Latest Updates
-
வார ராசிபலன் (05 July 2026-11 July 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்ணை திருமணம் செய்யும் ஆண்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
நெல்லை ஸ்டைல் தேங்காய்ப்பால் கோழி குழம்பு ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
200 ஆண்டுகளுக்கு மேல் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆள்வதற்கு காரணமாக இருந்தது இந்த 5 விஷயங்கள்தான் -
ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் பால் கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
செவ்வாய் ரோகிணி நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
மொறுமொறு ராகி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மோசமான பலன்களை அனுபவிக்கப் போறாங்களாம் -
ஜூலை 07-ல் வக்ர நிலையில் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 6 ராசிகளின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
குருபகவானின் அஸ்தமனத்தால் ஆகஸ்ட் மாதம் வரை கஷ்டப்படப் போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன?
வெள்ளிக்கிழமை மகாலட்சுமியின் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர் யார்?
daily horoscope 21.9.18, 21.9.18 ஆம் நாளான இன்று உங்களுடைய ராசிக்கான பலன் எப்படி இருக்கும்
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

மேஷம்
ஆராய்ச்சியில் எண்ணிய எண்ணம் ஈடேறும். கவனக் குறைவால் அவச்சொல்லுக்கு ஆளாக நேரிடும். வர்த்தகம் சம்பந்தமான பணிகளால் அனுகூலம் உண்டாகும். உறவினர்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை - மேற்கு, அதிர்ஷ்ட எண் - 9, அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு நிறம்

ரிஷபம்
பிள்ளைகளிடம் அன்புடன் நடந்து கொள்ளுங்கள். எண்ணங்கள் மேலோங்கும் நாளாக அமையும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திருமண வரன்களால் மகிழ்ச்சி உண்டாகும். பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். அதிர்ஷ்ட திசை - வடக்கு, அதிர்ஷ்ட எண் - 3, அதிர்ஷ்ட நிறம் - இளம்மஞ்சள்

மிதுனம்
புதிய வீடு, மனை வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் சரியாகும். கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் சரியாகும். வாதத்திறமையால் கீர்த்தி உண்டாகும். பழைய கடன்களை அடைப்பதற்கான தன வரவுகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிர்ஷ்ட எண் - 8
அதிர்ஷ்ட நிறம் - நீலநிறம்

கடகம்
உத்தியோகஸ்தர்கள் தங்களுடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் பொறுமையைக் கடைபிடிப்பது அவசியம். நிர்வாகம் சம்பந்தமான புதிய முடிவுகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். திருமணப் பேச்சு வார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை - வடக்கு
அதிர்ஷ்ட எண் - 1, அதிர்ஷ்ட நிறம் - இளஞ்சிவப்பு

சிம்மம்
தொழில் சம்பந்தமான பண உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாலின மக்களால் ஆதாயம் உண்டாகும். விலையுயர்ந்த பொருள்களைக் கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். கலைஞர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிர்ஷ்ட எண் - 5, அதிர்ஷ்ட நிறம் - இளம்பச்சை

கன்னி
நண்பர்களின் உதவியால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பூா்விக சொத்துகள் சம்பந்தமாக சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்வீர்கள். கலை சார்ந்த கல்வி பயிலும் மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிர்ஷ்ட எண் - 6, அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்

துலாம்
உத்தியோகஸ்தர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். தொழிலில் புதிய நபர்களால் பொருள் இழப்பு உண்டாகும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும். புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிர்ஷ்ட எண் - 7, அதிர்ஷ்ட நிறம் - காவி நிறம்

விருச்சிகம்
தொழிலில் புதிய நபர்களின் வருகையால் நினைத்த லாபம் கிடைக்கும். உயரமான இடங்களுக்கு பயணம் செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும். திறமையான பேச்சின் மூலம் லாபத்தை எட்டுவீர்கள். வாகனங்களைப் பராமரிப்பதற்கான செலவுகள் உண்டாகும். அதிர்ஷ்ட திசை - மேற்கு, அதிர்ஷ்ட எண் - 3, அதிர்ஷ்ட நிறம் - அடர்மஞ்சள்

தனுசு
பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமைப்படும் அளவுக்கு செய்திகள் வந்தடையும். கலைஞர்களுக்கு சிறப்பான நாள். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். பெரியோர்களின் ஆதரவ கிடைக்கும். புராண இதிகாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிர்ஷ்ட எண் - 2, அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்

மகரம்
பொது சேவையில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் உண்டாகும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். மூத்த உடன் பிறப்புகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பயணங்களால் சேமிப்பு உயரும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். திறமைகளால் பலன் அடைவீர்கள். அதிர்ஷ்ட திசை - வடக்கு, அதிர்ஷ்ட எண் - 9, அதிர்ஷ்ட நிறம் - அடர்சிவப்பு

கும்பம்
இளைய உடன் பிறப்புகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். அரசாங்க அதிகாரிகளிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகம் சம்பந்தமான பயணங்களால் மன நிம்மதி கிடைக்கும். அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிர்ஷ்ட எண் - 6, அதிர்ஷ்ட நிறம் - சந்தன வெள்ளை நிறம்

மீனம்
ஆடை மற்றம் ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். இசைக் கலைஞர்களுக்கு சாதகமான நாளாக அமையும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகத்தால் தொழிலில் லாபம் உண்டாகும். பணியில் புதிய நபர்களை சந்திப்பீர்கள். அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிர்ஷ்ட எண் - 5, அதிர்ஷ்ட நிறம் - கிளிப்பச்சை



Click it and Unblock the Notifications