For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரஷித் கானும் ஒருவகையில ஆறு சாமி தான்... வியக்க வைக்கும் உண்மைகள்!

ரஷித் கான் பற்றிய பலரும் அறியாத சில வியத்தகு உண்மைகள்!

By Staff
|

நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு இந்தியாவில் சல்மான் கான், அமீர் கான், ஷாருக் கானை விட அதிகம் நேசிக்கப்படும் நபராக உருவெடுத்திருப்பவர் ரஷித் கான்.

பாலிவுட் கான்களுக்கு கூட எதிர்ப்பவர்கள், வெறுப்பவர்கள் இருக்கலாம். ஆனால், பால் வடியும் முகம் கொண்ட ரஷித் கானை வெறுக்கும் கிரிக்கெட் ரசிகர்களே இல்லை.

தனது திறமை மூலம் இந்திய ரசிகர்களை ஈர்த்த வெகு சில வெளிநாட்டு வீரர்களில் ரஷித் கானும் ஒருவர். உலகின் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் போன்ற இருபது ஓவர் போட்டிகளில் அதிக விலைக்கு வாங்கப்படும் வீரர்களில் ரஷித் காணும் இடம் பெற்று வருகிறார்.

பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்திலும் ரஷித் கான் கலக்குவதால்... இவரை ஏலத்தில் எடுக்க அணி உரிமையாளர்கள் போட்டாப் போட்டி போடுகிறார்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குடும்பம்!

குடும்பம்!

ரஷித் கான் ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் என்ற சிறிய பகுதியில் பிறந்து வளர்ந்தவர். பிறந்தது சிறிய கிராமத்தில் என்றாலும்... இவரது குடும்பம் மிகப் பெரியது. ரஷித் கானுடன் பிறந்தவர்கள் ஐந்து சகோதரர்கள், நான்கு சகோதரிகள். சகோதரர்களில் இவர் தான் இளையவர்.

தனது திறமையால் 17 வயதிலேயே தேசிய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார் ரஷித் கான். ரஷித் கானின் உழைப்பு அவரை எந்த வாய்ப்புக்காகவும் காத்திருக்க வைக்கவில்லை.

இளம் வீரர்!

இளம் வீரர்!

17 ஆண்டுகள் 36 நாட்களில் ஆப்கான் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தான் மூலம், தேசிய அணியில் இடம் பிடித்த இளம் வீரர் என்ற பெருமையும் பெற்றார் ரஷித் கான். முதலில் இருபது ஓவர் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட ரஷித் கான், தனது விக்கெட் வேட்டை மூலம் சீக்கிரமே ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான தேசிய அணியிலும் இடம் பிடித்தார்.

உலகக் கோப்பை!

உலகக் கோப்பை!

கடந்த 2016ம் ஆண்டு நடந்த 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஐம்பது ஓவர்கள் உலகக் கோப்பை போட்டியில் ஆறு போட்டியில் பத்து விக்கெட்டுகள் சாய்த்து... தனது நாட்டுக்காக உலக கோப்பை போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். இவருக்கு முன்னர் நவீன்-உல்-ஹாக் மற்றும் கரீம் ஜானத்தும் இதே சாதனையை நிகழ்த்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடுமை!

கடுமை!

ஐந்து சகோதரர்களுடன் பிறந்து வளர்ந்த ரஷித் கான் மிக கடினமான சூழலை கடந்து வளர்ந்தவர். இவரது சகோதரர்கள் அனைவருமே கிரிக்கெட் விளையாடி வந்தவர்கள் தான். சிறு வயது முதலே தன்னை விட வயது அதிகமானவர்களுடன் கடுமையான அழுத்தத்துடன் கிரிக்கெட் விளையாடி வந்தவர் ரஷித் கான்.

இது தான் எப்படியான கடுமையான சூழலாக இருந்தாலும் அதை ரஷித் கான் எளிமையாக கையாள இன்று உதவுகிறது. இதனால் சிறிய அணி, பெரிய அணி என்ற வேறுபாடு இன்றி அனைவருடனும் தனது ஒட்டுமொத்த திறனையும் வெளிப்படுத்துகிறார் ரஷித் கான்.

காஸ்ட்லி வீரர்!

காஸ்ட்லி வீரர்!

ஐபிஎல் போன்ற வெளிநாட்டு இருபது ஓவர்கள் போட்டிகளில் பங்கெடுத்து வருகிறார் ரஷித் கான். கடந்த ஐபிஎல் போட்டியில் இவர் ஐதராபாத் அணிக்காக நான்கு கோடிகள் கொடுத்து வாங்கப்பட்டார். அதே போல கரீபியன் லீக் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி இவரை அறுபதாயிரம் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்பதை தாண்டி, சிக்சஸ்ர்கள் விளாசும் அளவுக்கு இவர் அதிரடி பேட்ஸ்மேனும் கூட. ஃபீலிடிங்கிலும் அசத்துவது ரஷித் கானின் சிறப்பு.

சாதனைகள்!

சாதனைகள்!

இருபது ஓவர் போட்டிகளில் இவர் மூன்று ரன்கள் கொடுத்து அறிந்து விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இது மூன்றாவது சிறந்த பந்துவீச்சாகும். மேலும், முதல் இரண்டு ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே பந்து வீச்சாளர் ரஷித் கான் தான்.

குரு!

குரு!

கிரிக்கெட்டில் தனது மானசீக குருவாக ரஷித் கான் கருதுவது பாகிஸ்தான் அணியின் ஆல் -ரவுண்டட் வீரர் பூம், பூம் ஷாஹித் அப்ரிடியை தான். ரஷித் கானுக்கு பிடித்த மைதானம் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானம். இதுவரை ரஷித் கான் அந்த மைதானத்தில் விளையாடுதில்லை என்று அறியப்படுகிறது.

எப்போதுமே தனது நாட்டு வீரர்களின் விக்கெட்டை எதிரணி வீரர் வீழ்த்தினால் அவர் மீது கோபம் தான் வரும். ஆனால், ரஷித் கான் விக்கெட்டுகள் சாய்க்கும் போது அனைவரும் கிரிக்கெட் ரசிகராக இருந்து அவரை பாராட்டுகிறார்கள்.

வில்லியர்ஸ்க்கு அடுத்து...

வில்லியர்ஸ்க்கு அடுத்து...

எ.பி. டி வில்லியர்ஸ்க்கு அடுத்தாக உலக கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் வெகு சில வீரர்களில் ரஷித் காணும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் இவரது ஆல்-ரவுண்டட் திறனை கண்டு சில ரசிகர்களை ஷாருக்கானை கொடுக்கிறோம்... ரஷித் கானை எங்களுக்கு கொடுத்து விடுங்கள் என்று கேளிக்கையாக பதிவுகள் எல்லாம் சமூக தளங்களில் பகிர்ந்திருந்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts and Biography about Afghan Cricketer Rashid Khan

After AB De Villiers, Rashid khan is among very few cricker who has a huge fan base on world wide. No True Cricket fan will hate Rashid khan. He is simply a world class cricker on current era.
Desktop Bottom Promotion