For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவுல சீப்பா கிடைக்கிற இந்த பொருட்கள நீங்க வெளிநாட்டுல வாங்குறது ரொம்ப கஷ்டம்!

இந்தியாவுல சீப்பா கிடைக்கிற இந்த பொருட்கள நீங்க வெளிநாட்டுல வாங்குறது ரொம்ப கஷ்டம்!

By Staff
|

அலுவலகம் முடிந்து வீட்டுக்கு போனதும், பேன்ட் கழற்று வீசிவிட்டு லுங்கியை எடுத்து காட்டிக் கொண்டு, காலாட்டிக் கொண்டே டிவி பார்ப்பது என்பது ஒரு அலாதியான சுகம் தான். பெரும்பாலும் லுங்கியின் விலை ரோட்டு கடைகளில் நூறு ரூபாய்க்கும், கொஞ்சம் தரம் உயர்வு என்று கூறி, கடைகளில் ரூ.150, ரூ.200-க்கும் விற்கப்படும். ஆனால், ஒரு லுங்கியின் விலை ஐந்தாயிரம் ரூபாய் என்று கூறினால் நீங்கள் இனி, வாங்கி கட்டுவீர்களா?

சரி இதை விடுங்க! காலம், காலமாக நாம் ஓசியில் பயன்படுத்தி வரும் வரட்டி மற்றும் மாட்டு மூத்திரத்தை 500 மில்லி ரூ.250, ரூ.300 கொடுத்து வாங்க நீங்க தயாரா? இதை படிக்கும் போதே, இவன் என்ன சரியான கிறுக்கனா இருப்பான் போல, இதை எல்லாம் இம்புட்டு விலைக் கொடுத்து யாராச்சும் வாங்குவாங்களா? என்று பலருக்கு கோபம் கொப்பளிக்கும். ஆனால், இவ்வளவு விலை அதிகமாக விற்கும் ஆட்களும் இருக்கிறார்கள், அதை வாங்கும் ஆட்களும் இருக்கிறார்கள்.

அதை பற்றிய சிறிய தொகுப்பு தான் நான் இன்று, இங்கே காணவுள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லுங்கி!

லுங்கி!

ஸாரா (Zara) என்ற நிறுவனம் லுங்கியை 70 யூரோக்களுக்கு விற்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது இந்திய மதிப்பில் ரூ.4990/- ஆகும். நம் ஊரில் வெறும் ஐம்பது, நூறு ரூபாய்க்கு விற்கப்படும் லுங்கியை இந்நிறுவனம் ஆயிரங்களுக்கு விற்க தயாராகியுள்ளது.

இப்படியான அறிவிப்பு ஸாராவிடம் இருந்து வெளியானதில் இருந்து சமூக தளங்களில் இருந்து சர்வதேச ஊடகங்கள் வரை அனைவரும் மிகுந்த வியப்புடன் பதிவுகள் பகிர்ந்தனர்.

கயித்துக் கட்டில்!

கயித்துக் கட்டில்!

இன்னும் கிராமப்புறங்களில் பல இடங்களில் வீட்டுக்கு வெளியே, வயக்காட்டில் இந்த கயித்துக் கட்டிலை நாம் காணலாம். நகர் புறங்களிலும் இதன் விற்பனை பரவாயில்லை என்ற வகையில் ஒரு சில இடங்களில் மட்டும் ஆர்டர் பெற்று தயாரித்து தரப்படுகிறத. இதை ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 990 டாலர்களுக்கு விற்கிறார்கள். அநியாயமாக இல்லையா?

Image Source: Twitter

வரட்டி!

வரட்டி!

மாட்டின் சாணத்தை கொஞ்சம் நீருடன் கலந்து அதை உருட்டி, சுவற்றில் வட்டமாக அடித்து வரட்டி செய்து அதை வீட்டு உபயோக பொருளாக, உரமாக பயன்படுத்தி வந்தோம். அதுவும் பைசா செலவு இல்லாமல். ஆனால், இன்று அமேசான் போன்ற ஈ-காமர்ஸ் தளங்களில் ஒரு வரட்டி நூறு ரூபாயில் இருந்து முன்னூறு ரூபாய் வரைக்கும் விற்கப்படுகிறது. நாம் இழந்தோம், அழித்தோம்... அவர்கள் காசாக்குகிறார்கள்.

பசு மூத்திரம்!

பசு மூத்திரம்!

பசு மூத்திரத்தின் விலையைக் கேட்டால், வரட்டியே பரவாயில்லை என்பீர்கள். ஆம்! 500 மில்லி பசு மூத்திரத்தின் விலை அதிகபட்ச விலையாக 320 வரையும், குறைந்தப் பட்ச விலையாக 70 வரையிலும் கிடைக்கிறது. இதை இயற்கை உரம், இயற்கை பூச்சிக்கொல்லி என்ற பயன்கள் கூறி ஆன்லைன் தளங்களில் விற்று வருகிறார்கள்.

இதுமட்டுமல்ல, நாம் இந்தியாவில் காலம், காலமாக நமது தயாரிப்பாக கருதும் சில உணவுப் பொருட்களை, தாங்கள் கண்டுப் பிடித்ததாகவும் சில டகால்ட்டி வேலைகள் நடந்துள்ளன.

பூரி!

பூரி!

ஒரு சீன உணவகம் நாம் அனைவரும் விரும்பு உண்ணும் பூரியை Scallion Bubble Pancake என்ற பெயரில் விற்று வந்தது. அதை, தங்கள் சொந்த கண்டுபிடிப்பு உணவு என்றும் பெருமையாக போட்டிருந்தது. சீனா காப்பியடிக்கும் என்று தெரியும், ஆனால், இந்திய உணவு பூரி என்பது யாவரும் அறிந்தது. இதை கூடவா காப்பியடிப்பார்கள்.

Image Source: Youtube

மஞ்சள் பால்!

மஞ்சள் பால்!

காலம் காலமாக நாம் மஞ்சளை உணவிலும், மருத்துவ உணவுப் பொருளாகவும் உபயோகப்படுத்தி வருகிறோம். அதிலும், சளி, தொண்டை பிரச்சனை இருந்தால், பாலில் கொஞ்சம் மஞ்சள் கலந்து குடித்து வருவதை இன்றளவும் பல வீடுகளில் பின்பற்றப்படும் பழக்கமாகவும்.

இதை சான் பிரான்சிஸ்கோ நகரை சேர்ந்த ஒரு குடும்பத்தார், தாங்கள் கண்டுபிடித்த ஆரோக்கிய பானம் என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர். மஞ்சள் பாலுடன் கொஞ்சம், தேங்காய், பாதாம் சேர்த்துக் கொண்டதால், இது அவர்கள் உருவாக்கிய ஆரோக்கிய பானம் ஆகிவிட்டதாம். இதை கூடுதல் விலை வைத்து விற்று வருகிறார்கள்.

இதுப்போக நாம் பயன்பாட்டில் இருந்து தவிர்த்து வந்த பல பொருட்கள் இப்போது வெளிநாடுகளில் பரவலாக பயன்படுத்தி வரப்படுகிறது.

Image Source: Instagram

கரும்பு சர்க்கரை!

கரும்பு சர்க்கரை!

நம் நாட்டில் தூய்மையானது, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை என்று வெள்ளை சர்க்கரையை விற்றுவிட்டு, இப்போது அமெரிக்காவில் கரும்பு சர்க்கரையை ஆரோக்கியமானது இயற்கையான சர்க்கரை என்று கூவி, கூவி விற்று வர, அவர்களும் அதை வாங்கி விரும்பு தங்கள் உணவில் சேர்த்து சுவைத்து வருகிறார்கள்.

சாம்பல்!

சாம்பல்!

நாம் காலம், காலமாக சாம்பலை கொண்டு தான் பல் துலக்கி வந்தோம். கருப்பு, அசிங்கம் என்று பல மாயாஜால வேலைகள் செய்து. நம்மை முதலில் வெள்ளை பற்பொடிக்கு மாற்றினார்கள். பிறகு அதையே பேஸ்ட் ஆக்கி விற்று ஏமாற்றினார்கள்.

நாம் கொஞ்சம், கொஞ்சமாக இயற்கை வழிக்கு மாற துவங்குகிறோம் என்றதும், ஆயுர்வேதம், சாம்பல் கலந்த நற்குணம் கொண்ட பேஸ்ட் என்று மீண்டும் நம்மை ஏமாற்றி விற்று வருகிறார்கள். ஆனால், மேற்கத்திய நாடுகளில் கரியை கொண்டு பல் துலக்கும் முறை மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது. இது தான் ஈறுகளுக்கும், பற்களுக்கும் ஆரோக்கியமானது.

பால்!

பால்!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதுதான், பாக்கெட் பால் எத்தனைகொடுமையானது, இயற்கை பசும்பாலை நாம் மறந்தது எத்தனை பெரிய தவறு என்பதை பலர் அறிந்தனர்.

நாம் பருகி வந்த ஆரோக்கியமான A2 பாலை மாற்றி, A1 பாலை இந்திய சந்தையில் புகுத்தி நல்ல லாபம் பார்த்தனர். அத்துடன் இந்தியாவில் இதய நோய்கள் மற்றும் சர்க்கரை நோயை வளர்த்துவிட்டு சென்றனர். இப்போது, மேற்கத்திய நாடுகளில் A2 மில்க் என்று தனியாக ஆரோக்கியமானது என்று குறிப்பிட்டு அதிக விலைக்கு விற்று வருகிறார்கள்.

நம்மிடம் இருக்கும் வரை எந்த ஒரு பொருளின் மதிப்பும் நமக்கு தெரிவதில்லை, அதை இழந்த பிறகே வருந்துகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Cheapest Indian Based Products Which Became Costly in World Online Market!

Cheapest Indian Based Products Which Became Costly in World Online Market!
Desktop Bottom Promotion