For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அளவுக்கு அதிகமாக போதை பொருள் உட்கொண்டதால் மரணம் அடைந்த பிரபலங்கள்!

அளவுக்கு அதிகமாக போதை பொருள் உட்கொண்டதால் மரணம் அடைந்த பிரபலங்கள்!

By Staff
|

மனிதன் இயற்கையிடம் இருந்து பறித்து செயற்கையாக மாற்றியவை பலவன இருக்கின்றன. இயற்கை வளங்களில் இருந்து உணவு, மருத்துவம் என்பதில் தொடங்கி, மரணம் வரை இயற்கையை இழந்து நாம் வாழ்ந்து வருகிறோம்.

தற்போது நிகழ்வும் மரணங்களில் தற்கொலை, விபத்துக்கள் காரணமாக ஏற்படும் மரணங்களை தவிர மற்ற அனைத்துமே கொலைகள் தான். தெரிந்தே உணவுகளில் கலப்படம், அளவுக்கு மீறிய நச்சுப் பொருட்கள் பயன்படுத்துவது என மரணம் காலதாமதமாக யாரோ ஒருவரால் முன்பே நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகவே நிகழ்கிறது.

இது போக, பீடி, சிகரெட்டில் துவங்கி, ஹெராயின், கொகைன் வரையிலான போதை பொருட்கள் பயன்பாடும் பல மரணங்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

அப்படி அதிக அளவில் போதை பொருட்கள் எடுத்துக் கொண்டதால் மரணம் அடைந்த பிரபலங்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மர்லின் மன்றோ

மர்லின் மன்றோ

நார்மா ஜீன் என்ற இயற்பெயர் கொண்ட மர்லின் மன்றோ அளவுக்கு அதிகமாக போதை மருந்து எடுத்துக் கொண்டதால் இறந்தார் என்று அறியப்படுகிறது. ஆனால், இவருக்கும் ஜான் எப் கென்னடிக்கும் இருந்த இரகசிய உறவே இவரது மரணத்திற்கு காரணம் என்ற வதந்திகளும் இவரது மர்மமான மரணத்தின் பின்னணியில் பேசப்படுகிறது.

இதனால், இந்த அளவுக்கு அதிகமான போதை பொருள் எடுத்துக் கொண்டது என்ற காரணம். ஒருவேளை யாராவது அதிக அளவில் இவருக்கு போதை மருந்தை கட்டாயப்படுத்தி கொடுத்து கொலை செய்தும் இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியது.

ஹீத் லெட்ஜர்

ஹீத் லெட்ஜர்

பேட்மேன் தி டார்க் நைட் படத்தில் நடித்தவர் ஹீத் லெட்ஜர். இவர் ஒரு ஆஸ்திரேலிய நடிகர். இவர் வலிநிவாரணி, ஸ்லீப்பிங் பில்ஸ் மற்றும் சில போதை மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்ட காரணத்தால் தனது 28 வயதிலேயே மரணம் அடைந்துவிட்டார்.

அண்ணா நிகோல் ஸ்மித்!

அண்ணா நிகோல் ஸ்மித்!

1990களில் அமெரிக்காவின் மாடல் மற்றும் நடிகையாக திகழ்ந்து வந்தனர் நிகோல் ஸ்மித். இவர் 1993 பிளேபாய் பத்திரிகையின் வருட இதழில் இடம்பெற்றார். இவரது ரசிகர்கள் பலர் இவரை கோல்ட் டிக்கர் என்று அழைத்து வந்தனர்.

இவர் குளோரல் ஹைட்ரேட் மற்றும் பென்சோடைசீபீன்கள் எனும் போதை மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்ட காரணத்தால் 2007ல் ஹாலிவுட், ப்ளோரிடாவில் இருந்த ஹோட்டல் அறை ஒன்றில் இறந்த நிலையில் கிடந்தார்.

கிங் ஆப் பாப்!

கிங் ஆப் பாப்!

உலக இசை ரசிகர்களால் கிங் ஆப் பாப் என்று அழைக்கப்பட்டு வந்த மைக்கல் ஜாக்சன் தனது மருத்துவர் பரிந்துரை செய்திருந்த கடுமையான ப்ரோபஃபோல் மற்றும் பென்சோடைசீபீன்கள் போதை பொருளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்ட காரணத்தால் திடீர் கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

ஜூடி கார்லேண்ட்

ஜூடி கார்லேண்ட்

அமெரிக்காவை சேர்ந்த பாடகி மற்றும் நடிகை ஆவார். இவர் லண்டனின் இருந்த தனது குடியிருப்பில் புதியதாக திருமணமான தனது கணவருடன் குளியலறையில் இறந்து கிடந்தார்.

பார்பிடியூரேட்ஸ் (Barbiturates) எனும் போதை மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதன் காரணத்தாலேயே இவர்கள் இருவரும் மரணம் அடைந்தனர்.

Image Source: commons.wikimedia

ஜிம் மோரிசன்

ஜிம் மோரிசன்

தி டோர்ஸ் (The Doors) இசை குழுவின் முதன்மை பாடகராக இருந்தவர் ஜிம் மோரிசன். இவர் தனது 28 வயதில், பாரிஸ் குடியிருப்பில் வசித்து வந்த போது தனது குளியல் தொட்டியில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இவர் மதுவுடன் பார்பிடியூரேட்ஸ் என்ற போதை பொருளை அளவுக்கு அதிகமாக உட்கொண்ட காரணத்தால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார் என்று கூறப்படுகிறது. ஆனால், இவரது உடலை பிரத பரிசோதனை செய்யவிடாமல் தடுத்ததாக தகவல்கள் கூறுகின்றன.

Image Source: commons.wikimedia

லென்னி ப்ரூஸ்!

லென்னி ப்ரூஸ்!

இவர் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன், எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். லியோனார்ட் ஆல்ஃபிரட் ஸ்கேனிடர் எனும் இயற்பெயர் கொண்ட இவர் லென்னி ப்ரூஸ் என்றே பிரபலமாக அறியப்பட்டார்.

இவரது உடல் ஹாலிவுட் ஹில்ஸ்-ல் இருந்த இவரது வீட்டு குளியலறையில் காணப்பட்டது. இவர் தவறுதலாக அளவுக்கு அதிகமாக மார்பின் எடுத்துக் கொண்ட காரணத்தால் மரணித்தார்.

Image Source: commons.wikimedia

எல்விஸ் பிரெஸ்லி

எல்விஸ் பிரெஸ்லி

ரசிகர்கள் இவரை பிரபலமாக தி கிங் என்றே அழைத்து வந்தனர். இவர் அக்காலத்தின் ஆல்டைம் சிறந்த பாடகராக திகழந்தார். டென்னிசிமாகணத்தில் மெம்ஃபிஸ் எனும் இடத்தில் இருந்த இவரது மேன்சன் குளியலறையில் இவர் மரணித்திருந்தார்.

மெத்தாகுலான், கோடெய்ன், பார்பர்டுரேட் மற்றும் கொகைன் போன்ற போதை பொருட்களை அளவுக்கு அதிகமாக உட்கொண்ட காரணத்தால் மரணம் அடைந்திருந்தார் எல்விஸ் பிரெஸ்லி.

Image Source: commons.wikimedia

ஆண்டி அயர்ன்ஸ்!

ஆண்டி அயர்ன்ஸ்!

மூன்று முறை நீர்சருக்கு போட்டியில் உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர் இவர். ப்ளூ ஹரிசான்ஸ் என்ற படத்திலும் இவர் நடித்திருந்தார். இவருக்கு இருந்து போதை பொருள் அடிக்ஷன் பழக்கத்தால் 32 வயதிலேயே மரணம் அடைந்தார். டெக்சாஸ் மாகணத்தில் இருந்து ஒரு ஹோட்டல் அறையில் இவர் கொகைன், மெத்தம்பேடமைன் மற்றும் சில போதை பொருட்களை அளவுக்கு அதிகமாக உட்கொண்ட காரணத்தால் மரணம் அடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

Image Source:surfertoday

பிலிப் சீமோர் ஹாஃப்மேன்

பிலிப் சீமோர் ஹாஃப்மேன்

ஆஸ்கர் விருது வென்ற நடிகரான பிலிப் சீமோர் ஹாஃப்மேன், 2014 பிப்ரவரி மாதம் கையில் போதை பொருள் ஊசி குத்தியிருந்த நிலையில் இறந்து கிடந்தார். இவர் ஹெராயின் மற்றும் கொகைன் போதை பொருட்களை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்ட காரணத்தால் மரணம் அடைந்தார்.

 பிரிட்டானி மர்பி

பிரிட்டானி மர்பி

Girl Interrupted மூலம் Clueless பிரபலமாக அறியப்படும் பிரிட்டானி மர்பி போதை பொருள் அதிகம் எடுத்துக் கொண்டதால் மரணம் அடைந்தார். இவரது திடீர் மரணத்தை சுற்றி மர்மம் நிலவியது. கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதினார்கள். ஆகையால், இவரது உடலை இரண்டாவது முறை பிரேத பரிசோதனை செய்த போதுதான். இவர் போதை மருந்து அதிகம் எடுத்துக் கொண்டதால் இறந்தார் என்று அறியப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Celebs Who Died of Alcohol and Drug Overdose!

Celebs Who Died of Alcohol and Drug Overdose!
Story first published: Saturday, March 3, 2018, 13:02 [IST]
Desktop Bottom Promotion