For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரதமர் போலி ப்ரோமொஷனில் சிக்கி சின்னாப்பின்னமாகிய போது... - புகைப்படத் தொகுப்பு!

பிரதமர் போலி ப்ரோமொஷனில் சிக்கி சின்னாப்பின்னமாகிய போது... - புகைப்படத் தொகுப்பு!

|

மோடி, நிஜமாகவே 2014ம் ஆண்டு இந்தியாவின் பெரும்பாலான மக்களால் எதிர்பார்க்கப்பட்ட மாற்று. மோடி நிச்சயம் பெரிய மாற்றம் கொண்டுவருவார் என்றே இந்திய இளைஞர் எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர் சொன்ன ஒவ்வொரு வங்கி கணக்கிலும் 15 இலட்சத்தை விட, அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்பதையே பெரும் கனவாக கொண்டிருந்தனர். ஆனால், மோடியின் ஆட்சியில் மாற்றம் கண்ட ஒரே விஷயம் பணம் தான்.

Fake Promo Posters and Photos of Modi!

பணமதிப்பிழப்பு! அதுவும் ஆரம்பத்தில் ஆஹா... கருப்பு பணத்தை ஒழித்து விடலாம் என்று கருதினார்கள்... ஆனால், ஒழிந்தது என்னவோ சில மக்களின் உயிரும், சேமித்த பணமும் தான். மோடியின் ஆட்சியில் நல்லதே நடக்கவில்லை என்று யாரும் கூறவில்லை. ஆனால், சதவிகிதம் என்று எடுத்துப் பார்த்தால்... அதில் மக்களை வேதனைப்படுத்தும் சாதனைகள் தான் அதிகமாக இருக்கிறது.

பெட்ரோல் லிட்டர் ஐம்பது ரூபாய் கொண்டுவார் என்று பார்த்தால்... இன்னும் ஓரிரு மாதத்தில் இந்தியாவில் அரைலிட்டர் பெட்ரோ தான் ஐம்பது ரூபாய்க்கு கிடைக்கும் போல. சரி! என்ன பண்றது நமக்கு இதெல்லாம் பழகி போச்சு. ஆனாலும், மோடியின் பெயர் பயன்படுத்தி செய்யப்பட்ட இந்த போலி பிரமோஷனை மட்டும் மறந்துவிடாதீர்கள். இது 2019லும் கூட தொடர வாய்ப்புகள் உண்டு. உஷாரய்யா... உஷாரு....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
துப்புரவு செய்யும் மோடி!

துப்புரவு செய்யும் மோடி!

மோடி தேநீர் விடுதியில் பணியாற்றியவர் என அவரது பிரச்சாரங்களில் இருந்து, நேரடியாக அவரே பேசியது வரை பெரிதும் அனைவரும் அறிந்துள்ளனர். இதை அவரே பெருமிதமாக கூறிக் கொண்டதும் உண்டு. இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதற்கு உதாரணமாக தன்னையே அடிக்கோடிட்டு காண்பித்துக் கொண்டிருக்கிறார் மோடி அவர்கள்.

அதே சமயத்தில் மோதி அவர்கள் அரசியலில் சேர்ந்த ஆரம்பத்தில் துப்புரவு மற்றும் சமையல் வேலை செய்து வந்ததாக அறியப்படுகிறது. கட்சி வட்டாரங்கள் இதை உண்மை என்று கூறினும், இந்த செய்தியை கூறி பரப்பப்பட்ட இந்த புகைப்படம் முற்றிலும் போலியானது.

MOST READ: இனிமே டீ குடிக்கறதுக்கு முன்னாடி இதையெல்லாம் நியாபகம் வச்சுகங்க

நமாஸ்!

நமாஸ்!

துர்க்மெனிஸ்தானின் அதிபரை ஆஷ்காபாத் என்ற இடத்தில் சந்தித்தார் மோடி அவர்கள். அப்போது அவர்கள் நமாஸ் செய்வது போன்ற புகைப்படம் ஒன்று வெளியானது. மோடி அவர்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர், இவரது கட்சி இந்து மதத்தை மட்டுமே சார்ந்திருக்கிறது என்ற செய்திகள் தொடர்ந்து அனைவராலும் கூறப்படும் ஒரு செய்தி.

ஆனால், மோடி துர்க்மெனிஸ்தானின் அதிபருடன் சேர்ந்து நமாஸ் செய்தார் பாருங்கள் என்று இவரது ஆதரவாளர்களால் இப்படியான ஒரு படம் வெளியானது. ஆனால், உண்மையில் மோடி கைக்கட்டி தான் நின்றுக் கொண்டிருந்தார்.

சென்னை வெள்ளம்

சென்னை வெள்ளம்

2015ல் சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு உண்ண உணவின்று, வெளியே செல்ல முடியாமல் மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.

அச்சமயத்தில் தேசிய ஊடகங்கள் என்று கூறிக்கொள்ளப்படும் வட நாட்டு ஊடகங்கள் சென்னை வெள்ளத்தை ஆரம்ப நாட்களில் கண்டுகொள்ளவே இல்லை. அப்போது பிரதமர் ஒருநாள் சென்னை வெள்ளத்தை பார்வையிட வான்வழியில் வந்து சென்றார்.

அப்போது அவர் சென்னை வெள்ளத்தை பார்வையிடுவதை போன்ற ஒரு படம் வெளியானது. அதில் ஜன்னல் வழியே சென்னை வெள்ளத்தின் வேறொரு புகைப்படத்தை போட்டோஷாப் செய்து இந்திய அரசின் செய்தி குழுமமே வெளியிட்டது. இது அப்பட்டமாக போலி என தெரியவர... அனைவரும் சகட்டுமேனிக்கு திட்டித் தீர்த்தனர்.

இஸ்ரேலில்!

இஸ்ரேலில்!

இது மிஷன் மோடி 2019 எனும் மோடி ஆதரவாளர் பக்கமாகும். இது அதிகாரப் பூர்வமற்ற பக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பக்கத்தில் இஸ்ரேலை சேர்ந்த ஸ்ட்ரீட் ஆர்டிஸ்ட் எனப்படும் கலைஞர்களில் ஒருவர் மோடியின் படத்தை தரையில் வரைந்துக் கொண்டிருப்பது போல பதிவு பகிர பட்டது.

ஆனால், இது விக்கிமீடியாவில் இருந்து எடுக்கப்பட்ட படத்தின் போட்டோஷாப் பிரதி ஆகும். இப்படியாக அரசு ஒருபுறமும், ஆதரவாளர்கள் ஒருபுறமும் மோடியின் பெயரில் போலிகளை வெளியிட்டு ப்ரோமோஷன் செய்து வருகிறார்கள். இதுவும் நான்காண்டு சாதனை பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய முக்கியம்சம் ஆகும்.

ஒபாமாவுக்கே!

ஒபாமாவுக்கே!

உண்மையில் ஒபாமா எகிப்திய தலைவர் ஹோஸ்னி முபாரக் என்பவர் பேசுவதை தனது அலுவலகத்தில் இருந்து திரையில் காண்பது போன்ற படமாகும். ஆனால், மோடியின் ஆதரவாளர்கள் மோடியின் பேச்சை ஒபாமா பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது போல போட்டோஷாப் செய்து பகிர்ந்தனர். இதில் ஒபாமாவே மோடியின் பேச்சை கேட்கிறார் என்று கேப்ஷன் வேற வைத்திருந்தனர். எதுக்க்க்கு!!!!!

MOST READ: உங்களின் இந்த செயல்கள் மஹாலக்ஷ்மியின் சாபத்தை மட்டும்தான் பெற்றுத்தரும்

சில முகநூல் பக்கங்கள் வேறு!

சில முகநூல் பக்கங்கள் வேறு!

இதெல்லாம் போக மோடியின் புகழ் பாடும் சில முகநூல் பக்கங்களும் இருக்கின்றன. அதே போல இதற்கு சமமாக டிரால் செய்யும் பக்கங்களும் இருக்கிறது என்பது வேறு கதை.

சரி நம்ம கதைக்கு வருவோம். இஸ்ரேல் வரலாற்றில், அவர்களது பாராளுமன்றத்தில் இந்தியாவின் கொடியும் சேர்ந்து பறக்கவிடப்பட்டது. மோடியின் வருகையை பாராட்டி அவர்கள் இப்படியான செயலை செய்துள்ளனர் என்று மோடியை புகழந்து, அவரது வரலாற்று சாதனையில் இதை இணைத்தனர் அவர்களது ஆதரவாளர்கள். இதுவும் போலியே...

பிரச்சாரங்களின் போது..

பிரச்சாரங்களின் போது..

இதெல்லாம் போக... 2014ம் ஆண்டு பிரச்சாரத்தின் போது மோடியின் சாதனைகள், வரலாறு, ஆதரவு பெருங்கூட்டம் என பல போட்டோஷாப் செய்யப்பட்ட படங்கள் அதிகாரப்பூர்வமாகவும், அதிகாரப் பூரவமற்ற பக்கங்களிலும் வெளியாகின.

அதற்கு இதுவும் ஒரு சாம்பிள். கொஞ்சம் நல்ல கம்பெனியா பார்த்து போட்டோஷாப் செய்ய கொடுத்திருக்கலாம். அப்பட்டமா தெரியிற மாதிரியா கொடுக்கிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fake Promo Posters and Photos of Modi!

Modi is second most popular political leader on facebook. and Third most popular world leader in twitter. But, at the same time several times fake stories has been spreaded in his name. and those gone viral on interner and in social media platforms. Thats what here we gonna see.
Desktop Bottom Promotion