Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
இன்னைக்கு எந்தெந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையா இருக்கணும் தெரியுமா?...
daily horoscope 17.3.18, 17.3.18 ஆம் நாளான இன்று உங்களுடைய ராசிக்கான பலன் எப்படி இருக்கும்
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

மேஷம்
உத்தியோகஸ்தர்கள் தங்களுடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் பொறுமையைக் கடைபிடிப்பது அவசியம். நிர்வாகம் சம்பந்தமான புதிய முடிவுகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். திருமணப் பேச்சு வார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை - வடக்கு
அதிர்ஷ்ட எண் - 1
அதிர்ஷ்ட நிறம் - இளஞ்சிவப்பு

ரிஷபம்
தொழில் சம்பந்தமான பண உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாலின மக்களால் ஆதாயம் உண்டாகும். விலையுயர்ந்த பொருள்களைக் கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். கலைஞர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை - கிழக்கு
அதிர்ஷ்ட எண் - 5
அதிர்ஷ்ட நிறம் - இளம்பச்சை

மிதுனம்
நண்பர்களின் உதவியால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பூா்விக சொத்துகள் சம்பந்தமாக சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்வீர்கள். கலை சார்ந்த கல்வி பயிலும் மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை - தெற்கு
அதிர்ஷ்ட எண் - 6
அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்

கடகம்
ஆராய்ச்சியில் எண்ணிய எண்ணம் ஈடேறும். கவனக் குறைவால் அவச்சொல்லுக்கு ஆளாக நேரிடும். வர்த்தகம் சம்பந்தமான பணிகளால் அனுகூலம் உண்டாகும். உறவினர்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை - மேற்கு
அதிர்ஷ்ட எண் - 9
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு நிறம்

சிம்மம்
பிள்ளைகளிடம் அன்புடன் நடந்து கொள்ளுங்கள். எண்ணங்கள் மேலோங்கும் நாளாக அமையும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திருமண வரன்களால் மகிழ்ச்சி உண்டாகும். பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை - வடக்கு
அதிர்ஷ்ட எண் - 3
அதிர்ஷ்ட நிறம் - இளம்மஞ்சள்

கன்னி
புதிய வீடு, மனை வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் சரியாகும். கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் சரியாகும். வாதத்திறமையால் கீர்த்தி உண்டாகும். பழைய கடன்களை அடைப்பதற்கான தன வரவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை - கிழக்கு
அதிர்ஷ்ட எண் - 8
அதிர்ஷ்ட நிறம் - நீலநிறம்

துலாம்
உத்தியோகஸ்தர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். தொழிலில் புதிய நபர்களால் பொருள் இழப்பு உண்டாகும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும். புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட திசை - தெற்கு
அதிர்ஷ்ட எண் - 7
அதிர்ஷ்ட நிறம் - காவி நிறம்

விருச்சிகம்
தொழிலில் புதிய நபர்களின் வருகையால் நினைத்த லாபம் கிடைக்கும். உயரமான இடங்களுக்கு பயணம் செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும். திறமையான பேச்சின் மூலம் லாபத்தை எட்டுவீர்கள். வாகனங்களைப் பராமரிப்பதற்கான செலவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை - மேற்கு
அதிர்ஷ்ட எண் - 3
அதிர்ஷ்ட நிறம் - அடர்மஞ்சள்

தனுசு
பொது சேவையில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் உண்டாகும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். மூத்த உடன் பிறப்புகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பயணங்களால் சேமிப்பு உயரும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். திறமைகளால் பலன் அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை - வடக்கு
அதிர்ஷ்ட எண் - 9
அதிர்ஷ்ட நிறம் - அடர்சிவப்பு

மகரம்
இளைய உடன் பிறப்புகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். அரசாங்க அதிகாரிகளிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகம் சம்பந்தமான பயணங்களால் மன நிம்மதி கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை - கிழக்கு
அதிர்ஷ்ட எண் - 6
அதிர்ஷ்ட நிறம் - சந்தன வெள்ளை நிறம்

கும்பம்
ஆடை மற்றம் ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். இசைக் கலைஞர்களுக்கு சாதகமான நாளாக அமையும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகத்தால் தொழிலில் லாபம் உண்டாகும். பணியில் புதிய நபர்களை சந்திப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை - தெற்கு
அதிர்ஷ்ட எண் - 5
அதிர்ஷ்ட நிறம் - கிளிப்பச்சை

மீனம்
பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமைப்படும் அளவுக்கு செய்திகள் வந்தடையும். கலைஞர்களுக்கு சிறப்பான நாள். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். பெரியோர்களின் ஆதரவ கிடைக்கும். புராண இதிகாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை - கிழக்கு
அதிர்ஷ்ட எண் - 2
அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்



Click it and Unblock the Notifications