For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கனவில் இந்த பொருட்களைப் பார்த்தால் நோய் வருமாம்...

By Jaya Lakshmi
|

கனவு காணாத மனிதர்களே இல்லை. கனவுகள் சிலருக்கு பயத்தையும், பலருக்கு பரவசத்தையும் தருகிறது. கனவு மூலமாக ஆழ்மனதில் உள்ள சிக்கல்களைக் கண்டறிய வாய்ப்பு உள்ளது என்றும் அதன் மூலம் தீர்வு காணமுடியும் என்றும் பிரபல மனநல ஆராய்ச்சியாளர் சிக்மண்டு ஃபிராய்டு செய்த ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இரவில் உறக்க நிலையில் கனவு காணுவதன் மூலம் மூளை வளர்ச்சியடைகிறதாம். மனிதர்கள் மட்டுமல்ல, நாய்களும் பூனைகளும் கூட கனவு காண்கிறதாம்.

நாம் கொஞ்சமும் நினைத்துப் பார்க்காத, எதிர்பார்க்காத கனவுகள் தோன்றுவதே உண்மையான கனவுகள் ஆகும். அப்படிப்பட்ட கனவுகளுக்கு உரிய பலன்களைத் தான் சொப்பன சாஸ்திரம் சொல்கிறது. இரவின் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருடத்திலும், இரண்டாவது ஜாமத்தில் கண்ட கனவு எட்டு மாதத்திலும், மூன்றாம் ஜாமத்தில் கண்ட கனவு நான்கு மாதங்களிலும், விடியும் வேளையில் அதாவது நான்காவது ஜாமத்தில் காணும் கனவு பத்துநாள் அல்லது ஒரு மாதத்துக்குள்ளும் பலிக்கும் என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது.

good dreams and bad dreams

எல்லோரும் கனவுகளை கலர் கலராக வருவதில் சிலருக்க கருப்பு வெள்ளையில் வரும் ஏன் சிலருக்கு மட்டும் கனவுகள் கருப்பு வெள்ளையாகவும், சிலருக்கு வண்ணமாகவும் வருகின்றன என்பதை யாராலும் கூற முடியவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1.மரணம் கனவில் வந்தால் நன்மை

1.மரணம் கனவில் வந்தால் நன்மை

இறந்துபோன பெற்றோர், முன்னோர்கள் கனவில் வந்தால் கனவு கண்டவருக்கு விரைவில் வர இருக்கும் ஆபத்து அல்லது கஷ்டங்களைப் பற்றி சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்தார்கள் என்று அறிந்து கொள்ளலாம். மரணமடைவது போல கனவு கண்டால் அதை நினைத்து பயப்பட வேண்டாம் நன்மைதான். உறவினர் ஒருவர் இறந்து விட்டதுபோல் கனவு காண்பது, அவருடைய துன்பங்கள் தீரும். நண்பன் ஒருவன் இறந்து போனது போல் கனவு காண்பவனுக்கு, வெகு விரைவில் நற்செய்தி ஒன்று வருமாம்.

2.குழந்தைகள் மரணம்

2.குழந்தைகள் மரணம்

குழந்தைகள் இறப்பதுபோல் கனவு காண்பது அவருக்கு வரப்போகின்ற பேராபத்து ஒன்றைக் குறிப்பிடும். தன்னுடைய மனைவி இறந்துவிட்டாற்போல் கனவு கண்டால், மனைவிக்கு இரட்டைக் குழந்தை பிறக்க இருப்பதைக் குறிப்பிடும். இறந்துபோன மனைவி, மேலுலகத்தில் மகிழ்ச்சியாக இருப்பது போல் கனவு கண்டால் வாழ்க்கை நிம்மதியாக அமையும்.

3.கனவில் சண்டை

3.கனவில் சண்டை

சண்டை சச்சரவுகளில் சிக்கிக் கொண்டு தவிப்பதுபோல் கனவு கண்டால் அவரது வாழ்க்கை அமைதியானதாக எல்லோருடனும் சுமுக உறவு கொண்டதாக அமையும். சண்டை நடைபெறும் இடத்தில் பிறர் அடிப்பது போன்று கனவு கண்டால் அவர்களுக்கு விரோதிகளே இல்லை என்று கூறலாம். பகைவர் இருப்பின் அவர்களும் பகை மறந்து நண்பர்களாக மாறுவார்கள். தனக்கு அபாயமும் தொல்லைகளும் ஏற்படுவதாக கனவு கண்டால் பலன் நேர்மாறாக நிகழும். அவரது வாழ்க்கை மகிழ்ச்சியானதாக நிம்மதியானதாக மாறும். தான் அடிபட்டு காயமடைந்ததாகக் கனவு கண்டால் பொருள் அபிவிருத்தி ஏற்படக்கூடும். அதே நேரத்தில் கத்தி போன்ற ஆயுதங்களால் அடிபட்டு காயமடைந்ததாக கனவு காண்பது நல்லதல்ல பழி வந்து சேரும்.

4.சாமி தரிசனம்

4.சாமி தரிசனம்

கோயிலைக் கனவில் காண்பது நன்மையான பலன்களைத் தரும். செய்யும் வியாபாரம் முன்னேறும். புனித யாத்திரைக்கு செல்லப்போவதை உணர்த்துகிறது. ஆலயத்தில் நுழைந்து இறைவனை வழிபடுவதுபோல் கனவு வந்தால் ஈடுபடும் செயல்களில் முதலில் சில முட்டுக்கட்டைகள் எதிர்ப்படும். ஆனாலும் தெய்வத்தின் அருளால் முடிவில் செயல் நன்மையாகவே முடியும். அதே நேரத்தில் பாழடைந்த அல்லது தெய்வ விக்ரகம் இல்லாத கோயிலைக் காண்படு நேர்மாறான பலன்களைத் தரும். முயற்சிக்கும் செயல்களில் தோல்வியும் பொருள் நஷ்டமும் ஏற்படும்.

MOST READ: இந்த 6 குணங்கள் உள்ளவர்கள் உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியை அழித்து விடுவார்களாம் தெரியுமா?

5.அரசியல்வாதிகள் தொடர்பு

5.அரசியல்வாதிகள் தொடர்பு

அரசியல்வாதிகள், பதவியில் உள்ளவர்களுடன் அறிமுகம் ஏற்படுவதாகக் கனவு கண்டால், சமூகத்தில் அந்தஸ்தும் மதிப்பும் உண்டாகும். அரச குடும்பத்தாருடன் பழகுவதாக கனவு வந்தால், நண்பர்கள் மூலமாக பொருள் உதவி கிடைக்கும்.மணமாகாத இளம்பெண் இந்த கனவைக் கண்டால், அவளை திருமணம் செய்யப்போகும் மாப்பிள்ளை அவள் குடும்பத்தைவிட பன்மடங்கு வசதியுடன் இருப்பான் என்று கூறலாம். தேவலோகப் பெண்களை ஆண்கள் கனவில் கண்டால், எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். மணமான மங்கையர் இந்த கனவைக் கண்டால் பொருள் வரவு உண்டு. தன்னைவிட வயதில் மூத்தவர்கள் அல்லது மகான்கள் தன்னை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்வதாக கனவு கண்டால், தொழிலில் உயர்வும் பொருள் சேர்க்கையும் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் வரும்.

6.கனவில் விருந்து

6.கனவில் விருந்து

கனவில் ஆரஞ்சுப் பழத்தைக் காண்பவருக்கு, எதிர்பாராத பொருளிழப்பு ஏற்படும். நோய் அல்லது விபத்தில் உடல் காயம் உண்டாகலாம். வீண் பழி சுமத்தப்பட்டு பெயர் கெடவும் கூடும். கனவில் இஞ்சியைக் கண்டால், நோய்களால் பாதிப்பு ஏற்படக்கூடும்.

விருந்து படையல் போட்டு தனியாக சாப்பிடுவதாக கனவு கண்டால் பிரிவு ஏற்படும். தொழில் நஷ்டம் ஏற்படும். குடும்பத்தில் சச்சரவு அதிகமாகும். பலருடன் சேர்ந்து விருந்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் உயர்வுதான். திருமணம் ஆகாதவர்கள் இந்தக் கனவைக் கண்டால் விரைவில் திருமணம் நடைபெறும். திருமணம் ஆனவர்கள் விருந்து சாப்பிடுவதாகக் கனவு கண்டால் விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

7.கனவில் எலும்பு

7.கனவில் எலும்பு

கனவில் எலும்பைக் காண்பது விசேஷம். சதைத்திரள் ஒட்டியதாக உள்ள எலும்பைக் கண்டால் விரைவில் பணக்காரர் ஆவார். மனிதரின் எலும்பைக் கண்டால் முன்னோர்கள் வைத்துச் சென்ற சொத்து அவரை வந்தடையும். பற்கள் உடைவது அல்லது விழுவது போல கனவு கண்டால் ஒருவர் தங்களைப் பயன்படுத்திக்கொண்டிருப்பதைக் குறிக்கும். தான் ஓடிக் கொண்டிருப்பது போல் கனவு கண்டால் தொழில் அபிவிருத்தியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வீட்டுச் சுவரில் அல்லது கூரையில் நூலாம்படை அப்பியிருப்பது போல கனவு கண்டால், குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படும்.

8.கனவில் தண்ணீர்

8.கனவில் தண்ணீர்

கனவில் கடலைக் காண்பவர்கள், சிறிது முயற்சி செய்தால் வெளிநாடுகளுக்குப் போவதற்கான வாய்ப்பு எளிதாக கிடைக்கும். அயல் தேசத்தாருடன் வியாபாரத் தொடர்பு ஏற்பட்டு வருமானம் அதிகரிக்கும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். கனவில் கிணற்றைக் காண்பது நல்லதாகும். மணம் ஆகாதவர்களுக்கு மணமாகும். மணம் ஆனவர்களுடைய குடும்பத்தில், வேறு எவருக்கேனும் திருமணம் நடைபெறும். கிணற்றில் இறங்கி நீந்தும்போது, நீருக்கு மேலே தலையைத் தூக்கியிருப்பது போல கனவு கண்டால், முயற்சிகள் வெற்றி பெறும். மாறாக தலை தண்ணீரில் ஆழ்த்தப்பட்டிருந்தால், வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களும் நஷ்டங்களும் உண்டாகும். கிணற்றிலிருந்து தண்ணீரை எடுப்பதுபோல கனவு காண்பது, நினைத்த செயல்கள் இனிதே முடியும் என்று குறிப்பிடும். கீழே விழுவது போல கனவு கண்டால், பொருள் நஷ்டமடைய நேரிடும்.

MOST READ: காலையில் எழுந்ததும் இதையெல்லாம் செய்ய கூடாது..! மீறி செய்தால் ஆபத்து அதிகம்...

9.திருமணம் நடைபெறும்

9.திருமணம் நடைபெறும்

நிச்சய தாம்பூலம் வைபவத்தைக் காண்பது நல்லது. திருமணம் ஆகாதவர்கள் இந்த வைபவத்தைக் கனவில் கண்டால் விரைவில் அவர்களுக்குத் திருமணம் நடைபெறும். கைவளையல் அணிந்திருப்பது போல் கனவு காணும் பெண்களின் மணவிழா வெகுவிரைவில் நடைபெறும். திருமணமானவர்கள் என்றால் அவர்களின் கணவருக்கு வருமானம் அதிகரிக்கும். கைவளையலைக் கண்டெடுத்தாற் போல கனவு கண்டால் எதிர்பாராத வகையில் பெரும் சொத்து வரும். அதே நேரத்தில் வளையல் உடைத்து விட்டாற்போல காண்பது கெடுதல்.

10.ஆபத்தான கனவு

10.ஆபத்தான கனவு

கனவில் சீப்பைக் கண்டால் சிக்கல்கள் உண்டாகும் எனலாம். ஆனால், சீப்பால் தலை வாரிக் கொள்வதுபோல கண்டால், காரிய வெற்றி ஏற்படும். நோயாளி ஒருவர் இந்தக் கனவைக் கண்டால் அவருடைய நோய் விரைவில் குணமாகும். கனவில் நண்டைக் கண்டால் நாம் செய்யும் செயல்களில் இடையூறுகள் ஏற்படும் அந்த செயல் வெற்றி பெறாது கடலில் பயணம் செல்லும் மாலுமிகள் கனவில் நண்டை கண்டால் கப்பலுக்கு பேராபத்தாக முடியும்.

11.சூரிய கிரகணம் கனவு

11.சூரிய கிரகணம் கனவு

பாம்பைக் கனவில் காண்பவர்கள், ஏதோ ஒரு விஷயத்தை எதிர்கொள்ள பயப்படுகிறார்கள் அல்லது தயங்குகிறார்கள் என்பதைக் குறிக்கும். சூரிய கிரகணம் பிடித்திருப்பதாக கனவு காண்பது கெடுதலானது. தொழில் நஷ்டம் ஏற்படும். அதேநேரம், கர்ப்பிணிகள், சூரிய கிரகணங்கள் தண்ணீரில் பட்டு, பிரதிபலிப்பதாக கனவு கண்டால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தையால் எதிர்காலத்தில் குடும்பம் மிகவும் மேலான நிலையை அடையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Good Dream And Bad Dream Predictions

Unravel the unconscious symbols of your dreams and find clarity in waking life. Mountains in our dreams symbolize conquering, overcoming, hard work, willpower, and ascending above petty circumstances.Teeth dreams usually involve your teeth falling out crumbling, decaying, or just simply missing.
Story first published: Tuesday, December 18, 2018, 17:18 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more