For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரலாற்றில் இடம் பெற தவறிய சுதந்திர போராட்ட வீரர்கள்!

இந்தியாவின் சுதந்திரம் என்பது அவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை, பலர் இரத்தம் சிந்தி, பலர் கண்ணீர் சிந்தி இன்னும் பலர் உயிரை தியாகம் செய்து வாங்கப்பட்டது. ஆனால் அதற்கான ஒட்டுமொத்த புகழும் குறிப்பிட்ட ந

|

இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திர காற்றானது பல இந்தியர்களின் வேர்வையாலும், இரத்தத்தாலும் வளர்க்கபட்ட இந்தியா என்னும் மரத்தில் இருந்து கிடைப்பது. இந்த சுதந்திரத்தை பெற நம் முன்னோர்கள் அனுபவித்த துயரங்களும், இன்னல்களும் நாம் படித்ததை விட மிகவும் கொடுமையானவை. ஆனால் அவ்வாறு போராடிய இலட்சக்கணக்கான தியாகிகளில் ஒருசில நபர்களின் பெயர்களை தவிர பல தியாகிகளுடைய பெயர்கூட நமக்கு தெரியாது என்பதுதான் நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டிய விஷயம்.

12 forgotten freedom fighters of India

பல இலட்சம் பேர் சேர்ந்து போராடி பெற்ற சுதந்திரத்திற்கு ஒருசில நபர்கள் மட்டுமே காரணம் என அவர்களை மட்டும் இந்தியாவின் அடையாளமாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். நம்மால் மறக்கப்பட்ட சிலரால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட நம் தேச சுதந்திரத்திற்காக போராடிய நம் தேசபிதாக்களை நினைவுகூர வேண்டிய தருணம் இது. சுதந்திர தினம் நெருங்கும் இவ்வேளையில் நமக்காக பாடுபட்ட தியாகசுடர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம். நம் வரலாறு சொல்ல மறந்த சில தியாகிகளை பற்றி இங்கே காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அல்லுரி சீதாராம ராஜு

அல்லுரி சீதாராம ராஜு

" மான்யம் வீருடு" அதாவது காடுகளின் ராஜா என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்பட்ட அல்லுரி சீதாராம ராஜு ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1920-1924 வரை நடந்த ரம்பா கழகத்தில் பழங்குடியினர்களின் தலைவராக வீரத்துடன் போரிட்டார். வசதியான ஆந்திர குடும்பத்தில் பிறந்த இவர் அந்த வசதியான வாழ்க்கையை உதறிவிட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ஒடுக்கப்பட்ட பழங்குடியினர்களுக்கு ஆதரவாக அவர்களுடன் போரிட்டார், ஆனால் இவரின் கிளர்ச்சி ஆங்கிலேயர்களால் முறியடிக்கப்பட்டது.

பெனாய் கிருஷ்ணா பாசு, படேல் குப்தா, தினேஷ் குப்தா

பெனாய் கிருஷ்ணா பாசு, படேல் குப்தா, தினேஷ் குப்தா

ஐரோப்பியர்கள் போல உடையணிந்த இந்த மூன்று இளைஞர்களும் 1930 ஆம் ஆண்டு டிசம்பர் 8 கொல்கத்தா எழுத்தாளர்கள் கட்டடங்களின் மாநில செயலகத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் ஜெனரல் (சிறைச்சாலைகள்) NS சிம்ப்சன் அறைக்குள் நுழைந்து அவரை சுட்டு கொன்றனர், ஏனெனில் அவர் சிறையில் இருந்த இந்திய போராட்ட வீரர்களை கொடுமையாக துன்புறுத்தியிருந்தார். போலீசிடம் பிடிபட விரும்பாத இந்த மூன்று இளம் சிங்கங்களும் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர். படேல் சயனைடு சாப்பிட்டு விட்டார், மீதி இருவரும் தங்கள் துப்பாக்கியாலேயே தங்களை சுட்டுக்கொண்டனர். இந்த இடம் சுதந்திரத்திற்கு பிறகு

பெனாய்-படேல்-தினேஷ் பேக் என்று பெயர்மாற்றப்பட்டது.

வீரபாண்டிய கட்டபொம்மன்

வீரபாண்டிய கட்டபொம்மன்

இந்த பெயரை கேள்விப்படாதவர்கள் தமிழ்நாட்டில் யாரும் இருக்கமுடியாது. ஆங்கிலேயர்களுக்கு வரி கட்ட மறுத்த இந்த தன்மான தலைவன் வீரத்துடன் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டார். ஆனால் தமிழனே தமிழனுக்கு எதிரி என்பது போல ஒரு தமிழனால் காட்டிக்கொடுக்கப்பட்டு 1799-ல் கட்டபொம்மன் கொல்லப்பட்டார்.

ராணி கெய்டின்லியு

ராணி கெய்டின்லியு

நாக ஆன்மீகத் தலைவரான ராணி கெய்டின்லியு, பிரிட்டனுக்கு எதிராக கிளர்ச்சி செய்தார். அவர் 13 வயதிலேயே ஹெக்டா சமய இயக்கத்தில் சேர்ந்தார். பிரிட்டிஷ் மணிப்பூர் படையெடுப்பைத் தொடர்ந்து இந்த இயக்கமானது அரசியல் போராட்டமாக மாறியது. 16 வயதில் பிரிட்டனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 1937 ல் ஜவஹர்லால் நேரு இவர்களை சந்தித்தபோது, இவரை வெளியே கொண்டுவருவதாக. இறுதியாக 1946 ஆம் ஆண்டில் இந்தியாவின் இடைக்கால அரசாங்கம் உருவானபோதுதான் இவர் விடுதலை செய்யப்பட்டார். 1982 ஆம் ஆண்டு இவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.

அஷ்பக்குல்லா கான்

அஷ்பக்குல்லா கான்

அஷ்பக்குல்லா கான் இந்திய சுதந்திர போராட்டத்தின் முக்கியமான ஒரு தலைவராக இருந்தார். நீதிமன்ற விசாரணையில் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சந்திரசேகர் ஆசாத், சச்சின்தாரி, ராஜேந்திர லகிரி ஆகியோர் 1925 ஆம் ஆண்டு நடத்திய ககோரி ஆயுத கொள்ளையில் இவர் தன் நண்பர் ராம் பிரசாத் பிஸ்மால் உடன் பங்குபெற்று ஆயுத புரத்தச்சியில் ஈடுப்பட்டார். அதுமட்டுமின்றி ஹிந்துஸ்தான் ரிப்பளிக் அஸோசியேஷன் உடைய முக்கிய தலைவராகவும் இருந்தார். 1927 டிசம்பர் 19 அன்று இவர் தூக்கிலடப்பட்டார்.

ராஜ் குமாரி குப்தா

ராஜ் குமாரி குப்தா

ககோரி ஆயுத கொள்ளையின் முக்கிய வீரராக இருந்தவர் ராஜ் குமாரி குப்தா, போராட்டக்காரர்களுக்கு ஆயுதங்களை வழங்கினார். மேலும் போராட்டக்காரக்ளுக்கு தன்னுடைய வீட்டில் தங்க இடமளித்தார். இவரின் இந்த செயலுக்காக தன் கணவரின் குடும்பத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டார்.

சுரேந்திர சாய்

சுரேந்திர சாய்

மேற்கு ஒடிசாவை ஆங்கிலேயர்களிடம் இருந்து பாதுகாக்க சிரைச்சியிலேயே தன் வாழ்க்கையை இழந்தார்சுரேந்திர சாய். இவர் சம்பல்பூரின் இளவரசராக இருந்தார், ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை மீறி பழங்குடியின மக்கள் தங்கள் உரிமைகளை பெற உதவினார். 1862 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவர் 20 ஆண்டுகள் சிறைக்குள்ளேயே இருந்தார்.

சிடோ மற்றும் கனு முர்மு

சிடோ மற்றும் கனு முர்மு

சிடோ மற்றும் கனு முர்மு என்ற இரு சகோதரர்கள் 1855 ஜூன் 30 அன்று 10,000 போராட்டக்காரர்களை திரட்டி ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுத கிளர்ச்சியை தொடங்கினர். ஆரம்பத்தில் இவர்களின் முயற்சி வெற்றியடைந்தாலும் இவர்களின் வில் மற்றும் அம்பு கொண்டு ஆங்கிலேயர்களின் துப்பாக்கியை எதிர்கொள்ள முடியவில்லை, இறுதியில் இவர்களின் கிளர்ச்சி தோல்வியில் முடிந்தது.

லட்சுமி சாகல்

லட்சுமி சாகல்

இந்திய தேசிய இராணுவத்தின் அனைத்து பெண்களின் ஜான்ஸி படைப்பிரிவின் தலைவராக, இந்திய வரலாற்றில் லட்சுமி சால்கல் ஒரு முக்கியபங்கு வகித்தார். இவர் ஆசாத் அமைத்த ஹிந்தி அரசாங்கத்தில் பெண்கள் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 1940 ல் சிங்கப்பூரில் ஏழைமக்களுக்காக மருத்துவமனையை திறந்த இவர் பின்னாளில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார்.

பேகம் ஹஸ்ரத் மஹால்

பேகம் ஹஸ்ரத் மஹால்

தனது கணவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நாடுகடத்தப்பட்டபோது, பேகம் ஹஸ்ரத் மஹால் 1857 நடைபெற்ற கலகத்தில் முக்கிய பங்கு வகித்தார். கலகம் உச்சகட்டத்தை நெருங்கியபோது இவர் லக்னோவை தன்னுடய பொறுப்பில் எடுத்துக்கொண்டார். இறுதியில் கிளர்ச்சி நசுக்கப்பட்டபோது நேபாளத்தில் தலைமறைவானார்.

பிர்ஸா முண்டா

பிர்ஸா முண்டா

பிர்ஸா முண்டா பழங்குடியினரின் கிளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார், இவரை பின்பற்றுபவர்கள் இப்பொழுதும் ஜார்கண்ட் மற்றும் பீகாரில் இருக்கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சியை 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் எதிர்த்த இவர் தன் 25வது வயதில் போராடும்போது உயிநீத்தார்.

பீர் அலி கான்

பீர் அலி கான்

பீர் அலி கான் 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற கிளர்ச்சியின் முக்கிய புரட்சியாளராக இருந்தார் மேலும் மற்றவர்களையும் போராட்டத்தில் ஈடுபட ஊக்குவித்தார். கலகத்தை வழிநடத்தியதற்காக இவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இவரை போன்ற பல தியாகிகள் பின்னாளில் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

12 forgotten freedom fighters of India

In India, historical figures such as Mahatma Gandhi or Subhas Chandra Bose do come often among those lists. However, there are many other freedom fighters have largely been forgotten by most Indians.
Desktop Bottom Promotion