For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆஞ்சநேயருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த போட்டி

ஆஞ்சநேயர் மகாபாரதத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறார். ஒருமுறை அர்ஜுனன் தன் திறமை மீது கொண்ட கர்வத்தால் ஆஞ்சநேயரிடம் போட்டியில் தோற்றான்.

|

" வில்லுக்கோர் விஜயன் " என்னும் கூற்று உள்ளது. அதாவது வில்வித்தை என்றாலே அது அர்ஜுனன்தான் என்று உலகறியும். ஆனால் அர்ஜுனனும் ஒருவரிடம் போட்டியில் தோற்றுள்ளான் தெரியுமா?. இல்லை நீங்கள் நினைப்பது போல் கர்ணனிடம் அல்ல. அர்ஜுனனை போட்டியில் வென்று அவனின் கர்வத்தை அடக்கியது வாயுபுத்திரன் ஆஞ்சநேயன் ஆவார்.

Mahabharata

ஆம், மகாபாரதத்திலும் ஆஞ்சநேயரின் பங்களிப்பு உள்ளது. போரில் அர்ஜுனனின் ரதத்திற்கு பாதுகாப்பு அரணாய் இருந்தது கிருஷ்ணர் மட்டுமல்ல ஆஞ்சநேயரும்தான். இவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த போட்டியின் முடிவு சுவாரஸ்யமானது. ஏனெனில் அர்ஜுனனை போலவே ஆஞ்சநேயரும் தோல்வியடைந்தார். அவர்கள் இருவரின் தோல்விக்குமே காரணமாய் அமைந்தது அவர்களின் கர்வம்தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அர்ஜுனனின் சந்தேகம்

அர்ஜுனனின் சந்தேகம்

அர்ஜுனன் ஒருமுறை வனத்திற்குள் சென்றுகொண்டிருந்தபோது அங்கே ஒரு வானரம் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தது. அந்த வானரம் வேறுயாருமல்ல இராமதூதன் ஆஞ்சநேயர்தான். தனது பலநாள் சந்தேகத்தை அவரிடம் கேட்க எண்ணி அவரை அழைத்தான். தியானம் கலைந்து கண்விழித்த ஆஞ்சநேயர் தன் எதிரில் நிற்பது அர்ஜுனன்தான் என்பதை பார்த்த மாத்திரத்திலியே கண்டறிந்து விட்டார். " என் தியானத்தை ஏன் கலைத்தாய்? " ஆஞ்சநேயர் கேட்க, " வானரரே என் சந்தேகத்திற்கு பதிலளியுங்கள். இராமர்தான் மிகப்பெரிய வில்வீரன் ஆயிற்றே பின் ஏன் இலங்கைக்கு தன் அம்புகளால் பாலம் கட்டாமல் வானரங்களின் உதவியை நாடினார் ". என்று கேட்டான்.

ஆஞ்சநேயரின் பதில்

ஆஞ்சநேயரின் பதில்

ஆஞ்சநேயர் சிரித்துவிட்டு, " வில் வீரனே என் இராமனால் அம்புகளால் பாலம் கட்ட இயலாமல் இல்லை. அம்பு பாலம் என் ஒருவனின் பாரத்தையே தாங்காது அப்படி இருக்கும்போது எங்கள் வானரப்படை எவ்வாறு அதன்மேல் பயணிக்க இயலும். " என்று பதில் கூறினார். இதனை கேட்ட அர்ஜுனன் நகைத்தான்.

அர்ஜுனனின் கர்வம்

அர்ஜுனனின் கர்வம்

அர்ஜுனனின் நகைப்பிற்கு காரணம் கேட்ட ஆஞ்சநேயரிடம், " என்னால் மிக உறுதியான பாலத்தை அம்புகளாலாலேயே கட்ட இயலும், அப்படி என்றால் உன் இராமனை விட நான்தானே சிறந்த வில்வீரன் " என்று கேட்டார். அர்ஜுனனின் இந்த பதிலை கேட்டதும் ஆஞ்சநேயருக்கு கடுங்கோபம் உண்டாயிற்று.

போட்டி

போட்டி

" அப்படி நீதான் பெரிய வில்வீரன் என்றால் இப்பொழுதே இங்கு ஒரு வலிமையான அம்பு பாலத்தை எழுப்பி காட்டு " என்று ஆஞ்சநேயர் கோபமாய் கூறினார். அர்ஜுனன்தான் காண்டீவதாரியாயிற்றே அவனும் உடனும் அதற்கு ஒப்புக்கொண்டான். " போட்டி என்றால் பந்தயம் வேண்டாமா?" என்று அர்ஜுனன் கேட்க, " நீ வெற்றி பெற்றால் நான் உனக்கு வாழ்நாள் முழுவதும் அடிமையாய் இருக்கிறேன். அதுவே நான் வெற்றிபெற்றால் நீ என்ன செய்கிறாய் " என்று ஆஞ்சநேயர் கேட்டார். தன் வில்லாற்றல் மீதிருந்த அதீத நம்பிக்கையால் " நான் தோற்றுவிட்டால் இப்பொழுதே இங்கு அக்னி வளர்த்து என் உயிரை மைத்துக்கொள்கிறேன்" என்று கூறினான்.

அர்ஜுனனின் தோல்வி

அர்ஜுனனின் தோல்வி

அர்ஜுனன் தன் காண்டீவத்தை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அம்புகளால் ஆன பாலம் ஒன்றை கட்டினான். ஆஞ்சநேயரை சோதித்து பார்க்க சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். ஆஞ்சநேயர் இராமநாமத்தை கூறிவிட்டு அந்த பாலத்தின்மீது கால் வைத்தார். வைத்த நொடியிலியே பாலம் நொறுங்கி விழுந்தது. பார்த்தாயா என் இராமனின் சக்தியை என ஆஞ்சநேயர் கூற அர்ஜுனன் தன் தோல்வியை ஒப்புக்கொண்டான். எனவே அக்னி வளர்த்து அதில் குதிக்க தயாரானான்.

முனிவரின் யோசனை

முனிவரின் யோசனை

அர்ஜுனன் உயிரை விட எத்தனித்த போது அங்குவந்து சேர்ந்தார் ஒரு வயதான முனிவர். அவர் அர்ஜுனனை தடுத்து தற்கொலைக்கான காரணத்தை கேட்டபோது அர்ஜுனன் நடந்ததை கூறினான். முனிவர் அர்ஜுனனை தடுத்து நீங்கள் இருவர் மட்டும் போட்டி போட்டால் எப்படி அது நியாயமான போட்டியாக இருக்க முடியும் சாட்சி வேண்டுமல்லவா என்று கூறினார். ஆஞ்சநேயரும் அதனை ஏற்றுக்கொள்ள முனிவரை சாட்சியாக கொண்டு மீண்டும் போட்டி நடத்த முடிவெடுக்கப்பட்டது.

மீண்டும் போட்டி

மீண்டும் போட்டி

மீண்டும் அர்ஜுனன் தன் காண்டீவத்தை கொண்டு அம்புப்பாலம் கட்டினான். ஆனால் இம்முறை கட்டும் முன் கிருஷ்ணரை மனதில் நினைத்துக்கொண்டு கட்டினான். பின்னர் ஆஞ்சநேயர் அந்த பாலத்தின் மீது ஏறினார், பாலம் அப்படியே இருந்தது. தன் மொத்த பலம் கொண்டு அந்த பாலத்தில் குதித்தார் ஆனால் பாலத்திற்கு எதுவுமே ஆகவில்லை. அர்ஜுனன் மகிழ்ச்சியில் பார்த்தாயா என் கிருஷ்ணனின் மகிமையை என்று கூறினான்.

ஆஞ்சநேயரின் குழப்பம்

ஆஞ்சநேயரின் குழப்பம்

சென்ற முறை எளிதாக உடைக்க முடிந்த பாலத்தை இம்முறை ஏன் அசைக்கக்கூட முடியவில்லை என்று ஆஞ்சநேயர் குழம்பினார். முனிவரிடம் வந்து நீங்கள் யார் என்று சந்தேகத்துடன் கேட்க முனிவர் வேடத்தில் இருந்த கிருஷ்ணர் தன் உண்மையான உருவத்தை காட்டினார். கிருஷ்ணரிடம் தன்னால் ஏன் பாலத்தை உடைக்க இயலவில்லை என்று வினவினார் ஆஞ்சநேயர்.

கிருஷ்ணரின் பதில்

கிருஷ்ணரின் பதில்

நீங்கள் இருவருமே இந்த போட்டியில் தோற்கவில்லை. தோற்றது உங்களுக்குள் இருந்த கர்வம்தான் என்று கூறினார். முதல்முறை போட்டியின்போது அர்ஜுனன் தன் திறமை மீதிருந்த கர்வத்தால் என்னை மறந்துவிட்டு பாலத்தை கட்டினான். அதேபோல நீ இரண்டாவது முறையின் போது முதல்முறையே எளிதாக வென்றுவிட்டோமே இம்முறையும் வென்றுவிடலாம் என்ற கர்வத்தில் கடவுளை நினைக்காமல் போட்டியில் கலந்துகொண்டாய் அதனால்தான் உன்னால் வெற்றிபெற இயலவில்லை என்று கூறினார்.

கதை சொல்லும் நீதி

கதை சொல்லும் நீதி

அர்ஜுனனை மிஞ்சிய வில்லாளன் இல்லை, அதேபோல ஆஞ்சநேயரின் பலத்தை பற்றி உலகமே அறியும். இருப்பினும் தான் என்ற எண்ணம் வந்துவிட்டதால் அவர்கள் இருவருமே தோல்வியை தழுவினர். மனிதனுக்கு எவ்வளவுதான் திறமையும், பலமும் இருந்தாலும் கடவுளின் துணையும் தேவை இல்லையனில் இறுதியில் அழிவே மிஞ்சும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Hanuman and Arjuna defeat each other?

Hanuman comes not only in Ramayana. He plays a vital role in Mahabharata also. Even he defeats Arjuna once in Mahabharata because of Arjuna's ego. Later Hanuman also lost because of his ego.
Desktop Bottom Promotion