For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சனி, செவ்வாய் இருவரில் யார் கெட்டவர்?

இங்கே சனி பகவான் மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கான குணங்கள் மற்றும் செயல்பாடுக்ள இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

|

சனி பகவான் என்றாலே தீமை மட்டுமே செய்வார். கிரகங்களிலேயே அவரைப் போல கெட்டது செய்கின்றவர்கள் யாருமே கிடையாது என்று நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதேபோல, செவ்வாய் கிரகமும் சுப தொடர்புகள் ஏதும் இல்லாத கிரகம் தான் என்றும் அதனாலும் கெடுதல்கள் நிறைய உண்டாகும் என்று நாம் யோசிப்பதில்லை. ஆனால் உண்மை என்ன தெரியுமா?...

charcters and actions of shani and sevvai

செவ்வாய் அதிக கெடுதலை செய்யுமா இல்லை சனி பகவானா என்று கேட்டால், பெரும்பாலான ஜோதிடக் கணிப்பாளர்கள் சொல்வது என்னவென்றால் செவ்வாய் தான் சனி பகவானை விடவும் அதிக அளவில் கெடுதல்களைச் செய்வார் என்று தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சனி பகவான்

சனி பகவான்

எந்த விதமான சுப தொடர்புகளும் இல்லாத சனி பகவான் சில மந்தமான குணங்களைக் கொடுப்பார். கறை படிந்த ஆடைகளை அணிய வைக்கும் அளவுக்கு கூட சிலரை பொருளாதார ரீதியாக பின் தள்ளிவிடுவார். கழிவுகளை சுத்தம் செய்யும் தொழிலைக் கூட செய்ய வைப்பார். அதாவது கோபரத்தில் இருப்பவர்களைக் கூட எளிமையாக குப்பை மேட்டுக்கு கொண்டு வருவார் என்பது தான் அதன் பொருள்.

என்ன செய்வார்?

என்ன செய்வார்?

எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்தாலும் கையில் இருப்பு என்பதே இல்லாத அளவுக்கு பணக் கஷ்டத்தைக் கொடுப்பார். உடல் ஆரோக்கியப் பிரச்னைகள் உண்டாகும். பிறர்களிடத்தில் அவமானங்களைச் சந்திக்க நேரிடும். இதுபோன்ற விஷயங்களையும் அதேபோல சில குறிப்பிட்ட இடங்களில் நன்மையான பலன்களையும் சனி பகவான் தருவார். ஏனெனில் அவருக்கு பெரிதும் சுப தொடர்பு என்பதே இல்லாத ஒரு கிரகம் தான் சனி பகவான். அவருடைய வலிமைக்கு ஏற்றவாறு அவருடைய பலன்களும் நன்மையும் தீமையும் இருக்கும்.

 செவ்வாய்

செவ்வாய்

செவ்வாய் என்ன செய்துவிடப் போகிறார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் சுப தொடர்புகள் ஏதும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிற கிரகங்களுள் செவ்வாயும் மிக முக்கியமானது. அதேசமயம் மிக வலியைமாக வினையாற்றக் கூடிய கிரகமும் இதுதான். செவ்வாய் உச்சத்தில் இருந்தால் இயல்பாகவே ரவுடித்தனங்கள் அதிகமாகிவடும்.

என்ன செய்வார்?

என்ன செய்வார்?

பிறரை ஏமாற்றி நிலங்களை அபகரித்தல், கொலை செய்யக் கூட துணிவது, கட்டப் பஞ்சாயத்துக்களில் ஈடுபடுவது, பணம் வழிப்பறி செய்வது, கற்பழிக்க முயுற்சிப்பது ஆகியவற்றை துணிந்து செய்ய செவ்வாய் தூண்டுவார்.

அடுத்தவர்களுக்கு பில்லி சூன்யங்கள் வைப்பது போன்ற தகாத காரியங்களைச் செய்ய செவ்வாய் உங்களைத் தூண்டுவார். யார் சொல்வதையும் காது கொடுத்துக் கேட்காமல் தான் சொல்வது தான் சரி என்று பிடிவாதம் பிடிப்பது, விபத்துக்களை ஏற்படுத்துதல், மருத்துவ செலவுகளை அதிகப்படுத்துதல் போன்ற பல்வேறு இடர்பாடுகளை செவ்வாய் உங்களின் மூலமாக மற்றவர்களுக்கும் மற்றவர்கள் வாயிலாக உங்களுக்கும் ஏற்படுத்துவார். சில சமயங்களில் தன்னுடைய வலிமைக்கு ஏறற்வாறு நற்பயன்களையும் தருவார்.

இருவரில் யார் நல்லவர்?

இருவரில் யார் நல்லவர்?

பொதுவாக உங்களுடைய ஜாதக அமைப்பில் சனி பகவான் கெட்ட அமைப்பில் இருந்தார் என்றால், அவருடைய தாக்கத்தினால் நீங்கள் மட்டுமே பாதிக்கப்படுவீர்கள்.

ஆனால் உங்களுடைய ஜாதகத்தில் ஒருவேளை செவ்வாய் கெட்ட அமைப்பில் இருநு்தார் என்று வைத்துக் கொண்டால், அவர் உங்களை விடவும் உங்களைச் சுற்றி உள்ளவர்களையே அதிகமாக பாதிப்படையச் செய்வார்கள். ஆனால் அந்த பாதிப்புகள் எல்லாவற்றுக்கும் நீங்களே காரணகர்த்தாவாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்வார். இப்போது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். சனி பகவான் அல்லது செவ்வாய் இரண்டில் யார் அதிக கெடுதல்களைத் தருவார்கள் என்று.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

charcters and actions of shani and sevvai

here we are discuss about the characters and actions of shani and sevvai.
Story first published: Friday, August 10, 2018, 12:12 [IST]
Desktop Bottom Promotion