For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

20 ஆண்களை ஐ-போன் வாங்கித்தர கூறி, அவற்றை விற்று வீடு வாங்கிய பலே கில்லாடி இளைஞி!

20 ஆண்களை ஐ-போன் வாங்கித்தர கூறி, அவற்றை விற்று வீடு வாங்கிய பலே கில்லாடி இளைஞி!

|

ஒரு படத்தில் வடிவேலு... என்னாங்கடா டிசைன், டிசைனா வந்து என்ன ஏமாத்திட்டு போறீங்க... என்று புலம்புவார். அப்படியாக தான் பார்க்க தோன்றுகிறது இந்த சம்பவத்தை. காதலித்து ஏமாற்றுவது ஒரு தனி டிபார்ட்மெண்ட் என்றால்., ஆண்களிடம் அசை வார்த்தை பேசி, நைசாக அவர்களிடம் இருந்து பணம், பொருட்களாக கறப்பது மற்றொரு டிப்பார்ட்மெண்ட்.

சீனாவை சேர்ந்த பிளாகர் பெண்ணின் தோழி ஒருவர் இருபது ஆண்களை ஐ-போன் வாங்கித்தர கூறி ஏமாற்றி, அதை விற்று புதியதாக ஒரு வீடே வாங்கியுள்ளார். இது தான் நோகாம நோம்பு திண்பதின் உச்ச நிலை போல...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குயோபா!

குயோபா!

சீனாவை சேர்ந்த குயோபா (Qiaoba) என்ற புனைப்பெயரில் பிளாக் ஒன்றை இயக்கி வந்த பெண்மணி தனது தோழி க்ஸியோலி (பெயர் மாற்றம் செய்து பதிவிட்டிருப்பதாக கூறியிருந்தார்) என்பவர் இருபது ஆண்களை ஏமாற்றி ஐ-போன் வாங்கி, அவற்றை விற்று வீடு வாங்கியதாக சுவாரசியமான பதிவொன்றை பகிர்ந்திருந்தார்.

ஐ-போன் 7!

ஐ-போன் 7!

க்ஸியோலி என்ற அந்த பெண்மணி தான் பேசி வந்த இருபது ஆண்களிடம் தனக்கு ஐ-போன் 7s வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அழகிய பெண் கேட்டதும், இதன் காதல் கனியும் என்ற நம்பிக்கையிலும் அந்த இருபது முட்டாள் ஆண்கள் கேட்டபடி 1,20,000 யான் (சீனப்பணம்) மதிப்பிலான அந்த ஐ போனை வாங்கி பரிசளித்துள்ளனர்.

புதிய வீடு!

புதிய வீடு!

அந்த இருபது ஆண்கள் வாங்கி கொடுத்த ஐ போன்களை ஏறத்தாழ சீன பணமதிப்பில் 25 லட்சங்களுக்கு விற்றுள்ளார் க்ஸியோலி. தனக்கு கிடைத்த இந்த பணத்தை வைத்து புதியதாக ஒரு வீடும் வாங்கியதாக தனது பிளாக் பதிவில் குயோபா குறிப்பிட்டுள்ளார். மேலும், இப்போது இணையத்தில் இந்த செய்தியை பதிவு செய்த பிறகு, இதுக்குறித்து அறிந்தால் அந்த ஆண்கள் என்ன எண்ணுவார்கள் என்பது பற்றி தெரியவில்லை என்றும் தனது பதிவில் குயோபா கூறியிருந்தார்.

மெய்யாலுமா?

மெய்யாலுமா?

பிபிசி முதல் டைம்ஸ் வரை என உலகின் பல சர்வதேச செய்தி தளங்களில் இந்த செய்திகள் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் வைரலாக பரவின. இப்போது மீண்டும் அதே செய்தி அதே பெயரோடு கடந்து சில தினங்களாக பரவி வருகிறது.

ஆனால், இந்த சுவாரஸ்யமான செய்தி நம்பகத்தன்மை உடையதா? என தெரியவில்லை என்று பிபிசியே கூறியிருக்கிறது.

மூதாட்டி!

மூதாட்டி!

இது ஒன்றும் புதியதல்ல... ஒரு சில வருடங்களுக்கு முன்னர் மூதாட்டி ஒருவர் தனது முகநூலில் தன் இளம் வயது புகைப்படத்துடன் தனது முகவரியை இயக்கி வந்துள்ளார். அவருடன் பல ஆண்கள் ஆசையாக பேசியுள்ளனர். அவர் தனது பிறந்த நாளுக்கு கணவரிடம் புது பட்டுப்புடவை கேட்டதற்கு, கணவரிடம் இருந்து மறுப்பு பதில் வந்துள்ளது.

பட்டுப்புடவை!

பட்டுப்புடவை!

ஆகையால் அவர் முகநூல் தோழர்களிடம் கேட்கவே, பலர் பட்டுப்புடவைகளை பார்சல் அனுப்பி அசத்தியுள்ளனர். இதை கலாட்டாவாக கணவரிடம் காண்பித்த அந்த மூதாட்டி. ஒவ்வொரு புடவைக்கான தொகையை அனுப்பியவர்களுக்கே மீண்டும் செலுத்தியதாகவும். மேலும், அந்த புடவைகளுடன் தனது தற்காலத்து புகைப்படத்தையும் பகிர்ந்து மன்னிப்பும் கோரினார் அந்த மூதாட்டி என செய்திகள் வெளியாகின.

உஷாரய்யா உஷாரு!

உஷாரய்யா உஷாரு!

ஆனால், அனைவரும் இந்த மூதாட்டி போல இருக்க மாட்டார்கள். இதோ! இந்த சீன பெண் மாதிரியும் சிலர் உலாவிக் கொண்டிருக்கிறார்கள். ஆண்கள் மட்டுமே ஏமாற்றுவது என்று கூறிவிட முடியாது. இப்படியாக ஏமாற்றும் பெண்களும் இருக்கிறார்கள்.

எனவே, ஆசை வார்த்தை பேசி பழகும் பெண்ணுக்கு இப்படியான ஒசத்தியான பரிசுகள் வழங்கினால் காதல் கனியும் அல்லது வேறு விஷயத்திற்கு அடிபோடலாம் என எண்ணி ஏமார்ந்து விடாதீர்கள்.

உசுரு முக்கியம்!

உசுரு முக்கியம்!

சில வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் பல இடங்களில் ஆன்லைனில் பெண்களை கொண்டும், பெண்களை போலவும் சாப்ட்வேர் மூலம் குரல் மாற்றி பேசி, சாட் செய்து பல ஆண்கள் ஏமாற்றப்பட்டனர். இதில் பலர் தங்கள் பொருட்களை இழந்தனர். தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது என யாரும் இது குறித்து புகார் ஏதும் அளிக்கவில்லை என்பது தனிக்கதை.

முகப்புத்தகம்!

முகப்புத்தகம்!

இப்படியான ஒரு கதைக் களம் கொண்டிருந்த குறும்படத்தை அட்லி முகப்புத்தகம் என்ற பெயரில் இயக்கி இருந்தார். அதில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாகவும், மொட்டை ராஜேந்திரன் வில்லனாகவும் நடித்திருந்தனர்.

அதாங்க.. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுன்னு பாடி வெச்சுட்டு போயிருக்காங்க. பாத்து சூதானமா இருந்துக்குங்க!

எப்படி கண்டுப்பிடிக்கலாம்....

எப்படி கண்டுப்பிடிக்கலாம்....

ஒருவேளை உங்களுடன் ஆசை வார்த்தை பேசி ஒரு பெண் ஆன்லைனில் பழகி வருகிறார் எனில் அவர் உங்களை ஏமாற்றுகிறார் என்று எப்படி அறிந்துக் கொள்ளலாம்...

நேரில் சந்திக்க ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

அவர்களது உண்மையான புகைப்படங்கள் ஏதும் முகப்பு படமாக இருக்காது.

ப்ரியா ஸ்வீட்டி என்பது போல சில பொதுவான போலி கணக்கு பெயர்களில் உலாவி வருவார்கள்.

போதுமான வரை உங்களிடம் இருந்து அனுதாபத்தை எப்படி சம்பாதிப்பது என்ற நோக்கத்திலேயே பேசுவார்கள்.

முதலில் சின்ன, சின்ன உதவி என கூறி உங்களிடம் இருந்து பணத்தை கறப்பார்கள்.

பிறகு, அவசர தேவை எனக்கு சில ஆயிரங்கள் கேட்டு உங்களை அணுகுவார்கள்.

ஒருவேளை அவர்கள் கேட்டது போல நீங்கள் பணத்தைக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டாலும் நேராக வந்து வாங்கிக் கொள்ள மாட்டார்கள். ஏதாவது வங்கி கணக்கில் போடும்படியாக தான் கூறுவார்கள்.

இப்படி எல்லாம் கூட ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்களா? நீங்கள் யோசிக்கலாம். ஆனால், இப்படி ஏமாற்றுவதற்கு ஒரு கூட்டமே இருக்கிறது என்பது தான் உண்மை. அதிலும், குரலை மாற்றும் வசதி கொண்ட செயலிகள் அதிகம் கிடைப்பதால், எளிதாக ஆண்களை கட்டம்கட்டி ஏமாற்றிவிடுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Girl Conned 20 Men to Buy iPhone 7 and Sold Them to Buy New House

Girl Conned 20 Men to Buy iPhone 7 and Sold Them to Buy New House
Story first published: Wednesday, January 17, 2018, 13:23 [IST]
Desktop Bottom Promotion