For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் சர்வ சாதராணமாக நடக்கும் 8 இல்லீகல் சமாச்சாரங்கள்!

இந்த விஷயம் எல்லாம் இந்தியாவில் இல்லீகல், ஆனால், அரசே கண்டும், காணாமல் இருக்கிறது!

|

இல்லீகல் குற்றங்களில் ஈடுபட்டால் தண்டனை வழங்கப்படும் என்று நம் நாட்டில் சட்ட புத்தகத்தில் மட்டும் அழுத்தமாக எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ரியாலிட்டியில் அப்படியான தண்டனை வழங்கப்படுகிறதா? குறைந்தபட்சம் அவர்களை கைதாவது செய்கிறார்களா... அல்லது வார்னிங்... ஆஹான்! ஒன்றுமே இல்லை!

Even Though These Things are Illegal in India, But Nobody Cares!

Image Source: Google

இந்தியாவில் சில இல்லீகல் விஷயங்கள் மிக சர்வ சாதாரணமாக நடக்கிறது. இது நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் துவங்கி, கேளிக்கை, மருத்துவம் அவரை பெரிதாக பரவிக் கிடக்கிறது. சில விஷயங்களை நாமே வேண்டி விரும்பியும், பேராதரவு அளித்தும் கூட வரவேற்கிறோம் என்பது தான் கவலை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தெருவோர பல் மருத்துவர்கள்!

தெருவோர பல் மருத்துவர்கள்!

Chapter V, Section 49 of the Dentist Act of 1948 சட்டத்தின் படி, சாலையோரத்தில் இருக்கும் பல் மருத்துவர்கள் மருத்துவம் பார்ப்பது இல்லீகல். ஆனால், இந்தியாவில் பல பகுதிகளில் இவர்கள் இயங்கி வருகிறார்கள். மருத்துவம் பார்க்கும் லைசன்ஸ் இன்றி இவர்கள் மக்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள்.

இவர்கள் தரமற்ற முறையில் மருத்துவம் செய்ய வாய்ப்புகள் உண்டு என்பதால், திறமையான, சரியான மருத்துவர்களிடம் தான் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது. இது முற்றிலும் பாதுகாப்பற்றது. ஆனால், செலவு குறைவு என்று கருதி ஏழை, எளிய மக்கள் இவர்களை அணுகுகிறார்கள்.

Image Source: Tribune

டோர் டெலிவரி!

டோர் டெலிவரி!

இந்தியாவில் மது பானங்களை டோர் டெலிவரி செய்வது இல்லீகல். ஆனால், சிலர் சூப்பர் மார்கெட் மற்றும் லிக்கர் பார்கள் சில வகை பீர் மற்றும் ஒயின் (சிலர் விஸ்கி, பிராந்தி) உட்பட்ட மது பானங்களை டோர் டெலிவரி செய்கிறார்கள். இதுக்குறித்து யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

போலி!

போலி!

பிராண்டட் பொருட்களின் போலிகளை விற்பது இந்தியாவில் இல்லீகல். இதை சொன்னால் பலருக்கும் சிரிப்பு தான் வரும். ஐ-போனில் இருந்து, வாட்ச், ஷூ, ஜாக்கி ஜட்டியென என அனைத்திலும் போலிகள் இந்தியாவில் சர்வ சாதாரணமாக விற்கப்படுகின்றன.

ஏன், சில ஈ-காமர்ஸ் தளங்களில் கூட பயனாளிகள் நிஜமான பொருட்கள் என்று ஆபர் விலையில் போலிகளை வாங்கி ஏமாறுகிறார்கள். இந்தியாவில் இப்படியான போலி பொருட்கள் விற்பனை மூலம் மட்டும் ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் வியாபாரம் நடக்கிறதாம்.

பிச்சை!

பிச்சை!

Bombay Prevention of Begging Act, 1959 சட்டத்தின் படி பிச்சை எடுப்பது குற்றம் என்று கூறப்படுகிறது. இந்த சட்டம் டெல்லிக்கும் பொருந்தும். ஆனால், இதில் இருக்கும் ஆச்சரியமே... இதுநாள் வரை இந்த சட்டத்தின் பிரிவில் ஒரு வழக்கு கூட பதிவானது இல்லை.

இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் பிச்சைக் காரர்கள் இருக்கிறார்கள். பிச்சை எடுப்பது தொழில் என்பது போய், மாபியா என்று கூறும் அளவிற்கு சில கூட்டங்கள் இந்தியாவின் சில பகுதிகளில் உலாவி வருகிறது. இவர்கள் குழந்தைகளை திருடி, கடத்தி விற்பவர்கள் ஆவர்.

கலப்படம்!

கலப்படம்!

பாலில் நீர், அரிசியில் கல் என தொடங்கி, மிளகாய் தூள், எண்ணெய், மஞ்சள் தூள் என பெரும்பாலான உணவில் கலப்படம் இருக்கிறது. கோதுமை மாவு விற்றது போக, தூய கோதுமை என்று விளம்பரம் செய்கிறார்கள், அதன் விலை கொஞ்சம் அதிகம். இதன் மூலமாகவே தெரியவில்லையா, கோதுமை மாவிலும் கலப்படம் செய்து தான் விற்கிறார்கள் என்று? உணவு கட்டுப்பாடு துறை என்று தனியாக ஒரு குழு இருந்துமே கூட இந்தியாவில் உணவில் கலப்படம் மிக எளிதாக செய்யப்படுகிறது.

ஸ்கேனிங்!

ஸ்கேனிங்!

கர்பிணி பெண் கருவில் வளர்வது ஆனா, பெண்ணா என்று பார்த்து கூறுவது இந்தியாவில் இல்லீகல். பெண் என்று தெரிந்தால் அபார்ஷன் செய்துவிடுகிறார்கள். இங்கே, வியப்பு என்ன வென்றால்.. இந்தியாவில் அபார்ஷன் செய்வதும் இல்லீகல் தான். ஒரு இல்லீகல் வேலையை பார்த்து, அதனை தொடர்ந்து மற்றொரு இல்லீகல் செயலில் ஈடுபடுகிறார்கள்.

திருட்டு!

திருட்டு!

ஒட்டுமொத்த இந்திய மக்களில் 99% பேர் பேராதரவு அளிக்கும் இல்லீகல் குற்றம் இதுதான். ஒரு எலக்ட்ரானிக் கம்பெனி, உணவு தயாரிப்பு கம்பெனி, லெதர் கூட்ஸ் கம்பெனியில் இருந்து எதையேனும் திருடினால் நாம் ஒப்புக் கொள்வோமா? விவசாயி உழைப்பை திருடினால் நமக்கு பெருங்கோபம் வரும் அல்லவா?

ஆனால், சினிமாவில், சினிமா காரர்களின் உழைப்பை திருடுவதை மட்டும் நாம் வாடிக்கையாக வைத்துக் கொண்டிருக்கிறோம். நமக்கு இங்கே சிரிப்பு மட்டுமே வருகிறது. தரமற்ற பொருளாகவே இருந்தாலும் திருடி பயன்படுத்துவது முறையா என்ன? இந்தியாவில் பைரசியும் இல்லீகல் தான்.

ரெட் லைட்!

ரெட் லைட்!

லைசன்ஸ் இல்லாது நடக்கும் விபச்சாரம், குழந்தைகள், இளம் பெண்கள் கடத்தல் போன்றவை பெரும் குற்றம். ஆனால், இந்தியாவின் பெரும் நகரங்களில் மற்றும் பல எல்லை மாநிலங்களில் இவை மிக சகஜமாக நடக்கிறது. இதில் பெரும் அதிகாரிகளே கூட்டு வைத்திருக்கிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு பணமும், பெண்களும் சப்ளை செய்யப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Even Though These Things are Illegal in India, But Nobody Cares!

From Red light area to road side dentist, piracy ets. Even Though These Things are Illegal in India, But Nobody Cares!
Desktop Bottom Promotion