For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ப்ரியா முதல் பப்பு வரை நம்மால் மறக்க முடியாத 5 'கண்ணடித்தல்' நிகழ்வுகள்!

ப்ரியா முதல் பப்பு வரை நம்மால் மறக்க முடியாத 5 'கண்ணடித்தல்' நிகழ்வுகள்!

|

காதல் என்றாலே ரொமாண்டிக்கான விஷயம் தான். ஆனால், அந்த ரொமான்ஸில் பல பிரிவுகள் இருக்கின்றன. கட்டியணைப்பது, முத்தமிடுவது, கொஞ்சி மகிழ்வது, சண்டையிடுவது, கோபித்துக் கொள்வது என பல விஷயங்களை நாம் இப்படி பட்டியலிடலாம்.

ஆனால், ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளாமல், ஒருவரை ஒருவர் தீண்டாமல் காதலில் ஒரு ரொமான்ஸ் செய்ய முடியும். அதெப்படி... பேசிக்காம, தொடாம ரொமான்ஸ் பண்ண முடியும் என்கிறீர்களா? நிச்சயம் செய்யலாம். அப்படியான ஒரு ரொமான்ஸை வெளிப்படுத்தி தான் நம் நாட்டில் ஒரு இளம்பெண் உலக லெவல் புகழும் அடைந்திருக்கிறார்.

ஆம்! கண்ணடித்தல்... இதவிட பெரிய ரொமான்ஸ் காதலில் இருக்கிறதா என்ன ஆனால், நாம் இந்த கண்ணடித்தல் விஷயத்திலேயே பல வித்தியாசங்களை கண்டிருக்கிறோம். அவை என்னென்ன கண்ணடித்தல் என்ற வகையறாக்களை இந்த தொகுப்பில் காணலாம்.. வாங்க!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ப்ரியா பிரகாஷ்

ப்ரியா பிரகாஷ்

கண்ணடித்தல் பற்றி பேசும் போது நிச்சயமாக ப்ரியா பிரகாஷ் பற்றி பேசாமல் இருக்க முடியுமா என்ன? இந்திய வரலாற்றில்... ஏன் உலக வரலாற்றிலேயே கண்ணடித்து பெரும் புகழ்ச்சி பெற்ற ஒரே நபர் ப்ரியா தான். ஒரு அடார் காதல் படத்தின் ஒரு பாடல் காட்சியில்... ஓரிரு ஃப்ரேம்களில் அவர் வெளிப்படுத்திய அந்த கிறங்கடிக்கும் கண்ணடித்தல் காட்சியானது... உலகமகா வைரல் ஆனது. ஒரே நாளில் அதிக இன்ஸ்டாகிராம் பின்தொடர்பாளர்கள் பெற்ற பிரபலம் பட்டியலில் இணைந்தார். இரண்டே நாட்களில் ஐம்பது இலட்சம் பேர் அவரை பின்தொடர ஆரம்பித்தனர்.

ரொமாண்டிக்!

ரொமாண்டிக்!

நடித்த முதல் படத்தில் இருந்து ஒருவர் இவ்வளவு பிரபலம் அடைவது இதுவே முதல் முறை. இதற்கும் அந்த படத்தின் முதன்மை நாயகி கூட கிடையாது ப்ரியா பிரகாஸ். ஒற்றை கண்ணடித்தல் காட்சியின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பானது, கோலிவுட், பாலிவுட் வரை நிறைய வாய்ப்புகள் குவிய காரணியாக அமைந்தது. ஏன் சல்மான் கான் தயாரிக்கும் படத்தில் கூட இவருக்கு வாய்ப்பு கிடைத்ததாக தகவல்கள் பரவின.

இன்றளவும் கூட ஒரு ரொமாண்டிக்கான கண்ணடித்தல் நிகழ்வாக ப்ரியா பிரகாஷின் அந்த சிறிய வீடியோ கிளிப் வைரலாக பரவிக் கொண்டே தான் இருக்கிறது.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

இந்திய அரசியலில் பப்பு என்று செல்லமாக அழைக்கப்படும் அரசியல் தலைவர் ராகுல் காந்தி. மாநில பேதமின்றி அனைவரும் இவரை பப்பு என்று அழைப்பார்கள். அதற்கு காரணம், இவர் இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்தது அல்ல. பல இடங்களில் சரியான உண்மை தகவல் அறியாமல் ஏதேனும் பேசிவிடுவார்.

அதனால், இவரை பப்பு என்று கிண்டலடித்து அழைப்பார்கள். இதை காங்கிரஸின் விரோத கட்சியாக காணப்படும் பாரதிய ஜனதா கட்சியினர் சரியாக மேடை பேச்சுகளின் போது பயன்படுத்திக் கொள்வார்கள். ஏன் பிரதமர் மோடி அவர்களே சில முறை ராகுல் காந்திக்கு பாடம் எடுத்துள்ளார்.

ராஜ தந்திரம்!

ராஜ தந்திரம்!

ஆனால், நேற்று பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியின் பேச்சு கொஞ்சம் ஆக்ரோஷமாக தான் இருந்தது. அவர் பேசி முடித்துவிட்டு மோடியை நோக்கு நடந்த வேகத்தை பார்த்தால்.. ஏதேனும் எசகபிசக செய்துவிடுவாரோ என்று தான் அனைவரும் எண்ணினார்கள்.

ஹானரபல் ஸ்பீக்கர் கூட, இப்படி செல்ல கூடாது என்று தடுத்து நிறுத்த முற்பட்டார். ஆனால், மோடியை கட்டியணைத்து திரும்பினார் ராகுல் காந்தி. தன் இருககிக்கு திரும்பிய ராகுல் காந்தி தன்னருகே இருந்த காங்கிரஸ் எம்.பியை பார்த்து தந்திரமாக கண்ணடித்து காட்டினார். இது சபை மரியாதைக்கு உகந்தது அல்ல என்று ஹானரபல் ஸ்பீக்கர் ராகுல் காந்தியிடம் எச்சரித்தார்.

நேற்றில் இருந்து ராகுல் காந்தியின் அந்த ராஜ தந்திர கண்ணடித்தல் நிகழ்வு இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.

அமலா பால்

அமலா பால்

அமலா பாலுக்கு அவர் நடித்த முதல் படம் கசமுச படமாக அமைந்தது. சிந்து சமவெளி எனும் அந்த படத்தில் அவர் மாமனாருடன் தவறான உறவில் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று அவரை ஒரு 'ஏ' கிரேடு நடிகை போன்ற முத்திரையை பதித்தது.

ஆனால், அதன் பிறகு வெளியான மைனா படமானது அவரது சினிமா பயணத்தில் முக்கிய அங்கமாக அமைந்தது. அமலா பாலுக்கு மட்டுமின்றி, இயக்குனர், இசை அமைப்பளார், நடிகர் என அனைவருக்கும் அவரவர் கேரியரில் முக்கியமான படமாகவும், ஒரு பெரும் வாழ்வும் ஏற்படுத்திக் கொடுத்த படம் மைனா.

ஈர்ப்பு!

ஈர்ப்பு!

இந்த படத்தில் இடம்பெற்றிருந்த "மைனா, மைனா" என்ற ரொமாண்டிக் பாடல் துவங்கும் முன் வரும் காட்சியில், கதவுகள் மூடும் தருவாயில் அவர் கண்களில் ஆசைடயுடன் அழைப்பது லேசாக அசைவை ஏற்படுத்தி இருப்பார். அந்த அசைவில் கிறங்கி போன ரசிகர்களில் ஏராளம்.

இந்த படத்தில் அந்த ஒரு காட்சிக்காகவே அமலா பாலை விரும்பிய ரசிகரானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஒருவேளை அந்த காலக்கட்டத்தில் இன்டர்நெட் வைரல் போன்ற விஷயங்கள் இந்தளவுக்கு இருந்திருந்தால்.. அமலா பாலுக்கும் ப்ரியாவை போல பாலிவுட் வாய்ப்புகள் எல்லாம் தேடி வந்திருக்குமோ என்னவோ.

அமலா பாலின் அந்த கன் அசைவில் ஒரு ஈர்ப்பும், கவர்ச்சியின், காதலும் நிறைந்திருந்தது.

விக்ரம்!

விக்ரம்!

விக்ரம் நடித்த படங்களில் மறக்க முடியாத திரைப்படம் அந்நியன். இது தேசிய அளவில் நல்ல விமர்சனங்களை பெற்ற திரைப்படம். இன்றளவும் இந்த திரைப்படத்தை வேறு எந்த மொழியிலும் யாரும் ரீமேக் செய்யாமல் இருக்கிறார்கள் என்றால், அதற்கு ஒரே காரணம் நடிப்பு அரக்கன் விக்ரம். விக்ரமை தவிர அந்த கதாப்பாத்திரங்களில் வேறு யாராலும் நடிக்க முடியாது எனும் அளவிற்கு நடிப்பில் பட்டையை கிளப்பியிருப்பார்.

வெகுளி!

வெகுளி!

எந்திரன் படத்தின் சிட்டி அறிமுக காட்சியின் போது, வசீகரனின் தாய் சிட்டி அந்த டிவிய போடு என்றதும், டிவியை எடுத்து கீழே போட்டுயவிடும். பிறகு வசிகரன், டிவிய ஆன் பண்ணுன்னு சொல்லணும்ம்மா, போடுன்னு சொன்னா, அவன் போட்டுடுவான் என்று விளக்குவார். இந்த காட்சிக்கு பொருந்தும் படியே நடிகர் விக்ரம் அந்நியன் படத்தில் விவேக் கண்ணடிக்க கூற, தனது இரு கைகளால் கண்களை அடித்து வெகுளியாக ஒரு ரியாக்ஷன் கொடுத்திருப்பார்.

காதலில் ரொமாண்டிக்கான விஷயமான கண்ணடிக்க தெரியமால் நேர்மையாக நந்தினியை காதலித்து வருவார் அம்பி.

கவுண்டமணி!

கவுண்டமணி!

ரொமாண்டிக், ராஜ தந்திரம், ஈர்ப்பு, வெகுளி என சில வித்தியாசமான கண்ணடித்தல் பற்றி பார்த்தாயிற்று. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... ரொமாண்டிக் லுக்கை இப்படி கூட கொடுக்க முடியும் என்று வெளிப்படுத்து காட்டி.. இன்றும் யாரேனும்.. யாருடைய காதலை கிண்டல் செய்ய வேண்டும் என்றால்... கவுண்ட மணியின் அந்த ஓஹ்ஹ்ஹ்.... ரொமாண்டிக் லுக்கை தான் பயன்படுத்துகிறார்கள். எனவே, ரொமான்ஸ் கண்ணடித்தலில் அனைவருக்கும் ஒரு முன்னோடி எங்கள் அண்ணன் கவுண்ட மணி அவர்கள் தான்.

காமெடி!

காமெடி!

சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக், ஜெமினி கணேஷன், நக்மா, கவுண்டமணி நடித்த திரைப்படம் மேட்டுக்குடி. இந்த படத்தில் தான் தனது ட்ரெட் மார்க் ரொமாண்டிக் லுக்கை வெள்ளிப்படுத்தி இன்றுவரையிலும் ரசிகர்களை அந்த காட்சியை பார்த்தால் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார் அண்ணன் கவுண்டமணி.

நக்மாவிற்கு அக்கா மகளே இந்து காதல் கடிதத்தை எழுதி முடித்த பிறகு கவுண்டமணி வெளிப்படுத்திய அந்த ஓஹ்ஹ்ஹ்.... ரொமாண்டிக் தமிழ் சினிமாவில் ஒரு சிறப்புமிக்க காமெடி காட்சி என்றே கூறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Different Types of Eye Wink

Eye wink is symbol of romance in love. But, in India, we people have seen this eye wink as symbol internet viral, political tricks and etc. Here we have listed some five different types of eye wink. and it is just for fun. dont take it as serious
Story first published: Saturday, July 21, 2018, 12:59 [IST]
Desktop Bottom Promotion