For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரொபைனால் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தால் கண்டுபிடிக்க முடியாது என்பது உண்மையா?

போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்வது அதிகரித்து வரும் நிலையில் அதற்காகவே அதிகம் பயன்படுத்தப்படுகிற மருந்தைப் பற்றியும் அதன் தாக்கத்தைப் பற்றியும் பல உண்மைகள்

|

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் இன்று அதிகரித்து விட்டது. அதில் முக்கியமாக பார்க்கப்படுவது குடிக்கிற ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து அவர்களை மயக்கமுறச் செய்து பாலியல் வன்கொடுமை செய்வது.

மேலை நாட்டு கலாச்சாரங்கள் ஊடுருவியிருக்கும் சூழலில் பார்ட்டி மோகமும் கூடவே சேர்ந்து வளர்ந்தது, இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தவர்கள் பெண்களை ஏமாற்றி போதை மருந்து கொடுத்து தங்களது பாலியல் இச்சைகளை தீர்த்துக் கொண்டார்கள். பல ஆண்டுகளாக வாட்சப்பில் ஒரு குறுஞ்செய்தி தொடர்ந்து ஃபார்வேர்டு செய்யப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாட்சப் செய்தி :

வாட்சப் செய்தி :

அதாவது ரொபைனால் என்ற மருந்து இருக்கிறது. அந்த மருந்தை நாம் குடிக்கும் எந்த பொருட்களுடனும் கலக்கலாம். கலந்தாலும் அது நிறமாறாது, சுவை மாறாது அதனால் கண்டுபிடிப்பது கடினம். அதை விட அதை குடித்தவுடன் நமக்கு ஏற்பட்டுவிடும்.

வெளியிடங்களுக்கு செல்லும் பெண்கள் கவனமாக இருக்கவும், வெளியில் எதையும் வாங்கிச் சாப்பிட வேண்டாம் என்றும் இன்னும் பல பயமுறுத்தும் செய்திகளை சேர்த்தே அனுப்பியிருப்பார்கள்.

பாலியல் வன்கொடுமை :

பாலியல் வன்கொடுமை :

பாலியல் வன்கொடுமை வகைகளில் போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்வது என்ற தனி பிரிவே இருக்கிறது. பெண்களுக்கு எதிராக நடக்கிற பாலியல் வன்கொடுமைகளில் போதை மருந்து அல்லது மது கொடுத்து பெண்களை மயக்கமுறச் செய்வது அதிகமாக நடக்கிறது.

இதனை Drug-facilitated sexual assault என்று குறிப்பிடுகிறார்கள்.

1938 :

1938 :

இந்த போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்வதெல்லாம் இப்போதைய கண்டுபிடிப்புகளால் வந்ததல்ல பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே நடக்கிறது. 1938 ஆம் ஆண்டு வெளியான பைக்மலின் என்ற ஆங்கிலத் திரைப்படத்தில் போதை மருந்து கொடுத்து ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்வதாக ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும்.

அந்த காட்சி நிஜ சம்பவத்தினை தொடர்ந்தே வைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுவதுண்டு.

ரொபைனால் :

ரொபைனால் :

இதனை க்ளப் ட்ரக் என்றே அழைக்கிறார்கள். இந்த பெயர்களைத் தவிர பல பெயர்களில் இந்த மருந்து வழங்கப்படுகிறது. ரொபைனால் என்பது இந்த மருந்தை தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர். உண்மையில் இந்த மருந்தின் பெயர் flunitrazepam.

இதைச் சாப்பிட்டவுடன் முதலில் நம் நரம்பு மண்டலத்தை பாதிக்கும்.அதோடு ரத்த ஓட்டத்தை குறைக்கும் இதனால் மயக்கம் வருகிறது.

தடை :

தடை :

இந்த மருந்தை அமெரிக்கா தடை செய்திருக்கிறது. பல நாடுகளில் இந்த மருந்தை மருத்துவ காரணங்களுக்காக, தூக்க மாத்திரையாக பயன்படுத்த அனுமதியிருக்கிறது. இதனை டேட்டிங் ரேப் மருந்து என்று சொல்கிறார்கள் காரணம் பார்ட்டி,நைட் க்ளப் போன்ற இடங்களில் இந்த மருந்து கலந்த பானத்தை கொடுத்து பாலியல் வன்கொடுமை நடக்கிறது.

இந்த மருந்து கொடுப்பதினால் உங்களை செயலிழக்க வைத்திடும் அதோடு உங்களால் எந்த எதிர்வினையும் ஆற்ற முடியாது.

பயன்பாடு :

பயன்பாடு :

சிறிய வெள்ளை நிற மாத்திரை வடிவில் இருக்கும். தண்ணீரில் போட்ட உடனேயே கரைந்திடும். சுவை மாறுவதோ அல்லது நிறம் மாறுவது என எதுவும் இருக்காது. இதை நீங்கள் எந்த வடிவில் எடுத்துக் கொண்டாலும் இதன் வீரியம் குறையாது.

சிலர் போதைக்காக இந்த மருந்தை பயன்படுத்துவதுண்டு. இந்த மருந்தை சாப்பிட்ட பிறகு இரண்டு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை நீங்கள் மயக்கத்தில் தான் இருப்பீர்கள்.

பரிசோதனை :

பரிசோதனை :

மயக்கம் தெளிந்து நீங்கள் இருக்கும் இடம், புறச்சூழல் ஆகியவற்றை வைத்து தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை நீங்கள் உணர்வீர்கள். சிறுநீர் பரிசோதனையின் மூலமாக உங்களுக்கு என்ன போதை மருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை கண்டறியலாம்.

சம்பவம் நடந்து 48 மணி நேரத்திற்குள் சிறுநீர் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

பிரச்சனை :

பிரச்சனை :

ரொபைனால் தவிர எண்ணற்ற போதை மருந்துகள் சந்தைகளில் கிடைக்கிறது ஆனால் இந்த ரொபைனால் மட்டும் ஹைலைட்டாக சொல்லப்படுவதற்கு காரணம், சாதரணமாக போதை மருந்து இருக்கிறதா என்பதை சிறுநீர் பரிசோதனையின் மூலம் கண்டறியலாம். ஆனால் ரொபைனால் மருந்து கொடுக்கப்பட்டிருந்தால் அந்த சிறுநீர் பரிசோதனையின் மூலமாக கண்டறிய முடியாது.

இதற்கென்று பிரத்யோக டெஸ்ட் இருக்கிறது அதன் மூலமாக மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

நெகட்டிவ் :

நெகட்டிவ் :

சாதரணமாக மேற்கொள்ளப்படுகிற டெஸ்ட்களில் ரொபைனால் நெகட்டிவ் என்றே காட்டும். இந்த ரொபைனால் டெஸ்ட் தலைமுடி,ரத்தம் ஆகியவற்றிலிருந்து பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு கேஸ் க்ரோமோட்கிராபி மற்றும் மாஸ் ஸ்பெக்டோமெட்ரி ஆகிய முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

கண்டுபிடிக்க :

கண்டுபிடிக்க :

பொதுவாக இந்த மருந்து சிறிய வெள்ளை நிற வடிவத்தில் இருக்கும். இல்லையென்றால் இளம் பச்சை நிறத்தில் இருக்கும். சமீபத்தில் வெளியாகக்கூடிய ரொபைனால் மருந்துகள் ஓவல் வடிவத்தில் இருக்கிறது. இந்த மருந்தை தண்ணீரில் போட்டவுடன் கரையத் துவங்கும். நீரின் நிறத்தை இன்னும் அடர்த்தியாக மாற்றிக் காட்டும். சில நேரங்களில் குடிக்கும் பானத்தில் புகை கலந்தது போல ஸ்மோக்கியாக தெரியும்.

டார்க் வண்ணத்தில் இருக்கிற பானங்கள், வெளிச்சம் இல்லாத இடங்களில் இவற்றை அடையாளம் காண்பது கடினம். இவற்றை மாத்திரை போட்டவுடன் தான் அந்த மாற்றங்களை அவதானித்தால் உண்டு முழுவதும் கரைந்தவுடன் என்றால் உங்களால் எந்த மாற்றங்களை கண்டுபிடிக்க முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Facts about Date Rape Drug Rophynol

Facts about Date Rape Drug Rophynol
Story first published: Tuesday, April 24, 2018, 16:00 [IST]
Desktop Bottom Promotion