For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொஞ்ச நேரம் வாய்விட்டு சிரிக்க, அஞ்சு நிமிஷம் இப்படிக்கா வந்துட்டு போறது...!

ஒரு நிமிஷமில்ல, கிருட்டு, கிருட்டுன்னு ஒரு மணிநேரம் கூட தலை சுத்த வைக்கும் இந்த படங்கள்!

|

சைன் போர்ட் என்றால் எச்சரிக்கை / தகவல் பலகை என்று பொருள். அதாவது எங்கே செல்ல வேண்டும், செல்ல கூடாது, என்ன செய்ய வேண்டும் , செய்ய கூடாது, அந்த இடத்தில் இருக்கும் தாக்கம் என்ன ?, அந்த இடம் எதற்கானது என்பதை குறித்து விளக்கும் பதாகைகள் தான் சைன் போர்டுகள்.

இந்த எச்சரிக்கை பதாகைகளின் வேலையே மக்களுக்கு தகுந்த சரியான, தெளிவான தகவலை அளிப்பது தான். ஆனால், உலகின் பல்வேறு இடங்களில் எச்சரிக்கை பதாகைகளில் பொருளே இல்லாத அர்த்தமற்ற வாக்கியங்களை எழுதி கடுப்பை கிளப்பி இருக்கிறார்கள் சிலர்.

இது கோபத்தை உண்டாக்குகிறதோ இல்லையோ, நிச்சயம் சிரிப்பை வரவழைக்கும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

யாராவது இந்த வழியா வெளியே போக முயற்சி பண்ணி மாட்டிக்கிட்டா... அவங்கள வெளிய போங்கன்னு சொல்லிடுவோம்... - ஏம்பா... அவங்களே வெளிய தான் போறாங்க... ஏன் வீணா தடுத்து நிறுத்துற. இந்த வழியா உள்ள வந்தா வெளியே அனுப்பிடுவோம்னு சொன்னா ஒரு அர்த்தம் இருக்கு.

#2

#2

சைன் போர்டுகள் பல வகைகளில் இருக்கும். அதை நாமும் அறிவோம். மழை நீர் தேங்கி இருந்தாலோ, அல்லது வராண்டா போன்ற இடங்களில் நீர் தேங்கி வழுக்கி விழும் அபாயம் இருந்தாலோ அங்கே இங்கே தரை ஈரமாக இருக்கிறது என்ற எச்சரிக்கை பதாகை வைக்கப்படும். சில சமயங்களில் ஈரமான சுவர் என்று கூட எழுதி வைப்பார்கள். இங்கே இந்த நண்பர், நீச்சல் குளத்தில் இந்த இடம் ஈரமாக இருக்கிறது என்ற எச்சரிக்கை பதாகையை வைத்திருக்கிறார்.

#3

#3

இதுல என்ன அர்த்தம் இல்ல... சரியா தான இருக்கு. 24 மணி நேரமும் இந்த கேட் ஒன்னு மூடி இருக்கும் இல்ல திறந்திருக்கும். இவங்கள எல்லாம் தான் கவுண்டமணி அண்ணன், கல்வெட்டுல எழுதி வெச்சுட்டு பக்கத்துலயே உட்கார்ந்துக்கன்னு பாசமா சொல்லி இருக்காரு.

#4

#4

கரக்ட்! கரக்ட்! கரக்ட்! பால்கனிய அவங்க தெரியாம மேல கட்டி வெச்சுட்டாங்க... அதான் பால்கனி கீழ்த்தளம் அளவில் இல்லை, பார்த்து கவனமா இருங்கன்னு சொல்லி எச்சரிக்கை பதாகை வெச்சிருக்கார். ஏன்னா நம்ம வீட்ல எல்லாம் பால்கனி வாசல் கதவு, கார் பார்க்கிங் பக்கமா வெச்சிருக்கோம்ல... ஆண்டவா இவங்க எல்லாம் எங்க இருந்து தான் வராங்கன்னு தெரியலையே...!

#5

#5

நாம தான் தப்பா புரிஞ்சுக்கிட்டோம்னு நினைக்கிறேன். இவங்க தெளிவா அர்த்தமோட தான் எழுதி வெச்சிருக்காங்க. உணவு மூலப் பொருள் எல்லாம் சேர்த்து தான சமைப்பாங்க... அப்ப இவரு எழுதி வெச்சிருக்கிறதும் சரி தான... இதுல என்ன தப்பு இருக்கு.

#6

#6

சரியான எஸ்.ஜே சூர்யா ரசிகரா இருப்பாரு போல... இருக்கு, ஆனா இல்லன்னு சொல்றது மாதிரி.. இது என்ட்ரன்ஸ்... ஆனா, நோ என்ட்ரன்ஸ்னு போர்டு வெச்சிருக்காப்புல. ஒருவேளை ஆதிகாலத்துல என்ட்ரன்ஸா இருந்திருக்குமோ... அப்படின்னா பழைய போர்ட கழட்டிட வேண்டியதுதானே!

#7

#7

ஒரு வேலை பிரிட்டிஷ் இங்கிலீஷ், அமெரிக்கன் இங்கிலீஷ் குளறுபடியா இருக்குமோ... ஏம்பா... கார்பேஜ், ட்ராஷ் ரெண்டுமே ஒன்னு தானே... நான் சரியா பேசுறனா...ன்னு புலம்ப வெச்சிடுவாங்க போல... நாம சரியா தான படிக்கிறோம்...!!!??!!

#8

#8

இல்லைங்க.. மத்த படத்துக்கு கூட ஏதாவது மொக்கையா எழுதிட்டோம்... இதுக்கு எதுமே எழுத முடியல... உங்களுக்கு ஏதாவது இதுல புரிஞ்சா... தயவு செஞ்சு சொல்லுங்க... பிம்பிலிக்கா பிளாப்பிக்கு கூட ஒரு அர்த்தம் இருக்கு.. ஆனா, இந்த வாக்கியத்துக்கு என்ன அர்த்தம்னு சுத்தமா புரியல...

#9

#9

இது பின் கதவு... முன் கதவு பின்னாடி இருக்கு.... முன்னாடி இது பின்னாடி தான் இருந்தது... இப்போ பின்னாடி இருக்கு... பின்னாடி எப்படி முன்னாடி ஆக முடியும். இதெல்லாம் நாம பஞ்சதந்திரம் படத்துலையே பார்த்துட்டோம். அடுத்த படத்துக்கு போவோம்...

#10

#10

நில்லுங்க... இது நில்லுங்கன்னு சொல்ற எச்சரிக்கை பதாகை.. தெரிஞ்சுக்குட்டீங்களா.. சரி கிளம்புங்க... ஐ மீன்.. அடுத்த படத்துக்க்கு கிளம்புங்க... போட்டோல பார்க்குற நமக்கே இம்புட்டுகாண்டாகுதுன்னா.. நேர்ல பார்த்தவங்களுக்கு எம்புட்டு கடுப்பாகும்.

#11

#11

உண்மைய சொன்னா தான் கோபம் வரும் எங்க ஊரு பக்கமா ஒரு பழமொழி சொல்லுவாங்க. இதோ! இங்க கூட பாருங்களேன்.. எல்லாரும் உண்மைய தான் சொல்றாங்க.. ஆனா, நமக்கு கோபம் வருது. அதனால, இனிமேல் எங்கையாவது இப்படியான எச்சரிக்கை பதாகை பார்த்தா... பார்த்தவுடன் கிழித்துவிடவும்ங்கிற மாதிரி, பார்த்தவுடன் உடைத்துவிடவும்.

#12

#12

இந்த சைன் போர்டு உபயோகத்துல இல்லையாம்... நல்ல வேலை சொன்னாங்க.. இல்ல பார்த்து யாராவது தப்பா போயிருப்பாங்க... ஆமா, எந்த சைன் போர்டு உபயோகத்துல இல்ல... இந்த சைன் போர்டா... இல்ல இதுக்கு முன்ன அங்க இருந்த சைன் போர்டா...

#13

#13

ஏம்பா... எலிவேட்டர் இருக்கா இல்லையான்னு பார்த்து அப்பறமா உள்ள போங்க. எலிவேட்டர் இல்லாம நீங்க பாட்டுக்கு உள்ள போய், அது உங்கள மேல எடுத்துட்டு போயிட போகுது... சரியா! இனிமேல் உங்க ஆபீஸ், அப்பார்ட்மெண்ட்டுக்கு போகும் போது கூட, இருக்கா இல்லையான்னு பார்த்து செக் பண்ணிட்டு போங்க.

#14

#14

தடுப்பு மேல உட்கார கூடாது தான். அதுலயும் இந்த தடுப்பு மேல யாராலையும் உட்கார முடியாது. எழுத படிக்க தெரியாதவங்க யாராது இது தெரியாம மேல உட்கார்ந்துட்டா என்ன பண்றது. அதான், அவங்க இங்க எழுதி இருக்கிறத படிச்சு பார்த்து மேல உட்காராம ஜாக்கிரதையா இருக்கணும்! என்ன சொன்னது புரிஞ்சதா...!

#15

#15

ப்ளீஸ் பா ட்ரை பண்ணி தான் பாருங்களேன்... வேற என்ன சொல்ல... எப்படியும் இந்த மாதிரி இன்னும் பல கலக்கல் காமெடி, மிஸ்டேக்ஸ் இணையத்துல குவிஞ்சு கிடக்கும்.. அடுத்த முறை வேற எதாவது டாபிக்ல சிந்திப்போம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Funny Sign Boards Which Has No Sense

Funny Sign Boards Which Has No Sense
Desktop Bottom Promotion