For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

போலீசையே அதிரச் செய்த பெண்ணின் வினோதப் புகார்!

தன்னுடைய ஆண் நண்பரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பெண் விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய நாடகம் போலீசாரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

|

காதல் வந்துவிட்டால் கண்ணு மண்ணு தெரியாது என்று சொல்வதை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள். பெண்ணொருவர் தன்னுடைய ஆண் நண்பரை காப்பாற்ற மிகப்பெரிய தில்லாலங்கடி வேலையையே பார்த்திருக்கிறார். காதலர்களுக்கு இடையில் சண்டை வருவது சகஜம் தான்.

தனக்கு மிகவும் பிடித்த தான் நேசித்த காதலனை அடைய என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அந்த முயற்சிகளை எல்லாம் எடுக்க துணிந்து தான் இருக்கிறார்கள். இவர்களில் இந்தப் பெண் சற்று ஓவர் லெவலுக்கே சென்றுவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். இவர் அப்படி என்ன நாடகம் நடத்தினார், இந்த சம்பவம் எப்படி வெளிச்சத்திற்கு வந்தது போலீஸ் இந்த விஷயத்தில் எப்படி நுழைந்தது என்ற திகில் கதையை இப்போது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 புகார் :

புகார் :

மீரட்டில் நிகழ்ந்த உண்மை சம்பவம் இது. கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி குத்துச்சண்டை வீராங்கனையான ஷாலு மற்றும் மல்யுத்த வீராங்கனையான கரிமா ஆகியோர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளிக்கிறார்கள். விளையாட்டில் காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்கள் மீது சோனி குமாரி என்ற பெண் ஆசிட் வீசிவிட்டார் என்று கதறுகிறார்கள்.

சொன்னது போலவே இரண்டு பெண்களின் உடலிலும் ஆசிட் பட்டதற்கான காயங்களும் இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு தீவிரமாகவும் இன்னொரு பெண்ணுக்கு லேசான காயமும் இருக்கிறது.

Image Courtesy

மருத்துவமனை :

மருத்துவமனை :

அவள் மீது ஊற்றினால் காப்பாற்றச் சென்ற என் மீதும் ஆசிட் பட்டுவிட்டது என்றார்கள். உடனடியாக பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களையும் போலீசார் மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அதோடு இந்த சம்பவத்தை சோனி மட்டும் தனியாக செய்யவில்லை அவருடன் அவரது உறவுக்கார தம்பி ஒருவனும் உடனிருந்தான். அவர்கள் இருவரும் சேர்ந்து தான் எங்கள் மீது அமிலத்தை வீசினார்கள் என்று புகார் அளித்திருக்கிறார்கள்.

Image Courtesy

கைது :

கைது :

உடனடியாக சோனி குமாரியையும் அவரது உறவுக்கார தம்பியையும் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். இதோடு விஷயம் முடிந்து விட்டது என்று நினைத்த போது தான் போலீசாருக்கு புதிய திருப்பம் ஏற்படுகிறது.

அதாவது சம்பவம் நடந்த அன்று சோனியின் உறவுக்கார தம்பி வீட்டில் தான் இருந்தான் சம்பவம் நடந்த இடத்தில் இல்லை என்பது உறுதியாகிறது.

இதனை பல சாட்சியங்கள் மூலம் உறுதி செய்து கொண்ட போலீசாருக்கு இதில் வேறு யாரோ சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று சந்தேகம் வலுக்கிறது.

ரகசிய விசாரணை :

ரகசிய விசாரணை :

புகார் அளித்த இந்த பெண்களின் நடவடிக்கையை போலீசார் தொடர்ந்து ரகசியமாக கண்காணிக்கிறார்கள். அதில் ஷாலு அடிக்கடி ஜெயிலுக்கு வந்து யாரையோ சந்தித்து விட்டுச் செல்வதை அறிகிறார்கள்.

விசாரணையில் என் அப்பா கொலை வழக்கில் ஜெயிலில் இருகிறார் அவரைப் பார்க்கத்தான் வருகிறேன் என்றிருக்கிறார்.

காதலன் :

காதலன் :

உடனடியாக ஷாலுவின் தந்தை யார்? அது என்ன கொலை வழக்கு என்று விசாரிக்கிறார்கள். அதில் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சொத்து தகராறில் கொலை நடந்திருக்கிறது. அதில் தண்டனை பெற்ற ஷாலுவின் தந்தை தண்டனைக் காலம் முடிந்து கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதமே விடுதலைப் பெற்றுச் சென்றுவிட்டார் என்பது தெரியவருகிறது.

வேறு யாரை சந்திக்க தினமும் ஜெயிலுக்கு வருகிறார் என்று தேடிய போது தான் சிறையில் இருக்கிற ராஜேஷ் காஹ்ரி என்ற இளைஞனை பார்க்க வருகிறார். அவர் ஷாலுவின் காதலர் என்று தெரியவருகிறது.

சோனி குமாரி :

சோனி குமாரி :

போலீசாருக்கு சந்தேகம் வலுக்கிறது. விசாரனையை துரிதப்படுத்துகிறார்கள். ராஜேஷ், சோனி குமாரியை அத்துமீறி மானபங்கப்படுத்த முயன்றான் என்ற புகாரில் சிறையில் இருக்கிறான். அதே சோனி குமாரி தங்கள் மீது ஆசிட் வீசிவிட்டதாக தான் ஷாலு புகார் அளித்திருக்கிறார்.

இதில் ஏதோ தவறு நடந்திருப்பதாக உணர்ந்த போலீஸ் ஷாலுவையும் அவரது தோழி கரிமாவையும் விசாரிக்கிறார்கள்.

நாடகம் :

நாடகம் :

அதில் அவர்கள் இருவரும் தங்கள் நடத்திய நாடகம் தான் இது என்பதை ஒப்புக் கொள்கிறார்கள். என்னுடைய காதலனை சோனி பொய்ப்புகார் அளித்து சிறையில் தள்ளினாள், அவளுக்கு பாடம் எடுக்கவும், கேஸ் வாபஸ் வாங்கச் சொல்லியும் பலமுறை கேட்டுப் பார்த்தேன் ஆனால அவள் கேட்கவில்லை அதனால் சோனியை மிரட்டுவதற்காகவே இந்த நாடகம் என்றிருக்கிறார்.

ஆசிட் :

ஆசிட் :

பிப்ரவரி 28 ஆம் தேதி அதிகாலை ஷாலு மற்றும் கரிமா இருவருமே பயிற்சி முடிந்து திரும்பும் வழியில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. முதலில் அந்த பயிற்சிப் பள்ளியிலிருந்து அனைவரும் கிளம்பிச் செல்லும் வரையில் காத்திருந்திருக்கிறார்கள். பின்னர் குறைவான வீரியம் கொண்ட அமிலத்தை தரையில் கொட்டியிருக்கிறார்.அந்த அமிலம் பேக்கரிகளில் பாலை புளிக்க வைக்க பயன்படுத்துவது.

கொட்டிய அமிலத்தின் மீது முதலில் ஷாலு விழுந்து உருண்டிருக்கிறார். இந்த சம்பவத்தை நம்ப வைப்பதற்காக நான்கைந்து சொட்டு ஆசிட்டை தோழி கரிமா மீதும் தெளித்திருக்கிறார்.

Image Courtesy

சோனி விடுதலை :

சோனி விடுதலை :

பொய்யான புகார் எனத் தெரிந்ததும் சோனியை விடுதலை செய்தார்கள். இந்த விஷயம் இதோடு முடிந்தது என்று நினைத்தால் சோனியும் ராஜேஷ் மீது பொய்யான புகார் கொடுத்திருப்பாரோ என்ற சந்தேகம் போலீசாருக்கு வலுத்திருக்கிறது. ஏனென்றால் கடந்த 2016 ஆம் ஆண்டு ஷாலு கொடுத்த புகாரினால் சோனியின் சகோதரன் சிறை சென்றிருக்கிறார்.

அந்த கோபத்தில் ஷாலுவை பலிவாங்குவதாய் நினைத்து ஷாலுவின் காதலன் மீது சோனி புகார் கொடுத்திருப்பாரோ என்று போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

விளையாட்டு :

விளையாட்டு :

தனிப்பட்ட காரணங்களுக்காக, ஒருவரை பழிவாங்க வேண்டும் என்று சொல்லி மாறி மாறி புகார் அளிப்பது, அதனை நம்ப வைக்க அமிலத்தை தன் உடலில் ஊற்றிக் கொள்ளக்கூட தயங்காதது ஆகியவை போலீசாரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

தற்போது தவறான தகவலைக் கொடுத்து போலீசாரை திசை திருப்ப முயற்சித்தது உட்பட்ட குற்றங்களுக்காக அந்த பெண்கள் மீது வழக்கு போட்டிருக்கிறார்கள். தங்களுக்கு கொடுக்கிற சுதந்திரத்தை ஒரு சில பெண்கள் இப்படி தவறாக பயன்படுத்திக் கொள்வதால் அது உண்மையிலேயே பாதிப்புகளை சந்திக்கும் பெண்களின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கிடும் என்பதை உணர வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Girl Plays Acid Attack Drama To Safe Her Boy Friend

Girl Plays Acid Attack Drama To Safe Her Boy Friend
Story first published: Saturday, April 21, 2018, 12:14 [IST]
Desktop Bottom Promotion