For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதுவரை மனிதர்களே செல்லாத செவ்வாய் கிரகத்திற்கு முதன் முதலாக செல்லப்போவது இவர் தான்!

செவ்வாய் கிரகத்திற்கு பயணிக்கும் முதல் நபர் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்.

|

விண்வெளி பயணம் என்பது மிகவும் சுவாரஸ்யமானது. பள்ளிச் செல்லும் வயதில் பலருக்கும் ஓர் விண்வெளி வீரராக வேண்டும் என்ற கனவு எட்டிப் பார்த்திருக்கும்.

சாகசப்பயணமான விண்வெளிப் பயணம் மேற்கொள்வது என்பது அவ்வளவு எளிமையான காரியம் அல்ல என்பதே பலருக்கும் இது ஓர் எட்டாக்கனியாக இருக்கிறது. இங்கே பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். குழந்தைகள் படித்து முடித்ததும் வேலைக்குச் செல்ல வேண்டும். கைநிறைய சம்பளம் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் பெரும்பாலான பெற்றோர்களுக்கும் இப்படியொரு துறை இருப்பதே தெரியாமல் இருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

விண்வெளிக்கு செல்லும் வீரர் வீராங்கனைகள் உயிருடன் தான் திரும்புவார்கள் என்ற எந்த உத்திரவாதமும் இல்லாததால் விண்வெளி பயணம் மேற்கொள்கிறவர்களுக்கு மிகுந்த உற்சாகம் அளிக்கப்படுகிறது. இதுவரை மனிதன் செல்லாத செவ்வாய் கிரகத்திற்கு புதிதாக மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டிருக்கிறது.

2033 ஆம் ஆண்டு மேற்கொள்ளவிருக்கும் இந்த பயணத்தில் செவ்வாய் கிரகத்திற்கு முதன் முதலாக சென்று சாதனை படைக்கப் போவது ஒரு பெண்!

#2

#2

அலிசா கார்சன் என்ற பதினேழு வயதுடைய மாணவி இப்போதிருந்தே விண்வெளி பயணத்திற்கான பயிற்சிகளை ஆரம்பித்துவிட்டார்.

விண்வெளி வீரராக வேண்டும் என்கிற அவரது கனவை நோக்கி அவர் ஆரம்பித்த பயணம் ஓர் வரலாற்று சாதனையாக மாறப்போகிறது.

விண்வெளிக்குச் செல்ல நாசா தனியாக பாஸ்போர்ட் வழங்கும். அந்த பாஸ்போர்ட் வாங்குவது அவ்வளவு எளிமையானது அன்று. தொடர்ந்து உடற்தகுதி மற்றும் தேர்வுகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மருத்துவர்களும் நீங்கள் ஃபிட் என்று சான்றிதழ் கொடுக்க வேண்டும்.

#3

#3

நாசாவின் விசிட்டர் சென்ட்டர்களில் இதற்கென்ற பிரத்யோக பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இப்படி பயிற்சி எடுப்பவர்களில் மிகவும் இளவயது உடையவர் தான் இந்த அலிசா.

தன்னுடைய கனவுக்கு மொழி ஒரு தடையாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக பள்ளியில் படிக்கும் போது நான்கு மொழிகளையும் அதாவது ஆங்கிலம்,சைனீஸ்,ஃபிரஞ்ச் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிப்பாடங்களை படித்திருக்கிறார்.

#4

#4

அலிசா ஹை ஸ்கூல் முடிப்பதற்குள்ளாகவே விண்வெளி பயணத்திற்கான பயிற்சி மையத்தில் சீட் கிடைத்துவிட்டதால் இனி இதுவே என் வாழ்க்கை என்று இருப்பேன். எனக்கென்று ஒரு வாழ்க்கை திருமணம், குடும்பம், குழந்தைகள் போன்ற எமோஷனல் பக்கங்களுக்கு என் வாழ்க்கையில் இடமில்லை என்று திட்டவட்டமாக கூறுகிறார் அலிசா.

கனவை அடையவேண்டுமென்றால் சில தியாகங்களை கண்டிப்பாக செய்தாக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

 #5

#5

அலிசா தொடர் பயிற்சியில் கவனம் செலுத்தி வந்தால் பலருக்கும் தன்னம்பிக்கை அளிப்பவராக வலம் வருகிறார். மாணவர்கள் மத்தியில் விண்வெளி ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கனவை நோக்கி ஓடுங்கள். உங்களது கனவுக்கு அதிக முக்கியத்தும் கொடுங்கள் என்று பேசி வருகிறார் அலிசா.

இதற்கு முன்னால் விண்வெளிப் பயணம் மேற்கொண்ட அத்தனை பேரும் என்னுடைய இன்ஸ்பிரேசன் தான். அவர்களால் முடியும் போது என்னால் முடியாதா? நான் செல்வதற்கு ஒரு பாதையை வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள் என்கிறார் அலிசா.

#6

#6

அலிசாவிற்கு மூன்று வயதான போது டிவியில் "The Backyardigans" என்ற தொடர் ஒளிபரப்பாகியிருக்கிறது. அதை விளையாட்டாய் வீட்டில் இருந்தவர்கள் அலிசாவிற்கு காட்ட அப்போதிருந்து அங்கு செல்ல வேண்டும் என்று அடம்பிடிக்கத் துவங்கியிருக்கிறார்.

பெற்றோரும் போக்கு காட்டி அன்றைக்கு சமாதானம் செய்தாலும் அந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற கனவு மட்டும் அப்படியே இருந்திருக்கிறது. அந்த இடம் தான் செவ்வாய் கிரகம். இவ்வளவு ஆண்டுகள் கழித்து 2033 ஆம் ஆண்டு அலிசாவின் கனவு நிறைவேறப்போகிறது.

#7

#7

இவருக்கு அப்பா கார்சன் பயங்கர சப்போர்ட்!. மகளின் கனவு மெய்ப்பட தன்னால் முடிந்தளவிலான ஆதரவையும் உதவியையும் அளித்து வருகிறார் தந்தை. 2008 ஆம் ஆண்டு அப்பா கார்சன் தான் அலிசாவின் பெயரை ஸ்பேஸ் கேம்ப்பில் கொடுத்திருக்கிறார்.

அடுத்தடுத்து நாசாவின் மூன்று ஸ்பேஸ் கேம்புக்கும் சென்று வரும் சந்தர்ப்பம் வாய்த்தது.

#8

#8

அடுத்த ஐந்தாண்டுகளில் நாசாவின் பார்போர்ட் ப்ரோகிராமை நிறைவு செய்தார். தன் கனவை அடைய வேண்டும் என்ற வெறியுடன் களமிறங்கியிருக்கும் அலிசா அதற்காக இழந்தது விட்டுக் கொடுத்தது ஏராளம்.

இந்த பயிற்சிகளை வழங்கும் அட்வான்ஸுடு போசும் அகாதெமியில் தேர்ச்சி பெறும் மிக இளவயது வீராங்கனை அலிசா தான். இங்கு தேர்ச்சி பெற்றால் தான் விண்வெளி பயணம் மேற்கொள்ள முடியும் தொடர்ந்து அஸ்ட்ரானட் பயிற்சி மேற்கொள்ள முடியும்.

 #9

#9

இந்த பயிற்சி மையத்தில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் விண்வெளி வீரராக அலிசாவால் தற்போது பதிவு செய்ய முடியாது. ஏனென்றால் விண்வெளி வீரராக பதிவு செய்ய வேண்டுமென்றால் குறைந்தபட்சம் வயது பதினெட்டு ஆகியிருக்க வேண்டும்.

சர்வதேச விண்வெளி பல்கலைக்கழகத்தில் சேரப்போகிற இளவயது வீராங்கனை அலிசா தான்.

#10

#10

அலிசாவின் சவாலே நேரம் தான். அலிசா வயது குழந்தைகள் ஸ்பேஸ் கேம் விளையாட்டில் தீவிரமாக இருக்கும் போது அலிசா அந்த விண்வெளிக்கே செல்ல ஆயுத்தமாகிறார்.

அதற்கான மிக இளவயதிலிருந்து தயாராக துவங்கிவிட்டார். அலிசா ப்ளூபெர்ரி என்ற பெயரில் ஒரு தன்னார்வ நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார். இதன் முக்கிய நோக்கம் மாணவர்கள் மத்தியில் விண்வெளி ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது. உங்களது கனவை தொடர்ந்து பின் தொடருங்கள் உங்கள் கனவை பிறர் திருடிக் கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள் என்று எல்லாருக்கும் மெசேஜ் சொல்கிறார் அலிசா.

Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

First Person Who Travel To Mars

First Person Who Travel To Mars
Desktop Bottom Promotion