For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லட்சங்கள் செலவு செய்து ஊருக்கு நடுவே அரசுக்கு எதிராக ஜைஜாண்டிக் நடுவிரல் சிலை!

|

நாம் அனைவருமே ஏதேனும் ஒரு தருணத்தில், சூழலில் அவமரியாதை அல்லது நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டிருப்போம். நம் மீது தவற இல்லாமல் அல்லது நாம் முன்னெடுக்க முயன்ற செயலுக்கு காரணமே இல்லாமல் தடை கோரி இருப்பார்கள் அல்லது தடுத்து நிறுத்தி இருப்பார்கள்.

இப்படியான கடினமான சூழலை கடந்து வரும் போது, நிச்சயம் நமக்கு அநீதி அளித்தவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும், பழிக்கு பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் எழுவது சாதாரணம் தான்.

ஆனால், வெஸ்ட்ஃபோர்ட் வெர்மான்ட் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், தனக்கு அநீதி அளித்தவர்களுக்கு வேற லெவலில் ரிவெஞ் எடுத்திருக்கிறார். அதாகப்பட்டது, அவர்கள் தினமும் தன்னை கடந்து செல்லும் போதெல்லாம், அவமானம் அடையும் வகையில் தன் வீட்டின் முன்னே நடுவிரல் சிலையை 16 அடி உயரத்தில் நிறுவி இருக்கிறார் அந்த நபர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டெட் பெல்கி!

டெட் பெல்கி!

வெஸ்ட்ஃபோர்ட், வெர்மான்ட் பகுதியில் வசித்து வருபவர் டெட் பெல்கி. இவர் இந்த ஊரில் 8,000 சதுர அடியில் ஒரு கேரேஜ் கட்ட முடிவு செய்தார். அந்த தனது ட்ரக்கினை பழுது பார்க்கவும், Monofilament ரீசைக்கிள் பிஸ்னஸ் செய்யவும் திட்டமிட்டிருந்தார் டெட்.

சொந்தமான இடம்!

சொந்தமான இடம்!

டெட் டவுன் அலுவலகத்தில் இதற்காக பர்மிட் கேட்டிருந்தார். இவர் கேட்டிருந்தது அவருக்கு சொந்தமான இடத்தில் கேரேஜ் அமைத்துக் கொள்வதற்கு தான். ஏனெனில், இதற்காக டெட் பெல்கி ச்வாண்டன் எனும் பக்கத்து ஊருக்கு சென்று வர வேண்டிய சூழல் இருந்தது. இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லையே.. என்று தானே தோன்றுகிறது. ஆம்! இது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயம் இல்லை தான்.

மறுப்பு!

மறுப்பு!

ஆனால், வெஸ்ட்ஃபோர்ட், வெர்மான்ட் டவுன் அதிகாரிகள் டெட் பெல்கிக்கு இதற்கு அனுமதி மறுத்தனர். செலக்ட் போர்டு மற்றும் டெவலப்மென்ட் ரிவியூ போர்டு டெட் பெல்கி கேரேக் அமைக்க தடை விதித்து, பர்மிட் வழங்க மறுத்தது.

பத்து ஆண்டுகள்!

பத்து ஆண்டுகள்!

ஒரு முறை இல்லை, இரண்டு முறை இல்லை.. கடந்த பத்து ஆண்டுகளாக டவுன் அதிகாரிகளை சந்தித்து இதற்கு அனுமதி வழங்க போராடினார் டெட் பெல்கி. ஆனால், டவுன் அதிகாரிகள் மீண்டும், மீண்டும்.. மறுப்பு மட்டுமே தெரிவித்து வந்தனர். இதனால், ஒருக்கட்டதில் டெட் பெல்கி விரக்தி அடைந்தார்.

ஏன்?

ஏன்?

டெட் பெல்கிக்கு டவுன் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து வருவதற்கான தெளிவான காரணம் என்று எதுவுமே இல்லை. இதை இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று முடிவு செய்த 54 வயதுமிக்க டெட் பெல்கி டவுன் அதிகாரிகளுக்கு எதிராக தனது கருத்தை பதிவு செய்ய வேண்டும் என்று முடிவு செய்து பெரிய அளவிலான நடுவிரல் சிலையை நிறுவினார்.

நடுவிரல் சிலை!

நடுவிரல் சிலை!

தன் வீட்டின் முன்னே, 700 பவுண்டு பைன் மரத்தினை கொண்டு, 16 அடி உயரம் கொண்ட கம்பத்திற்கு மேலே பெரிய அளவிலான நடுவிரல் சிலையை நிறுவினார் டெட் பெல்கி. இதற்காக அவர் சுமார் மூன்று இலட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறார்.

இதற்காக யாராவது இவ்வளவு செலவு செய்வார்களா? என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இதற்கும் மேல் டெட் ஒரு காரியம் செய்தார். இரவிலும் இந்த சிலை நன்கு தெரிய வேண்டும் என்பதற்காக சிலையில் கீழே விளக்குகள் அமைத்தார். ஆகவே, சிலை பகலிலும், இரவிலும் நன்கு பிரகாசமாக தெரியும்.

மதிக்கவில்லை!

மதிக்கவில்லை!

என்னை அவர்கள் மதிக்கவில்லை. எனது கோரிக்கைக்கு நியாயமான முறையில் அவர்கள் பதில் அளிக்கவில்லை. இது டவுன் அதிகாரிகளுக்கு மட்டுமே தான். மற்றபடி இந்த ஊர் மக்கள் இதை தவறாக் எடுத்துக் கொள்ள கூடாது என்றும் டெட் பெல்கி கூறி இருக்கிறார்.

அகற்ற முடியாது!

அகற்ற முடியாது!

வெஸ்ட்ஃபோர்ட் டவுனில் விளம்பர பலகைகள் வைப்பதற்கு தடை இருக்கிறது. ஆகவே, தன் வீட்டு நடைப்பாதையில் டெட் வைத்திருப்பதாலும், இது விளம்பரம், வியாபாரம் என்ற வகையில் இல்லாமல், கலை வடிவம் என்ற பட்டியலின் கீழ் வருவதாலும் வேஸ்ட்ஃபோர்ட் டவுன் அதிகாரிகளால் டெட் நிறுவி இருக்கும் இந்த நடுவிரல் சிலையை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

புரிந்துக் கொள்ள வேண்டும்...

புரிந்துக் கொள்ள வேண்டும்...

வெஸ்ட்ஃபோர்ட் டவுனில் வசித்து வரும் மக்கள் இதை புரிந்துக் கொள்ள வேண்டும். இந்த நடுவிரல் சிலை ஊர் மக்கள் அனைவருக்குமானது இல்லை. எனக்க அநீதி இழைத்த டவுன் அதிகாரிகளுக்கு மட்டுமே ஆனது இந்த சிலை. வெஸ்ட்ஃபேர்ட் மக்கள் மிகவும் நல்லவர்கள். அவர்கள் அனைவருமே நல்லவர்கள் என்று டெட் பெல்கி கூறி இருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Frustrated Man Built a 4000 Dollar Cost Middle Finger Statue!

A Frustrated Man from Westford, Vermont Built a 4000 Dollar Cost Middle Finger Statue for Town office Officials, who said big NO for his permit.
Story first published: Thursday, December 13, 2018, 10:45 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more