவு இது. பார்க்க மிகவும் அழகாக சுற்றுலா தளமாக இருக்க வேண்டிய ஓரிடம். டென்மார்க்கில் இருக்கக்கூடிய டாக்‌ஷா கிட்டத்தட்ட பன்னிரெண்டு ஏக்கர் சுற்றளவு கொண்டது. யார் பார்த்தாலும் வில்லா கட்டி அதனை சுற்றுலாதளமாக்கிவிடலாம் என்பார்கள்.

Image Courtesy

கொல்லப்படுவாய் :

கொல்லப்படுவாய் :

இந்த இடத்திற்கு சொந்தக்காரரும் மிகக் குறைந்த விலையில் இந்த இடத்தினை விற்க முன் வருகிறார், அப்போதும் யாருமே வாங்க முன்வரவில்லை.காரணம், இங்கு செல்பவர்கள் எல்லாம் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்களாம். இதன் பின்னால் பல்வேறு கட்டுக்கதைகள் சொல்லப்படுகின்றன. முதலில் இந்த இடத்தில் நாஜிப்படையினர் வாழ்ந்து வந்தார்கள் என்றும், இந்த இடம் மயானமாக இருந்தது என்றும் சொல்லப்படுகிறது.

Image Courtesy

சிறைக்கைதிகள் :

சிறைக்கைதிகள் :

இந்த இடத்திற்கு டெட்மேன் ஐலேண்ட் என்றே பெயர். சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் நோய்வாய்பட்டால் அவர்களுக்கு சிகிச்சையளிக்காமல் இந்த இடத்திற்கு கொண்டு வந்து விட்டுவிடுவார்களாம்.

இங்கே சிறைக்கைதிகளை கப்பலில் ஏற்றி வந்து விடும் அளவிற்கு மிகப்பெரிய கூட்டத்தை இங்கே விட்டுச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் உணவின்றி, நோய் முற்றி இங்கேயே இறந்து விட்டார்களாம்.

Image Courtesy

200 ஆண்டுகள் :

200 ஆண்டுகள் :

எவ்வளவு சிறைக்கைதிகள் இப்படி கொண்டு வந்து விடப்பட்டார்கள் என்கிற சரியான கணக்கு இல்லை. ஆனால் இந்த சம்பவம் 200 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக சொல்லப்படுகிறது.

பொதுமக்கள் யாருக்குமே இங்கே சென்று வர அனுமதியில்லை வேண்டுமானால் அரசாங்கத்திடமும் போலீசாரிடமும் சிறப்பு அனுமதி பெற்று செல்லலாம். ஆனாலும் அப்படியாரும் செல்வதில்லையாம் ஏனென்றால் அங்கே பேய் நடமாட்டம் அதிகமிருக்கும் அங்கே சென்றால் மரணம் நிச்சயம் என்று நம்பப்படுவதால் மக்கள் யாருமே செல்வதில்லையாம்.

Image Courtesy

தண்டனை :

தண்டனை :

பாலியல் குற்றங்கள் செய்தவர்கள், கொலை குற்றவாளிகள் போன்றவர்களை எல்லாம் இங்கே வந்து விட்டிருக்கிறார்கள். அப்போது இங்கிருந்த மக்கள் அவர்களை சித்திரவதை செய்வதும், பழிக்குப் பழியாக அவர்களை சிறைக்கைதிகள் தாக்குவதும் நடந்திருக்கிறது.

ஒருவரை மாற்றி ஒருவர் தாக்கிக் கொண்டு மரணித்திருக்கிறார்கள். அங்கு நிகழ்ந்தவற்றில் ஒன்று கூட இயற்கை மரணமே இல்லையாம்.

Image Courtesy

பொம்மைகள் :

பொம்மைகள் :

டான் ஜூலியன் என்பவர் 1950 ஆம் ஆண்டு பொழுது போக்க லாஸ் மெனேகாஸ் என்ற தீவிற்கு சென்றிருக்கிறார். அப்போது சிறிய பெண் அல்லது குழந்தையின் சத்தம் கேட்டிருக்கிறது . அந்தப் பெண்ணை தேடிச் செல்லும் போது தான் அந்தப் சிறுமி பல ஆண்டுகளுக்கு முன்பே அங்கு தண்ணீரில் மூழ்கிற இறந்தவள் என்றும் தன்னிடம் பேசியது அந்த குழந்தையின் ஆவி என்றும் தெரிகிறது. உடனே அந்த தீவு முழுவதும் அந்த குழந்தைக்கு பிடித்தமான பொம்மைகளை வாங்கி குவிக்கிறார்.

அதன் பிறகு சற்று அமைதியாக எவ்வித சர்ச்சைகளும் இல்லாமல் இருந்த தீவில் இந்த சம்பவம் நடைப்பெற்று சரியாக 60 வருடங்கள் கழித்து டான் ஜூலியானாவும் அதே தீவில், அந்த குழந்தை மூழ்கி இறந்த அதே இடத்தில் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கிறார். அதன் பிறகு அங்கு மர்மங்கள் நிறைந்ததாகவே இருக்கிறதாம்.

Image Courtesy

அல்காட்ரஸ் :

அல்காட்ரஸ் :

அமெரிக்காவின் மிகவும் ஆபத்தான அதே சமயம் கொடூரமான செயல்களை செய்த குற்றவாளிகள் அல்கார்ஷா தீவில் இருக்கும் சிறையில் அடைத்து விடுவார்களாம் இங்கிருந்து தப்பிப்பது அவ்வளவு எளிதானது கிடையாது.

அந்த சிறை வெயில் காலத்திலும் அதிக குளிருடன் இருக்குமாம், மர்மமான சத்தங்கள் காரணமின்றி எப்போதும் கேட்டுக் கொண்டேயிருக்குமாம். அந்த பயத்திலேயே சிறைக்கைதிகள் இறந்துவிடுவார்கள் என்கிறார்கள்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Haunted Death Places Around the World

Haunted Death Places Around the World
Story first published: Saturday, March 24, 2018, 14:58 [IST]
Desktop Bottom Promotion