For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூவில் பதிவான சில ஏடாகூட நிகழ்வுகள் - புகைப்படத் தொகுப்பு!

By John
|

நீரின்றி அமையாது உலகு என்பது போல, கூகுள் இன்றி அமையாது இன்டர்நெட். போக்குவரத்து, ஸ்மார்ட் போன், யூடியூப், டிரைவ், குரோம், மின்னஞ்சல் என தொட்டது தொண்ணூறுக்கும் நமக்கு தேவையாக, அவசியமாக இருக்கிறது கூகுளின் பங்களிப்பு.

சொல்லப் போனால், அங்காளி, பங்காளியை விட நமக்கு அதிகம் உதவுவது கூகுள் தான். கூகுள் ஒன்றும் நமக்கு ஓசியில் பயனளிக்கவில்லை. நமது தரவுகளை எல்லாம் திருடிக் கொள்கிறது என்ற குற்றச்சாட்டை நாம் முன்வைக்கலாம்.

ஆனால், நாம் படித்து பார்க்க சோம்பேறி பட்டுக்கொண்டு "I Agree" என ஒப்புதல் சாசனம் எழுதிக் கொடுப்பதால் தான், நீங்கள் பயணிக்கும் சாலை வழிகளில் இருந்து, ஏறி, இறங்கும் பேருந்து எண், வீடு, அலுவலகம், உங்கள் புகைப்படம், இணையத்தில் நீங்கள் தேடுவது என்னென்ன என்று அனைத்தையும் சேமித்து வைத்துக் கொள்கிறான் தொழில்நுட்ப அரக்கன் கூகுள்.

Funny Photos That Caught on Google Map Street View

கூகுள் நமது தரவுகளை மட்டும் தான் எடுத்து வைத்துக் கொள்கிறதா என்றால், இல்லை என்பதே நிதர்சனம். கூகுள் மேப் சிலபல ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தது என்று நாம் அனைவரும் அறிவோம்.

இன்று, ட்ராபிக், சேட்டிலைட் வியூவ் என நமக்கு பல அம்சங்களை கொடுத்து அசத்துகிறது. இந்த வழியாக போனால் 35 நிமிடங்கள் கூடுதலாக எடுத்துக் கொள்ளும் ட்ராபிக் கடுமையாக இருக்கிறது என்று நமக்கு வழிகாட்டியாக இருக்கிறான் கூகுள்.

கூகுள் மேப் அதிகம் பயன்படுத்தும் நபர்களுக்கு நிச்சயமாக கூகுள் ஸ்ட்ரீட் வியூவ் பரிச்சயமாக தான் இருக்க வேண்டும். கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் நாம் செல்ல நினைக்கும் வழி அல்லது இடத்தை அது எப்படி நிஜத்தில் இருக்குமோ, அதே மாதிரி பார்க்கலாம்.

இதை கூகுள் கேமரா கார் கொண்டு கூகுள் முழுக்க கட்டமைத்துள்ளது என்று அறியப்படுகிறது. இன்றுவரை இந்த கூகுள் ஸ்ட்ரீட் வியூவ் எல்லா இடங்களுக்கும் முழுக்க கிடைப்பத்தில்லை என அறியப்படுகிறது.

இந்த கூகுள் ஸ்ட்ரீட் வியூவ் உருவாக்கும் போது கூகுள் கேமரா கார் பதிவு செய்தவற்றில் சில விசித்திரமான சம்பவங்கள் மற்றும் நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன. அப்படி என்னென்ன ஏடாகூடமான விஷயங்கள் பதிவாகியுள்ளன என்று இந்த தொகுப்பில் காணலாம் வாங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

Image Source and Courtesy: Google Maps / Street View

சாமுராய் போல வேடமிட்டு ஜாலியாக சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நண்பர்கள்..

#2

#2

Image Source and Courtesy: Google Maps / Street View

சாலையோரத்தில் காரை பார்க் செய்துவிட்டு கலவுறவில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் காதல் ஜோடி...

#3

#3

Image Source and Courtesy: Google Maps / Street View

ரெஸ்டாரண்டில் இருந்து பெற்றோர்களை ஏமாற்றிவிட்டு, ஜாலியாக நாலு காலில் வாக்கிங் செல்ல துவங்கிய பச்சிளம் குழந்தை.

#4

#4

Image Source and Courtesy: Google Maps / Street View

காரோட்டும் போது மூக்கை நோண்டி கொண்டிருக்கும் நபர்...

#5

#5

Image Source and Courtesy: Google Maps / Street View

முக்கால் நிர்வாணமாக காரின் பின்புறத்தில் இருந்து வெளியேறும் நபர் ஒருவர்...

#6

#6

Image Source and Courtesy: Google Maps / Street View

தவறாக சைக்கிள் ஓட்டி சென்று, சாலை ஓரத்தில் இருந்த கம்பத்தில் முட்டிக் கொண்ட சிறுவன்...

#7

#7

Image Source and Courtesy: Google Maps / Street View

சாலையரத்தில் இளைப்பாற இருந்த பார்க் பெஞ்சில் வெறும் உள்ளாடையுடன் அமர்ந்து பேப்பர் வாசித்துக் கொண்டிருக்கும் முதியவர்.

#8

#8

Image Source and Courtesy: Google Maps / Street View

கக்கா போய் கொண்டிருக்கும் நாய்...

#9

#9

Image Source and Courtesy: Google Maps / Street View

பாலைவன சாலையில் வினோதமான முகமூடி அணிந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் சில நபர்கள்..

#10

#10

Image Source and Courtesy: Google Maps / Street View

விநோதமாக மரத்தின் அருகே கட்டபப்ட்டிருக்கும் வெஸ்டர்ன் டாயலெட்.

#11

#11

Image Source and Courtesy: Google Maps / Street View

ஜாலியாக நாயை சைக்ளிங் அழைத்து செல்லும் நபர்...

#12

#12

Image Source and Courtesy: Google Maps / Street View

செக்ஸ் பொம்மையை வாங்கிக் கொண்டு ஒய்யாரமாக சாலையோரத்தில் நடந்து செல்லும் இளைஞர்...

#13

#13

Image Source and Courtesy: Google Maps / Street View

காருக்குள் ஒரு நடுவயது தம்பதியர். சாவியை தான் தேடிக் கொண்டிருக்கிறார் போல...

#14

#14

Image Source and Courtesy: Google Maps / Street View

ஆள் நடமாட்டம் இல்லாத தெருவில், காதலனுடன் வெட்கமின்றி சுய இன்பம் கொண்டிருக்கும் காதலி...

#15

#15

Image Source and Courtesy: Google Maps / Street View

காரின் மீது சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும் முதியவர்...

#16

#16

Image Source and Courtesy: Google Maps / Street View

சாலையோரத்தில் மணலில் குப்புற படுத்துக் கிடைக்கும் பெண்மணி...

#17

#17

Image Source and Courtesy: Google Maps / Street View

சாலையோரத்தில் உச்சா போய் கொண்டிருக்கும் நாய்...

#18

#18

Image Source and Courtesy: Google Maps / Street View

பள்ளி தோழி கீழே விழுந்ததை கண்டு சிரித்துக் கொண்டிருக்கும் தோழிகள்...

#19

#19

Image Source and Courtesy: Google Maps / Street View

என்ன வெயில் இன்னிக்கி சளீர்னு அடிக்குது, என தொப்பையை தடவிக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே எட்டிப் பார்க்கும் முதியவர்...

#20

#20

Image Source and Courtesy: Google Maps / Street View

மதிய நேரம் ஜன்னல் வழியே ஒற்றை காலை வெளியே விட்டப்படி சாலையை நோட்டம் விட்டுக் கொண்டிருக்கும் இளைஞர்...

#21

#21

Image Source and Courtesy: Google Maps / Street View

என்ன அவசரமோ காரை விட்டு இறங்கியதும் சாலையிலேயே கக்கா போக முனையும் ஆண்...

#22

#22

Image Source and Courtesy: Google Maps / Street View

போலீஸிடம் மாட்டிய திருடர்கள், அரஸ்ட் செய்யும் காட்சி.

#23

#23

Image Source and Courtesy: Google Maps / Street View

ட்ரக் அருகே செக்ஸி போஸில் நின்றுக் கொண்டிருக்கும் இளம்பெண்...

#24

#24

Image Source and Courtesy: Google Maps / Street View

சரக்கடித்துவிட்டு வேறொருவர் வாகனத்தில் மட்டையாகி விழுந்துக் கிடக்கும் நபர்..

#25

#25

Image Source and Courtesy: Google Maps / Street View

கேட்டை கடக்கும் போது, சிக்கிக்கொண்ட நாய்...

#26

#26

Image Source and Courtesy: Google Maps / Street View

பின்னாடி தன் மானம் போவதை அறியாமல், முன்னாடி வேடிக்கை பார்த்துக் கொண்டு ஸ்டைலாக நின்றுக் கொண்டிருக்கும் நடுவயது பெண்மணி..

#27

#27

Image Source and Courtesy: Google Maps / Street View

சாலையில் வாகனம் எரிந்துக் கொண்டிருக்க, சாதாரணமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிற்கும் ஆண்..

#28

#28

Image Source and Courtesy: Google Maps / Street View

சாலையோரத்தில் விழுந்து கிடைக்கும் கார்...

#29

#29

Image Source and Courtesy: Google Maps / Street View

பொம்மை துப்பாக்கியை வைத்து மிரட்டி விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள்...

#30

#30

Image Source and Courtesy: Google Maps / Street View

நண்பனுக்கு பாசமாக உணவு வாங்கிக் கொடுத்து அருகில் பொம்மை கொம்பு மாட்டிக் கொண்டு நிற்கும் நபர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Funny Photos That Caught on Google Map Street View

Here we have shown some of the weird and funny incidents that caught on google map street view. Lets, take a look on it.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more