For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கரும், ஹோட்டலில் நடந்த அவமானமும்... - ரீலு அந்து போச்சு #001

அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கரும், ஹோட்டலில் நடந்த அவமானமும்... - ரீலு அந்து போச்சு #001

|

இன்டர்நெட் வளர்ந்த போது, அதனுடன் சேர்ந்து உடன் பிறவா சகோதரர்களாக சிலவன பிறந்து வளர்ந்தன... திருட்டு, காப்பி, பேஸ்ட் செய்து பிறர் பதிவுகளை தங்கள் பெயரில் வெளியிடுதல், போலி கட்டுக்கதைகளை சிறந்த திரைக்கதை அமைத்து பரப்புதல்.. வெரிஃபைடு என்ற ஹாஷ் டாக்குடன் புருடா... உதார் தகவல்களை பரப்புதல், இன்னும் பல...

Fact Check: Arnold Schwarzenegger sleeping in Front of his Statue

பிற ஊடக பிரிவுகளில் வெளியாகும் செய்திகளை தான் சரியான தெளிவு இல்லாததால் சொல்வதை மக்கள் அப்படியே நம்பி ஏமார்ந்து பகிர்கிறார்கள் என்று பார்த்தால். ஆன்லைன் ஊடகத்தில் படித்து நல்ல பதவியில் இருப்பவர்களும் கூட இப்படியான சிலர் புருடா கதைகளை நம்பி சமூக ஊடகங்களில் பரப்புகிறார்கள்.

அந்த வகையில் பதவியும், புகழும் இழந்த பிறகு அர்னால்டுக்கு நிகழ்ந்த சோகக் கதை என அவ்வப்போது சமூக ஊடங்கங்களில் பரவும் வைரல் பதிவு எத்தனை சதவிதம் பொய், அதில் நிறைந்திருக்கும் உதார் விஷயங்கள் என்னென்ன என்று இந்த ரீலு அந்து போச்சு #001 தொகுப்பில் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அந்த வைரல் உதார் பதிவு...

அந்த வைரல் உதார் பதிவு...

அடிக்கடி வைரலாக பரவும் அந்த உதார் பதிவு.. உள்ளது உள்ளபடியே... (எடிட் செயப்படவில்லை)

தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger) அர்னால்டின் பரிதாப நிலை...

நடிப்பில் படிப்படியாக உயர்ந்து கலிபோர்னியாவின் கவர்னர் என்ற புகழின் உச்சத்தில் இருக்கும் பொழுது தன்னுடைய வெண்கலச் சிலை முகப்பில் நிறுவப்பட்ட வகையில் ஒரு ஆடம்பர ஹோட்டலை திறந்து வைத்தார்.

ஹோட்டலின் திறப்பு விழாவின் பொழுது அந்த ஆடம்பர ஹோட்டலின் உரிமையாளர் "அர்னால்டு எப்பொழுது வேண்டுமானாலும் இந்த ஹோட்டலுக்கு வந்து முன் பதிவு ஏதும் இன்றி இலவசமாக தங்கிக்கொள்ளலாம், அவருக்கு எப்பொழுதுமே ஒரு அறை இருக்கும்" என்று அறிவித்தார்.

நாட்கள் நகர்ந்தன...

நாட்கள் நகர்ந்தன...

பதவி போனது... புகழ் போனது ..

சமீபத்தில் சாதாரண மனிதனாக அந்த ஹோட்டலுக்கு சென்ற அர்னால்டுக்கு அதிர்ச்சி காத்திருந்தது... ஹோட்டலில் எல்லா அறைகளும் புக்கிங் ஆகிவிட்டது தற்பொழுது அறைகள் ஏதும் இல்லை என்று ஹோட்டல் நிர்வாகம் கூறவே அதிர்ச்சியில் உறைந்து போனார் ஹாலிவுட் முன்னாள் ஹீரொ, கலிபோர்னியா முன்னாள் கவர்னர், அந்த ஹோட்டலை திறந்து வைத்த முன்னாள் வி.ஐ.பி "அர்னால்டு ஸ்குவாஸுனேக்கர்"

மனமுடைந்த அர்னால்ட், தான் வைத்திருந்த போர்வையை எடுத்துக்கொண்டு அந்த ஹோட்டலின் முகப்பில் தன்னால் திறந்து வைக்கப்பட்ட, வெறும் அலங்கார பொருளாக நின்றுக்கொண்டிருந்த தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன்னர் செய்வதறியாது படுத்து விட்டார்.

கருத்து கந்தசாமி!

கருத்து கந்தசாமி!

இந்த சம்பவத்தால் துவண்டு போன அர்னால்ட் அந்த காட்சியை புகைபடம் எடுத்து வலைதளத்தில் பதிவிட்டு உலகத்திற்கு ஓர் செய்தியை சொல்கின்றார்

"நாம் பதவியில் இருக்கும் பொழுது மெச்சப்படுவோம், புகழப்படுவோம், நமக்கு உச்சபட்ச மரியாதை தரப்படும்"

"எப்பொழுது நாம் பதவியையும், புகழையும் இழக்கின்றோமோ அடுத்த நொடியே நாம் ஒதுக்கப்படுவோம்,

நமக்கு தந்த சத்தியங்கள் காற்றில் பறக்கவிடப்படும்"

"எந்த சத்தியங்களும், வாக்குறுதிகளும் உங்களுக்காக கொடுக்கப்பட்டது அல்ல அது உங்களை அலங்கரித்த பதவிக்கு கொடுக்கப்பட்டது"

"உங்கள் புகழை,

உங்கள் பதவியை,

உங்கள் அதிகாரத்தை ஒரு போதும் நம்பாதீர்கள்"

"இது எதுவுமே நிரந்தரம் கிடையாது"

வைரல் பதிவு இத்துடன் இனிதே முடிவடைந்தது...

சரி... உண்மை என்ன?

சரி... உண்மை என்ன?

தனது பாடி பில்டர் சிலையின் முன்பு அர்னால்டு படுத்து உறங்குவது போல காணப்படும் புகைப்படம் உண்மை தான். அதில் படுத்து உறங்கி கொண்டிருப்பது போல இருப்பது அர்னால்டு தான். ஆனால், அந்த புகைப்படத்தை வைத்து இவர்கள் கட்டவிழ்த்து விடும் கதை தான் முற்றிலும் பொய்யும் புரட்டும் நிறைந்தது.

நம் ஊரில் மட்டுமல்ல, வெளி ஊர்களிலுமே கூட தன்னம்பிக்கை ஊட்ட, ஊக்கமளிக்க இப்படி சிலர் நேர்மறை, வாழ்க்கை தத்துவங்கள் அடங்கிய கட்டுகதைகள் நிறைய உண்டு. அவற்றுள் ஒன்று தான் இது.

ஷூட்டிங் ஸ்பாட்!

ஷூட்டிங் ஸ்பாட்!

தனது ஷூட்டிங் ஸ்பாட் ஒன்றில் விளையாட்டாக தன் சிலை முன் படுத்து உறங்குவது போல அர்னால்டு விரும்பி எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இது. இந்த படத்தை அர்னால்டு தனது இன்ஸ்டாகிராம் முகவரியில் கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் நாள் இந்த படத்தை பகிர்ந்திருக்கிறார். அந்த பதிவில், விளையாட்டாக, How times have changed என்ற வார்த்தைகள் சேர்த்து இவர் கேலியாக பதிவிட... சில சாம்பிராணிகள்... அதை கட்டுக்கதையாக திரித்துவிட்டனர்.

சிலை எங்கே உள்ளது..

சிலை எங்கே உள்ளது..

அர்னால்டின் சிலர் சிட்டி கன்வென்ஷன் செண்டர் முன்பு தான் இருக்கிறதாம். இந்த உதார் கதையில் குறிப்பிடுவது போல அது ஹோட்டல் முன்பு இல்லை என்று அறியப்படுகிறது. அர்னால்டு முதன் முதலில் இந்த சிலையை 2012ல் பிராங்கிளின் கவுண்டி வெட்டிரியன் மெமோரியல் எனும் இடத்தில் திறந்து வைத்தார் என்றும், பிறகு சிட்டி கன்வென்ஷன் செண்டர் முன்பு மாற்றி வைக்கப்பட்டது என்றும் அறியப்படுகிறது.

எனவே, தயவு செய்து ஆங்கிலம், தமிழ், என்று மட்டுமின்றி இன்னும் சில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பரப்பப்படும் இந்த உதார் கதையை நம்பி யாரும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fact Check: Arnold Schwarzenegger sleeping in Front of his Statue

There is a famous post you can see that circulated with a fake story in social media captioned with, "how times have changed" and in photo, Arnold Schwarzenegger was sleeping in front of his statue.
Desktop Bottom Promotion