Just In
- 3 hrs ago
நீங்கள் செய்யும் இந்த செயல்கள் சனிபகவானின் கோபத்தை அதிகரிக்கும் தெரியுமா?
- 5 hrs ago
ஆண்குறி வடிவில் பீச்சில் கரை ஒதுங்கிய அரிய வகை மீன்கள்… எங்கு தெரியுமா?
- 5 hrs ago
போரடிக்கிற செக்ஸ் வாழ்க்கையை மீண்டும் சூப்பராக மாத்துறது எப்படினு தெரியுமா?
- 5 hrs ago
2020-இல் இந்த ராசிக்காரங்க தான் அதிக பணப்பிரச்சனையை சந்திப்பாங்களாம்... தெரியுமா?
Don't Miss
- Sports
பிளாஷ்பேக் 2019 : உடைந்து போய் அழுத இளம் வீரர்.. ஆப்பு வைத்த ஐபிஎல்!
- News
குடியுரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. மேற்கு வங்கத்தில் 5 ரயில்கள், 15 பஸ்கள் தீ வைத்து எரிப்பு
- Technology
பிளிப்கார்ட்: பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் சியோமி பேண்ட் 3-ஐ.!
- Finance
பிரதமர் மோடி பொய் சத்தியம் பண்ணி விட்டார்.. மன்மோகன் சிங் சாடல்!
- Movies
விஜய் டிவி புகழ் திவாகருக்கு… டும் டும் டும்.. அபியை மணந்தார்!
- Automobiles
ஆரஞ்ச் நிறத்தில் ராயல் எண்ட்பீல்டு 350எக்ஸ் பிஎஸ்6 மாடல்... அடுத்த ஆண்டு அறிமுகம்
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வாழ்க்கையில் நீங்கள் நினைத்த உயரத்தை அடைய இந்த கார்ய சித்தி மந்திரத்தை கூறி ஆஞ்சநேயரை வழிபடுங்கள்
அனைத்து வயதினருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு கடவுள் என்றால் அது ஆஞ்சநேயர்தான். இராமனின் பக்தனான வாயுபுத்திரன் அனுமன் செய்த சாகசங்களுக்கும், அவரின் ஆற்றலுக்கும் எல்லையே இல்லை. இன்றும் இவர் உயிரோடுதான் இருக்கிறார் என்று நம்புபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். கடவுள்களிலேயே மிகவும் எளிதில் மனமிறங்கி அருள்புரியும் கடவுள் என்றால் அது அனுமன்தான்.
பொதுவாக சாதாரணமாக ஆஞ்சனேயரை வணங்கினாலே அவர் எளிதில் மனமிறங்கிவிடுவார். அதிலும் அவருக்கு பிடித்த முறையில் வழிபடும்போது உங்கள் மீதான அவரின் கருணை பன்மடங்கு அதிகரிக்கும். ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்த நிறம் சிவப்புதான். எனவே அவரை வழிபடும்போது சிவப்பு வண்ண பூக்களை கொண்டு வழிபடுங்கள். மந்திரங்கள் என்று வரும்போது பல ஆஞ்சநேய மந்திரங்கள் இருந்தாலும் ஒருசில மந்திரங்கள் ஆஞ்சநேயரை அதிகம் ஈர்க்கும். அதில் ஒன்றுதான் கார்ய சித்தி மந்திரம். அந்த மந்திரத்தின் மகிமையையும், அர்த்தத்தத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

வெற்றிகளை வழங்கும் கார்ய சித்தி மந்திரம்
மிகசக்தி வாய்ந்த கடவுள்களில் ஒருவரான அனுமன். வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் உயரத்தை விட அதிகளவு உயரத்தை அடைய ஆஞ்சநேயரைதான் வணங்கவேண்டும். இந்த மந்திரங்கள் கூறி ஆஞ்சநேயரை வழிபடுவது வளர்ச்சி மட்டுமின்றி தன்னிறைவு, ஒழுக்கம் போன்றவற்றையும் வழங்கும். அனுமனே மிகப்பெரிய பக்தனாக இருப்பதால் தன்னுடைய பக்தர்களின் வேண்டுதல்களை எளிதில் புரிந்துகொண்டு நிறைவேற்றுவார்.

கார்ய சித்தி பொருள்
கார்ய என்பதன் பொருள் முயற்சி சித்தி என்பதன் பொருள் தன்னிறைவு அல்லது வெற்றி. ஒரு முயற்சியில் நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்று விரும்பினால் உங்கள் முயற்சியுடன் சேர்த்து இந்த மந்திரத்தையும் கூறுவது உங்கள் வெற்றியின் வாய்ப்பை அதிகரிக்கும். உங்களின் ஒவ்வொரு முயற்சிக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட கார்ய சித்தி மந்திரம் உள்ளது. இந்த மந்திரத்தை கூற சிறப்பான நாள் என்றால் அது சனிக்கிழமைதான்.

எப்படி கூற வேண்டும்?
உங்கள் முயற்சிகளை மேலும் கடுமையாக்கவும், வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கவும் சனிக்கிழமைகளில் இந்த மந்திரத்தை ஆஞ்சநேயர் முன் அமர்ந்து கூறுங்கள். அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லவும். ஆஞ்சநேயர் முன் அமர்ந்து இந்த மந்திரத்தை 108 முறை கூறவும். இதனை 40 நாட்கள் தொடர்ந்து செய்யவும். இவ்வாறு தொடர்ந்து செய்யும்போது நீங்கள் சனிக்கிழமைகளில் அதிக வெற்றியை பெறுவதை நீங்களே உணர்வீர்கள்.

கார்ய சித்தி மந்திரம் 1
முதல் மந்திரமான இது உங்கள் எதிரிகளை சமாளித்து வெற்றியை ஈட்ட உதவும். உங்களுக்கு தொடர்ந்து யாரேனும் தொல்லை கொடுத்து வந்தால், அந்த தொல்லையிலிருந்து தப்பிக்கவும், அவர்களை சமாளிக்கவும் இந்த மந்திரத்தை கூறி வழிபடுங்கள்.
" த்வாமாஸ்மின் கார்ய நிர்யோக - பிரமாணம் ஹரி சத்மா - ஹனுமான் யத்னமாஸ்தாய - துக்க காய கரூ பவா "
MOST READ: தன் வாயாலேயே தங்களை டேமேஜ் செய்துக் கொண்ட பிரபலங்கள்- 2018 #Top10

மந்திரத்தின் பொருள்
இந்த மந்திரத்தை ஒருபோதும் உங்கள் எதிரிகளை அழிக்க வேண்டும் என்று உபயோகிக்காதீர்கள். அந்த சூழ்நிலையிலிருந்து தப்பித்து வெளியேற மட்டும் வேண்டுங்கள் மீதியை ஆஞ்சநேயர் பார்த்துக்கொள்வார். சுயநலமில்லாமல் நீங்கள் செயல்படும்போது நீங்கள் வெற்றியை நெருங்கிவிடுவீர்கள், உங்கள் எதிரிகள் உங்கள் பாதையிலிருந்து தானாக விலகிவிடுவார்கள்.

கார்ய சித்தி மந்திரம் 2
உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து பல தடைகள் இருக்கும்போது நமது வெற்றிக்கு பல பிரச்சினைகளும், இடையூறுகளும் இருக்கும். எப்போது நீங்கள் உங்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் தவிக்கிறீர்களோ அப்போது இந்த மந்திரத்தை கூறி ஆஞ்சநேயரை வழிபடுங்கள்.

மந்திரத்தின் சிறப்புகள்
இந்த மந்திரத்தின் கூடுதல் சிறப்பு என்பது இந்த மந்திரத்தை முதல் முதலாக கூறியது சீதைதான். இராவணன் பிடியில் சிக்கியிருக்கும்போது வாழ்க்கையின் முக்கியமான இடத்தில் தடைபட்ட சீதாதேவி இராமபிரானை நினைத்து இந்த மந்திரத்தை கூறினார். இந்த மந்திரத்தை கூறிய சில நாட்களில்தான் இராமயண போர் ஏற்பட்டு இராவணன் அழிக்கப்பட்டு சீதை விடுவிக்கப்பட்டார்.
" அசாத்ய சாதக ஸ்வாமின் - அசாத்யம் தவா கிம் வடா - ராம தூதா கிருப சிந்தோ - மட் கார்யம் சாத்ய பிரபோ "

கார்ய சித்தி மந்திரம் 3
உங்களிடம் இருக்கும் பணபலம், அறிவுபலம் , ஆள்பலம் என அனைத்தும் கொடுக்க முடியாத வெற்றியை உங்களுக்கு தெய்வ பழம் கொடுக்க இயலும். நீங்கள் செய்யும் அனைத்து முயற்சிகளுக்கும் அனுமனின் அனுகிரகம் கிடைக்க இந்த மந்திரத்தை கூறி வழிபடுங்கள். இந்த மந்திரத்தை கூறி உங்கள் முயற்சிகளை செய்யும்போது அனுமனே உங்கள் உடனிருப்பது போன்ற தன்னம்பிக்கை உங்களுக்குள் எழும்.
" அரே டூ சல் சல் ஹனுமன் சல் ஆர் நா சாலே டு துஜஹே ராம்கி ஆன் "