இன்னைக்கு இந்த 4 ராசிக்காரர்கள் தான் டாப் லெவல் போங்க...

Subscribe to Boldsky

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

daily horoscope 28.3.18

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

ஆன்மிக வழிபாட்டில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். துணிச்சலுடன் புதிய செயல்திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். பிளடளைகளால் சுப விரயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை - கிழக்கு

அதிர்ஷ்ட எண் - 1

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் நிறம்

ரிஷபம்

ரிஷபம்

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். உன்னத செயல்கள் மூலம் நற்பெயர்கள் வந்தடையும். புதிய நபர்களின் ஆதரவால் தனவரவு உண்டாகும். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். கடல்மார்க்க பயணங்களால் லாபகரமான செய்திகள் வந்தடையும்.

அதிர்ஷ்ட திசை - தெற்கு

அதிர்ஷ்ட எண் - 5

அதிர்ஷ்ட நிறம் - பச்சை நிறம்

மிதுனம்

மிதுனம்

கால்நடைகளால் லாபம் அடைவீர்கள். தாயுடன் தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் உண்டாகும். இளைய சகோதரர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகளால் பணியில் சில இடையூறுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை - மேற்கு

அதிர்ஷ்ட எண் - 4

அதிர்ஷ்ட நிறம் - சந்தன வெள்ளை

கடகம்

கடகம்

நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். கூட்டுத்தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதார மேன்மை உண்டாகும். வெளிநாட்டுப் பயணங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். புதிய வேலையாட்களை பணியில் அமர்து்துவீர்கள்.

அதிர்ஷ்ட திசை - வடக்கு

அதிர்ஷ்ட எண் - 5

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு நிறம்

சிம்மம்

சிம்மம்

உத்தியோகஸ்தர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்க கால தாமதமாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். பொதுத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை - கிழக்கு

அதிர்ஷ்ட எண் - 1

அதிர்ஷ்ட நிறம் - இளம் பச்சை

கன்னி

கன்னி

தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வாகனங்களை கொண்டு தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை - தெற்கு

அதிர்ஷ்ட எண் - 7

அதிர்ஷ்ட நிறம் - பல வண்ண நிறங்கள்

 துலாம்

துலாம்

இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். வாகனப் பயணங்களை மேற்கொள்வீர்கள். புண்ணிய காரியங்களுக்கு நன்கொடைகளை அளிப்பீர்கள். பூஜை, புனஸ்காரங்களில் ஈடுபடுவீர்கள். புதிய தொழிலை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை - மேற்கு

அதிர்ஷ்ட எண் - 8

அதிர்ஷ்ட நிறம் - ஊதா நிறம்

விருச்சிகம்

விருச்சிகம்

இறை வழிபாட்டால் மனதில் உள்ள துன்பங்கள் நீங்கி, புத்துணர்ச்சி உண்டாகும். அயல்நாட்டு பயணங்களால் மேன்மையான சூழல் உண்டாகும். வாக்குவாதத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும். மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் படிக்கவும்.

அதிர்ஷ்ட திசை - வடக்கு

அதிர்ஷ்ட எண் - 2

அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்

 தனுசு

தனுசு

தனக்கு ஆதரவாக இருப்பவர்களுடைய ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் மூலம் வீண் விரயச் செலவுகள் உண்டாகும். சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை - கிழக்கு

அதிர்ஷ்ட எண் - 9

அதிர்ஷ்ட நிறம் - அடர் சிவப்பு

மகரம்

மகரம்

கூட்டுத் தொழிலில் உள்ள பங்குதாரர்களால் வீண் விரயச் செலவுகள் செய்து தொழிலைப் பெருக்க முயற்சி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். நல்ல செய்திகள் வந்து சேரும். வேலை தேடுபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை - தெற்கு

அதிர்ஷ்ட எண் - 3

அதிர்ஷ்ட நிறம் - இளம் மஞ்சள்

கும்பம்

கும்பம்

வாக்கு வன்மையால் பொருளு் சேர்க்கை உண்டாகும். புனித யாத்திரை செல்வதற்கான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகும். அிறமுகம் இல்லாதவர்களிடம் பேசும்போது கவனத்துடன் இருங்கள். எதிலும் கொஞ்சம் நிதானம் தேவை.

அதிர்ஷ்ட திசை - மேற்கு

அதிர்ஷ்ட எண் - 6

அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்

மீனம்

மீனம்

புதிய வீடு கட்டுவதற்கான முயற்சிகளைச் செய்வீர்கள். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலில் முக்கிய பிரமுகர்களின் ஆதரவு கிடைக்கும். நீங்கள் எதிர்பாராத வகையில் திடீர் தனவரவு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை - வடமேற்கு

அதிர்ஷ்ட எண் - 4

அதிர்ஷ்ட நிறம் - சாம்பல் நிறம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    daily horoscope 28.3.18

    There are 12 zodiac signs, and each sign has its own strengths and weaknesses, its own specific traits, desires and attitude towards life and people.
    Story first published: Wednesday, March 28, 2018, 6:10 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more