For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம்மாளுங்க ஆங்கில புலமை கண்டு உலகம் வியந்த தருணங்கள்..

இதெல்லாம் இந்தியர்களால மட்டும் தான் பண்ண முடியும்...

By Staff
|

நம்மாளுங்களுக்கு ஸ்டைல்னா ரொம்ப பிடிக்கும். ஆனா, அந்த ஸ்டைல எப்படி நூறு சதவிதம் பக்காவா பண்ணனும்னு தெரியாது. ஏதாவது அரைகுறையா தெரிஞ்சு வெச்சுட்டு அவங்க இஷ்டத்துக்கு பண்ணுவாங்க. இது ஹேர்ஸ்டைல்ல தொடங்கி, டிரெஸ்ஸிங்ல இருந்து கடைக்கு பெயரு வைக்கிறது வரைக்கும் நாம இந்தியாவுல பார்க்க முடியும்.

Funny English Double Meaning Sign Boards Used in India!

ஹேர்ஸ்டைல், டிரெஸ்ஸிங் கூட ஏதோ ஒரு விஷயத்துல விட்டுடலாம். ஆனால், கடைக்கு, தயாரிக்கிற பிராடக்டுக்கு எல்லாம் இங்கிலீஷ்ல பேரு வைக்கிறேன்னு அர்த்தம் புரியாம வெச்சு வேர்ல்டு லெவல்ல டிரால்க்கு ஆளாகிறதுல முக்காவாசி ஆளுங்க நம்ம பயலுவ தான்.

இதோ! நம்மாளுங்க பண்ணி வெச்சிருக்கிற அட்டூழியத்தப் பாருங்களேன்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்!

ஆய்!

வண்டி கேரளா பக்கம் தான் ஓடுது போல... சரி! Poopன்னா தம்பிக்கு என்னனு தெரியுமா? ஹ்ம்ம்... ஆங்கிலத்துல மலம்ங்கிறத பூப்ன்னு சொல்லுவாங்க... தமிழ்ல பூப்புன்னு சொல்லும் போது வேற மாதிரி மணக்கும், அதுவே ஆங்கிலத்துல வேற மாதிரி மணக்கும். அதெல்லாம் சரி... பால் கம்பெனிக்கு எதுக்குய்யா இந்த பேரு வெச்ச...

அதையுமா?

அதையுமா?

ஏதோ சின்ன வயசுல ஸ்லேட்டு பென்சில், சாக்பீசு, மண்ணுன்னு சாப்பிட்டா பரவாயில்ல... நம்ம மக்கா... கார்பெட் எல்லாமாடா சாப்பிடுறீங்க.... இதெக்கெல்லாம் சைன் போர்டு வைக்கிற அளவுக்கு இந்தியா மோசம் ஆயிடுச்சா.. வெளிநாட்டுல இருந்து வரவன் இந்த போர்ட பார்த்தா நம்மள பத்தி என்ன நினைப்பான்.

ஆஹா!

ஆஹா!

ரைட்டு... எங்க ஊர்ல எல்லாம் தண்ணி வேற எதுலையோ எடுக்குறாங்க... ஸ்லோகன், கேப்ஷன் எல்லாம் கிரியேட்டிவா வைக்க சொன்னா... இப்படி கிறுக்கு பிடிக்கிற மாதிரி ஏண்டா வெச்சு கொல்லுறீங்க 'நவ் வாட்டர் வித் எச்2ஓ'வாமா... பின்ன வேறு எதுல இருந்து எடுப்பாங்கலாம். நல்லா விவகாரம் பிடிச்ச பயலுகளா இருக்கானுங்க!

சூப்பர்!

சூப்பர்!

நம்மாளுங்களுக்கு பூப்னாலே என்னனு தெரியல... இதெல்லாம் தெரிஞ்சிருக்க வாய்ப்புகள் மிகவும் கம்மி தான். லிபிடோன்னா ஆண்மை, காமவெழுச்சி உணர்வுகள்ன்னு அர்த்தம். இப்பவாவது புரியுதா... தண்ணி பாட்டிலுக்கு இந்த பேரு யாருப்பா உங்கள வெக்க சொன்னா. தாகத்த தீர்க்க வரவன் எண்ணம் எதுல எல்லாம் போகுமோ...

எத்தனை வாட்டி...

எத்தனை வாட்டி...

கை வேலைன்னு சொன்னாலே இங்க தப்பா தான் அர்த்தம் எடுத்துக்குவாங்க. கைராசி காரன்னு சொல்ல வேற வார்த்தையே இல்லையா? அதென்ன பெஸ்ட் ஹேண்ட்ஜாப். என்ன டிகிரி முடிச்சு வெச்சிருக்கீகளோ. ஹேண்ட்ஜாப்ன்னா பலான அர்த்தம் இருக்கு. இதாவது பரவால சிலர் ஹேண்ட்ஜாப் காபி கடைக்கு எல்லாம் பேரா வெச்சிருக்கான். எங்க போய் முட்டிக்கிறது.

முடியாது!

முடியாது!

எந்த நாட்டுலையும் பருவமடைதல் மாற்றத்த விழா எடுத்து கொண்டாடுறது இல்ல. நாம ஏன் வெச்சிருந்தோம்னா... அப்ப எல்லாம் எங்க வீட்டுல வயசுக்கு வந்த பொண்ணு இருக்குன்னு மாப்பிளை வீட்டுக்கு சிக்னல் கொடுக்க இத கொண்டாடுனாங்க. அப்போ குழந்தை திருமணம் நடந்துச்சு. இப்போ இல்ல. சரி! கொண்டாட்டி தான் போங்க. அதுக்கு ஏன்யா போஸ்டர், பேனர் எல்லாம் வைக்கிறீங்க.

ஹிட்லர்!

ஹிட்லர்!

இது நம்ம ஊரு பயலுக வேலை. தீபாவளி வந்துட்டாலும் போதும் அந்த வருஷம் ஹிட்டான எல்லா விஷயத்துலயும் பட்டாசு பெயரு வெச்சிடுவாங்க. இதெல்லாம் நம்மளுக்கு பழக்கப்பட்டு போன விஷயம்... ஆனா, வெளிநாட்டு இணைய தளங்கள்ல சிரிப்பா சிரிக்கிறாங்களே...

அடுத்து!

அடுத்து!

போலி தயாரிக்கிறதுல சீனா காரன்ன அடிச்சுக்க முடியாது தான். ஆனால், மொக்கையா ஒரு பிராடக்ட காபி அடிக்கிறதுல நம்மளையும் அடிச்சுக்க முடியாது. கண்ணா லட்டு திங்க ஆசையா சாக்லேட்ட எப்படி மொக்கையா ஃபேஸ்புக் டான்ஸிங் பால்ஸ்ன்னு காபி அடிச்சு வெச்சிருக்காங்க.

ரைட்டு!

ரைட்டு!

பால்ஸ்னா பந்து மட்டும் நினைத்துக் கொண்டிருக்கும் மக்களே... பால்ஸ் என்பதை வேறு சில விஷயத்தை குறிப்பிடவும் பயன்படுத்துவார்கள். அதுலயும் அமெரிக்கன் பால்ஸ்ன்னு பெயர் வெச்சுட்டு பாக்கெட்டுக்குள்ள வெள்ளை கலர்ல சீடைய தான் வெச்சிருக்கோம்ன்னு நமக்கு தெரியும். இன்டர்நெட்டுல போய் வைரலானதுக்கு அப்பறம் இத பாக்குற வெள்ளை காரனுக்கு என்னன்னு புரியும்.

போதுமடா சாமி!

போதுமடா சாமி!

பால்ஸ், லிபிடோவுக்கு அர்த்தம் தெரியாம பேரு வெச்ச மகராசனுங்ககிட்ட போய் டிட்ன்னு ஏன்டா பெயரு வெச்சன்னு கேட்கவா முடியும். இதெல்லாம் நமக்கான தலைவிதின்னு நெனச்சுக்கிட்டு அப்படியே நகர்ந்து பத்தோட பதினொன்னா போயிட வேண்டியது தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Funny English Double Meaning Sign Boards Used in India!

Funny English Double Meaning Sign Boards Used in India!
Desktop Bottom Promotion