For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இறந்த பின்பு யாரெல்லாம் பேயா மாறுவாங்கன்னு தெரியுமா?...

பேய் என்றாலே நம் எல்லோருக்கும் எப்போதுமே ஒருவித பயம் இருக்கும். சிலருக்கோ இருட்டைப் பார்த்தாலே பேய் பயமும் மனதில் பீதியும் தொற்றிக் கொள்ளும்.

|

பேய் என்றாலே நம் எல்லோருக்கும் எப்போதுமே ஒருவித பயம் இருக்கும். சிலருக்கோ இருட்டைப் பார்த்தாலே பேய் பயமும் மனதில் பீதியும் தொற்றிக் கொள்ளும். வயது வித்தியாசமே இல்லாமல் இந்த உலகில் எல்லோரையும் பயம் என்பது ஏதாவது ஒரு வகையில் ஆட்டி வைத்திருக்கும். அதில் பேய் என்பது ஒன்று.

Do people become ghosts after death

பேய் என்பது உலகில் கிடையாது.அது வெறும் மாயை. உங்களுடைய மனம் பித்துப்பிடித்துவிட்டது என்று நாத்திகவாதிகளும் மனிதன் இறந்த பின் அவனுடைய ஆத்மா இந்த உலகத்துக்குள் தான் உலாவிக் கொண்டிருக்கிறது என்று ஆத்திகவாதிகளும் கூறுவதைக் கேட்டிருப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேய் என்பது என்ன?

பேய் என்பது என்ன?

நிஜமாகவே இந்த உலகத்தில் பேய் என்ற ஒன்று இருக்கிறதா?... அப்படி இருக்கிறது என்றால் அது எப்படி இருக்கும். எது உண்மை என்ற குழப்பம் காலங்காலமாக நீடித்துக் கொண்டே தான் இருக்கிறது. பேய் என்பது வேறு ஒன்றுமே இல்லை. தங்களுடைய வாழ்நாளில் யார் யாரெல்லாம் பெரிய நிறைவேறாத ஆசைகளோடு இறந்து போகிறார்களோ?... அதாவது அகால மரணம் அடைந்தவர்கள், விபத்து மற்றும் திடீரேன உடல் நலம் குன்றி இறந்தவர்கள் ஆகியோருடைய ஆன்மாக்கள் தான் மேலுலகத்துக்குச் செல்லாமல் பூமியிலேயே சுழன்று கொண்டிருக்கும் என்று சொல்வார்கள். அவர்களே பேயாக உலவுவார்கள். தான் பழிவாங்க நினைத்தவர்களை பழிவாங்குவார்கள் என்று கூறப்படுகிறது.

நிறைவுறாத ஆசைகள்

நிறைவுறாத ஆசைகள்

நிறைவேறாத ஆசைகள் இளைம் வயதில் இறந்து போகிறவர்களுக்கு மட்டுமமே இருப்பதில்லை. வயதானவர்கள் கூட தங்களுடைய பிள்ளைகளுக்கு, பேரக் குழந்தைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும். அவர்களுடைய வாழ்க்கையை உயர்த்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்திருப்பார்கள். அவர்களும் கூட, இந்த உலகில் புயாக உலவுவார்களாம். இவர்களால் பெரிதாகக் கெடுதல் ஏதும் ஏற்படாது. தங்களுடைய குடும்பத்தை எந்த தீங்கும் நெருங்காமல் இவர்குள் காத்துக் கொள்வார்களாம்.

உறுதியான சுயம் கொண்டவர்கள்

உறுதியான சுயம் கொண்டவர்கள்

தான்தான் எல்லா விஷயங்களிலும் வெற்றி பெற வேண்டும் என இலக்குகளை நிர்ணயித்து வைத்துக் கொண்டு அதை நோக்கிப் பயணித்து வெற்றி பெறும் உறுதியான உள்ளம் கொண்டவர்கள் யாராக இருநு்தாலும் அவர்கள் இறந்த பின் நிச்சயம் பேயாக உலா வருவார்களாம். ஏனெனில் எப்போதுமு் வெற்றிக் கனியை சுவைக்க ஆசைப்படும் உறுதியாபன உள்ளம் கொண்டவர்களுக்கு இலக்குகள் என்பது எப்போதுமே ஒருகுறிப்பிட்ட இடத்தில் நின்று விடாமல் பயணித்துக் கொண்டே தான் இருக்கும். அதனால் அவர்களுக்கான இலக்குகளும் பல வெற்றிகளும் இந்த உலகில்இருந்து கொண்டே இருக்கும் என்பதால் அவர்கள் உலகை பேயாக வலம் வருவார்களாம்.

நிலையான எண்ணமில்லாதவர்கள்

நிலையான எண்ணமில்லாதவர்கள்

இந்த உலகத்தின் மீது எப்போதும் இணைந்திருக்காமல் சிலர் தனித்து ஏதோ வாழ்கிறோம். எதற்காக வாழ்கிறோம் என்று புலம்பிக் கொண்டு, இந்த உலகில் உள்ள பஞ்ச பூதங்களுடன் இயைந்து வாழாமல் தனித்து மனம்பித்தாகித் திரிவார்கள். அவர்கள் இங்கு மட்டுமல்ல, மேலுலகத்துக்குச் சென்ற பின்னரும்கூட, அவர்களுடைய மனம் ஓரிடத்தில் நிலையாக இல்லாமல் தான் இருக்கும். அவர்களால் மேலுலகிலும் நிம்மதியாக இருக்க முடியாது. அப்படிப்பட்டவர்கள் மீண்டும் இந்த உலகத்தில் பேயாக உலவிக் கொண்டிருப்பார்கள்.

 நாத்திகவாதிகள்

நாத்திகவாதிகள்

ஆன்மீகத்தில் அதிகமாக ஈடுபாடு இல்லாதவர்கள், எப்போதும் மனதையும் அது சொல்லும் ஒருவித மன அதிர்வுகளை, எண்ணங்களை உணர்ந்து கொள்ளாமல் எதையும் நான் அறிவுப்பூா்வமாக தான் ஆராய்வேன் என்று ஆன்மீகத்தில் உள்ள நல்ல விஷயங்களையும் கூட உதறித் தள்ளுகிறவர்கள் இறந்த பின், பேயாக உலா வருவார்கள்.

எதிர்மறை எண்ணங்கள்

எதிர்மறை எண்ணங்கள்

சிலரை நாம் பார்த்திருப்போம். எந்த விஷயத்தையுமே நேர்மறையாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். நல்ல விஷயங்களாக ஏதாவது நடந்தால் கூட, அதையும் எதிர்மறையான ஏதாவது ஒரு விஷயத்தோடு தான் தொடர்பு படுத்தி பேசுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு வாழ்க்கையில் எப்போதும் திருப்தியே இருக்காது. அதனால் அவர்களும் இறந்த பின் பேயாகத் தான் உலா வருவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Do people become ghosts after death

Ghosts have always been a mysterious and fear evoking topic for most of us. Fear of the unknown has affected every individual on this Earth since ages.
Desktop Bottom Promotion