Latest Updates
-
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. ஒருவாட்டி இந்த சட்னியை செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள சமசப்தக் யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்! -
கொத்தமல்லி மாங்காய் சாதமும், உருளைக்கிழங்கு வறுவலும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாருங்க.. -
உஷார்.. இந்த 5 உணவுகள் ஒருவரது ஆயுளை பாதியாக குறைக்குமாம்.. எச்சரிக்கும் டாக்டர். பிள்ளை! -
கடகம் செல்லும் சுக்கிரன்: ஜூன் 08 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.! -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை குறையும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் இருப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி தேடிவருமாம் -
குருபெயர்ச்சியால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு கூரையை பிச்சுட்டு அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம் -
10 வரமிளகாயும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த கர்நாடகா கெம்பு சட்னியை அரைங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும்
இன்னைக்கு உங்களுக்கு இதுதாங்க நடக்கும்... உங்க ராசி அப்படி தான் சொல்லுது...
daily horoscope 10.3.18, 10.3.18 ஆம் நாளான இன்று உங்களுடைய ராசிக்கான பலன் எப்படி இருக்கும்
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

மேஷம்
தர்ம காரியங்களால் புகழ் உண்டாகும். பொது காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு தானே புகழ் தேடி வரும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். இதுவரை இழுத்துக்கொண்டிருந்த முக்கியமான அலுவலகக் காரியங்களை செய்து முடிப்பீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை - தெற்கு
அதிர்ஷ்ட எண் - 9
அதிர்ஷ்ட நிறம்- இளஞ்சிவப்பு

ரிஷபம்
தந்தையிடம் பொறப்பாக நடந்து கொள்ள வேண்டிய நாள். சந்திராஷ்டமம் நடைபெறுவதால் பிறரை விமர்சனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். தொழில் சம்பந்தமாக அலைய வேண்டியிருக்கும். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். சுமாரான பலன்கள் கிட்டும் நாளாகவே அமையும்.
அதிர்ஷ்ட திசை - தெற்கு
அதிர்ஷ்ட எண் - 2
அதிர்ஷ்ட நிறம்- வெள்ளை நிறம்

மிதுனம்
கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வழக்ககளில் எதிர்பார்த்த முடிவுகள்கிடைப்பதில் கால தாமதமாகும். விலையுயர்ந்த பொருள்களைக் கையாளும்போது கவனத்துடன் கையாளுங்கள். விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆரோக்கிய விஷயத்தில் அதிக கவனம் தேவை.
அதிர்ஷ்ட திசை - கிழக்கு
அதிர்ஷ்ட எண் - 5
அதிர்ஷ்ட நிறம்- இளம்பச்சை

கடகம்
வாரிசுகளின் உடல் நலத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள். போட்டிகளில் வெற்றி கிட்டும் நாள். இளைய சகோதரர்களிடம் அமைதியைக் கடைபிடிக்க வேண்டும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். ஆன்மிக நம்பிக்கை அதிகரிக்கும் நாள். யாகங்களில் கலந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை - வடக்கு
அதிர்ஷ்ட எண் - 5
அதிர்ஷ்ட நிறம்- ஆரஞ்சு நிறம்

சிம்மம்
வீடு, மனைகளால் சேமிப்பு அதிகரிக்கும். தொழிலில் வாடிக்கையாளர்களின் ஆதரவால், சாதகமான சூழல் உண்டாகும். பேச்சுத் திறமையால் லாபம் உண்டாகும். சுய தொழிலில் மேன்மை உண்டாகும். மனக்கவலைகள் நீங்கி, புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை - கிழக்கு
அதிர்ஷ்ட எண் - 1
அதிர்ஷ்ட நிறம்- இளம்பச்சை

கன்னி
நீண்ட நாட்களாக, செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த காரியத்தை உடனடியாக செய்து முடிப்பீர்கள். இதுவரை இருந்துவந்த காது சம்பந்தப்பட்ட பிரச்னைகள் குறையும். தொழில் முன்னேற்றுத்துக்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உயரதிகாரிகளின் உதவியால், தொழிலில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும்.
அதிர்ஷ்ட திசை - தெற்கு
அதிர்ஷ்ட எண் - 7
அதிர்ஷ்ட நிறம்- பல வண்ண நிறங்கள்

துலாம்
தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். தாய்வழி உறவினர்களால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் முன்னேற்றமான சூழல் அமையும். பயணங்களால் பலன் கிட்டும்.
அதிர்ஷ்ட திசை - கிழக்கு
அதிர்ஷ்ட எண் - 5
அதிர்ஷ்ட நிறம்- அடர்பச்சை

விருச்சிகம்
தொழிலில் புதிய யுக்திகளைக் கையாண்டு, லாபம் அடைவீர்கள். தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். நண்பர்களுடன் சேர்ந்து விருந்துகளில் பங்கேற்பீர்கள். மனதில் இருந்த நீண்ட நாள் கவலைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை - தெற்கு
அதிர்ஷ்ட எண் - 9
அதிர்ஷ்ட நிறம்- பல வண்ண நிறங்கள்

தனுசு
கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். வாக்கு வன்மையால் லாபத்தை அடைவீர்கள். புண்ணிய யாத்திரை மேற்கொள்வீர்கள். அந்நியர்களால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும். வெளியூா பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
அதிர்ஷ்ட திசை - மேற்கு
அதிர்ஷ்ட எண் - 3
அதிர்ஷ்ட நிறம்- மிதமான கறுப்பு

மகரம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும்.நண்பர்களுடன் கூடிப்பேசி, மகிழ்வீர்கள். சுப செய்திகள் வந்தடையும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். வங்கிகளில் எதிர்பார்த்த சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை - கிழக்கு
அதிர்ஷ்ட எண் - 7
அதிர்ஷ்ட நிறம்- வெள்ளை

கும்பம்
கலை அறிவு அதிகரிக்கும். வெளிநாட்டுப் பயணங்களால், அனுகூலம் உண்டாகும். அருள் தரும் வேள்விகளில் பங்கு கொள்வீர்கள். பொதுத் தொண்டின் மூலம், கீர்த்தி உண்டாகும். பொறுப்புகளால் அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை - கிழக்கு
அதிர்ஷ்ட எண் - 1
அதிர்ஷ்ட நிறம்- ஆரஞ்சு நிறம்

மீனம்
வர்த்தகப் பணியில் உள்ளவர்களுக்கு லாபம் உண்டாகும். விவாதங்களினால் புகழ் அடைவீர்கள். நீர் வழி தொழில் சம்பந்தமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் இழந்த பொருள்கள் மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை - வடமேற்கு
அதிர்ஷ்ட எண் - 4
அதிர்ஷ்ட நிறம்- சாம்பல் நிறம்



Click it and Unblock the Notifications