Latest Updates
-
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
பெட்ரோல் விலை எகிறிட்டே போனா.. இனி இதுதான் கதி - 'கலகல' கலக்கல் போட்டோஸ்!
பெட்ரோல் விலை எகிறிட்டே போனா.. இனி இதுதான் கதி - 'கலகல' கலக்கல் போட்டோஸ்!
இதெல்லாம் பார்த்தா இவங்க எல்லாம் ரூம் போட்டு யோசிப்பாங்களோன்னு தான் தோணுது. யப்பா டிசைன், டிசைனா கலாய்க்கிறாங்க. நாம ஏதோ வேலை இல்லாம பண்றாங்கன்னு பார்த்தா... இவங்க பெட்ரோல் விலை உயர்வையே வெச்சு செஞ்சிருக்காங்க.
அதிகப்படுத்தும் போது ரூபாயில எத்துற அரசு, குரைக்கும் போது பத்து பைசா, இருபது பைசான்னு கம்மி பண்ணுது. அதனால தான் அறுபதுக்கு வித்துட்டு இருந்த பெட்ரோல் இன்னைக்கு 80ல தொங்கிட்டு இருக்கு.
இதுக்கும் ஆயிரம் காரணம் சொன்னாலும், சாமானிய மக்களுக்கு இந்த பெட்ரோல் விலை உயர்வுனால பட்ஜெட்டுல துண்டு விழுதுங்கிறது தான் நிதர்சனம். கோபத்த கொஞ்சம் நாசூக்கா, சிரிப்பூற்ற மாதிரி வெளிப்படுத்தி இருக்குற குடிமகன்கள்...

உருட்டீட்டு தான் போகணும்..
பெட்ரோல் விலை ஏறுனத விட, டீசல் விலையும் பெட்ரோல் விலை ரேஞ்சுக்கு சரி சமமா வந்திடுச்சேன்னு வருத்தப்படுறவங்க நிறையா பேர் இருக்காங்க. இதோ! இனியும் பெட்ரோல், டீசல் விலை குறையாம அதிகமாகிட்டே இருந்தா இப்படி தான் போகணும்ன்னு ஒருத்தர் நக்கல் பண்ணியிருக்கார்.

காதல் ஜோடிகள்..
பெட்ரோல் விலை அதிகமானது தெரியாம ஊட்டி மலைக்கு ஜாலியா ட்ரிப் போன காதல் ஜோடி.. திரும்ப சைக்கிள்ல தான் சென்னை திரும்புனதா சொல்லப்படுது... அய்யோ பாவம்...

பணக்'காரு' பாஸ்!
வூட்டுக்கு ஒரே ஒரு பைக்கு வெச்சிருக்க நமக்கே இப்படி இருக்கே.. வூட்டுல லோன் எடுத்து காரு வாங்கி ஓட்டுகினு இருக்க அந்த பாஸ் என்ன பண்ணுவாரு... இனிமேல், நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு ஓடு ராஜா...ன்னு பாட்டு பாடிக்கிட்டே குதிரை வண்டி வங்கி தான் ஓட்டனும்.

புதுசு கண்ணா, புதுசு!
90கள்ல வந்த பெரும்பாலான காமெடி மசாலா படங்கள்ல நாம இந்த சீன் கவனிச்சிருக்கலாம். வில்ல, காமெடி ஹீரோஸ், சில சமயத்துல ஹீரோவே களத்துல இறங்கி இந்த சீன்ல நடிச்சிருப்பாரு. எனக்கு தெரிஞ்சு, இன்னைக்கு தேதியில இது தான் சரியான ட்ரான்ஸ்போர்ட் பார்முலா. கவர்மெண்டு பின்னாடி கயித்த கட்டு வெச்சிக்கிட்டா இழுத்துட்டே போயிடும்.

அய்யோ பாவம்!
பெட்ரோல் விலை அதிகமானது தெரியாம ராயல் என்பீல்டு எடுத்துக்கிட்டு நாடு முழுக்க சுத்தி பார்க்கலாம்ன்னு கிளம்பிய நம்ம ஷோலே பசங்க... பெட்ரோல் விலை கேட்டு... ஷாக்காகி இறந்துட்டாங்க.... அய்யோ பாவம். இனிமேல் யாராவது பைக் எடுத்துக்கிட்டு லாங் ட்ரிப் போறேன்னு கிளம்புவீங்க.

முடியுமா?
பேட்மேன்னு பெயரு வெச்சுக்கிட்டு சும்மா இருக்கிறது இல்ல. கார பைக்கா மாத்துறது, பைக்க பிளைட்டா மத்துறதுன்னு ஊரு முழுக்க நான் தான் பெரிய சூப்பர் ஹீரோன்னு உலா வரது. இதுல நைட் டிரைவ் வேற. இதுக்கு தான் சூப்பர் மேன் மாதிரி தீர்க்கதரிசியா இருக்கணும்... இப்படி தான் இவங்க பெட்ரோல் விலை ஜாஸ்த்தி பண்ணிட்டே போவாங்கன்னு... ரைட்டர் கிட்ட கேட்டு பறக்குற சக்தி வாங்கிட்டாப்புல. இப்ப என்ன பண்ணுவ பேட்மேன்... அவர் கிட்ட லிப்ட் கேட்டு தான் போகணும்.

கிங்குடா!
ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல, நான்தாண்டா என் மனசுக்கு ராஜான்னு... ஜாலியா பைக் பாடிய கழற்றி சைக்கிள் மேல மாட்டிக்கிட்டு ஒட்டிகிட்டே போகவேண்டியது தான். இது உடல் நலத்திற்கும் நல்லது. ஒஹ்! இப்ப புரியிதா ஃபிட் இந்தியா கேம்பைன் வெற்றி அடையணும், இந்தியர்கள் ஆரோக்கியமா இருக்கனும்ன்னு தான் பெட்ரோல் விலைய அதிகம் பண்ணியிருக்காங்க. இது தெரியுமா அவங்கள திட்டுனா எப்படி? எல்லாம் உங்க நிலத்து மேல... சாரி சாரி! நலத்து மேல இருக்க அக்கறை தான்.

இப்படி ஒன்னு இருக்கோ...
இன்னும் எத்தனை நாளுக்கு ரோஜா பூவையே தூக்கின்னு போவிங்க... பாருங்க பாஸ்... ஐம்பது நூறு அதிகமானாலும் பரவால... ஸ்கூட்டி வெச்சிருக்க பொண்ணா பார்த்து நாலஞ்சு லிட்டர் வாங்கிட்டு போயி கொடுங்க.
இனிமேல் தனித்தனியா பைக், ஸ்கூட்டிக்கு பெட்ரோல் அடிச்சு காச கரியாக்காமா... ஜோடியா சுத்துங்க. உங்க நலம் மட்டும் இல்லாம, இல்லறமும் நலமுடன் இருக்க தான் அரசாங்கம் உழைக்கிது.



Click it and Unblock the Notifications
