For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்து முறைப்படி கட்டிய அரண்மனை எகிப்தில் பேய் பங்களா ஆனது எப்படி? 70 ஆண்டுகால மர்மம்!

கடந்த 70 ஆண்டுகளாக கேட்பாரற்று கிடக்கும் எகிப்தின் பேய் நகரம். அற்புதங்கள் நிறைந்திருந்தும், சிதலமடைந்து போனது ஏன்?

By Staff
|

Recommended Video

இந்து கோவில் கட்டமைப்பு தற்போது பேய் பங்களா..!- வீடியோ

பிரமிடுகளின் நாடு என்று அழைக்கப்படும் எகிப்தின் பரந்த நிலப்பரப்பு கொண்ட தலைநகரம் கைரோ (Cairo). கைரோவின் புறநகர் பகுதியில் தான் அமைந்திருக்கிறது நாம் இந்த தொகுப்பில் காணவிருக்கும் பேய் அரண்மனை இருக்கும் ஹெலியோபொலிஸ் (Heliopolis).

விமானத்தில் கைரோ நகர விமான நிலையத்தை அடையும் போதே நீங்கள் வானில் இருந்து ஹெலியோபொலிஸ் பகுதியை காண இயலும். பண்டையத் தொன்மையான கட்டமைப்புடன் கம்பீரமாக எகிப்திய மண்ணில் படர்ந்திருக்கும்.

அங்கு தான் இருக்கிறது இந்து கோவில் கட்டமைப்பு முறையில் தோற்றம் கொண்டிருக்கும் லே பாலைஸ் ஹிந்தௌ (le Palais Hindou). இதை உள்ளூர் மக்கள் கஸ்ர்-ஐ-பரோன் என்றும் பரோன் அரண்மனை என்றும் அழைத்து வருகிறார்கள். இந்த அரண்மனையில் புதைந்திருக்கும் ஏதோ மர்மம் காரணமாக 70 ஆண்டுகாலமாக கேட்பாரற்று கிடைக்கிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1950களில் இருந்து...

1950களில் இருந்து...

ஒரு காலத்தில் இந்த அரண்மனை பெல்ஜியத்தை சேர்ந்த ஒரு பெரும் பணக்காரர் கைவசம் இருந்தது. பரோன் எனும் அவர் ஒரு எகிப்திய ஆய்வாளரும் கூட. இது ஒரு முக்கியமான கட்டிடமாக கருதப்பட்டு வந்தது. கைரோ நகரின் பல முக்கிய சமூக நிகழ்வுகள், விழாக்கள் இந்த சிறப்புமிக்க கட்டிடத்தில் தான் நடத்தி வந்தனர்.

Image Source: Commons Wikimedia

பரோன்!

பரோன்!

பரோன் ஐரோப்பியாவில் பெரிய அளவிலான ரயில் பாதை கட்டமைப்பு, பாரிஸ் மெட்ரோ பணிகள் செய்து வந்ததாக அறியப்படுகிறது. பிறகு இவர் எகிப்திற்கு நிறைய சொத்து சம்பாதிக்க வந்தார். பரோன் அரண்மனை அப்போது நகரின் மையப்புள்ளியாக திகழ்ந்து வந்தது.

Image Source: Commons Wikimedia

19ம் நூற்றாண்டின் இறுதி...

19ம் நூற்றாண்டின் இறுதி...

19ம் நூற்றாண்டின் இறுதி காலம் மற்றும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் அது. அப்போது கீழை நாட்டு மரபுகள் பரவி, ஏற்க துவங்கிய காலமும் கூட. ஐரோப்பா உலகின் பல பண்டைய நாகரீகங்களை மீண்டும் ஆராய துவங்கியது. அந்த வகையில் கிரீஸ் மற்றும் எகிப்து, இந்தியா, சீனா போன்ற நாடுகளில் அதிக ஈர்ப்பும், கவனமும் செலுத்தி வந்தது.

Image Source: Commons Wikimedia

எகிப்து ஆராய்ச்சி...

எகிப்து ஆராய்ச்சி...

பரோன் எகிப்து குறித்து மற்றும் ஆராய்சிகள் மேற்கொள்ளவில்லை. இந்திய கட்டிடக் கலையின் ஈர்ப்பும், அதன் மீதும் ஆர்வமும் உண்டானது பரோனுக்கு. 1907ல் அலக்சாண்டர் மார்செல் என்ற பிரெஞ்சு கட்டிட கலை நிபுணருடன் இணைந்து இந்து கோயில் கட்டிடத்தை பற்றியும் ஆராய்கிறார் பரோன்.

Image Source: Commons Wikimedia

ஆங்கோர் வாட்!

ஆங்கோர் வாட்!

மார்செல் ஆங்கோர் வாட் கட்டிட கலை நுட்பத்தினால் ஈர்க்கப்பட்டவர். ஆங்கோர் வார் பழங்கால ஓடிஸா கோயில் கட்டிடக் கலைகளுடன் ஒத்துப் போகிறது என்றும் அறியப்படுகிறது.

1907-1911 இடைப்பட்ட காலக்கட்டத்தில் முழுக்க கான்க்ரீட் கொண்டு பரோன் அரண்மனை கட்டி எழுப்புகிறார்கள். இது உலகின் ஒரு சிறந்த கட்டிட கலைக்கான எடுத்தாக்காட்டாக அமைக்கிறார்கள்.

Image Source: Commons Wikimedia

கட்டிடம்!

கட்டிடம்!

பரோன் அரண்மனை இரண்டு அடுக்குகள் கொண்டு, உள்ளேயே மேல் தளத்திற்கு செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், வாழும் அறைகள், நூலக அறைகள், படுக்கை அறைகள் கட்டப்பட்டிருந்தன. வெளிப்புறத்தில் இந்து கடவுள்களான கிருஷ்ணா, அனுமன், விஷ்ணு, கருடா போன்றவர்களின் சிலைகள் உருவாக்கப்பட்டிருந்தது.

சுற்று சுவர்களில் இந்து புராணங்களை குறிக்கும் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. கதவுகளின் தாழ்பாள் தங்கத்தில் உருவாக்கி வைத்திருந்தனர்.

Image Source: Commons Wikimedia

முக்கிய கோபுரம்!

முக்கிய கோபுரம்!

பரோன் அரண்மனை "Shikara" எனும் இந்து கோவில் முறைப்படி அமைக்கப்பட்டிருந்தது. பரோன் தங்கியிருந்த அறைகள் இந்த கோபுரத்தில் தான் இருந்தது. இந்த கோபுரம் 360 டிகிரியில் சுழலும் வகையிலும், சூரிய வெளிச்சம் நேரடியாக அறை உள்ளே வரும் வகையிலும் அமைத்திருந்தனர்.

சுற்றியும் நிறைய தோட்டம் அமைக்கப்பட்டிருந்தது. தோட்டத்தில் விநாயகர், நாக மற்றும் காமசூத்ர காட்சி கொண்ட சிலைகள் உருவாக்கி வைத்திருந்தனர்.

Image Source: abandonedplaygrounds

விழாக்கள்!

விழாக்கள்!

பரோன் கவர்ச்சி மயமாக இந்த அரண்மனையை கட்டி வைத்திருந்தார். மேலும், கைரோ நகரின் முக்கிய விழாக்கள், சமூக கொண்டாட்டங்கள், விருந்துகள் போன்றவை அப்போது பரோன் அரண்மனையில் தான் நடத்தப்பட்டு வந்தன.

எகிப்திய அரசர்கள், ஐரோப்பாவை சேர்ந்த அரச குடும்பங்கள் மற்றும் அமெரிக்க செல்வந்தர்கள் என பலதரப்பட்ட மேல்தட்டு மக்கள் கொண்டாட்டங்களுக்கு அழைக்கப்பட்டனர்.

Image Source: Youtube

நிலப்பரப்பு!

நிலப்பரப்பு!

இந்த பரோன் அரண்மனை மொத்தம் 6000 ஏக்கர் நிலப்பரப்பில் கைரோ நகரின் புற நகரில் ஒரு பெரும் மண் பரப்பல் அமைந்துள்ளது. கைரோ ஹெலியோபொலிஸ் என்ற பெயரில் பரோன் அரண்மனை பகுதியில் ஒரு புறநகர் பகுதி அமைக்கத் திட்டமிட்டனர். கிட்டத்தட்ட அதுவொரு மாடர்ன் எகிப்தாக குறிக்கப்பட்டது.

Image Source: Sam valadi

சிறப்பம்சங்கள்!

சிறப்பம்சங்கள்!

அகலமான வீதிகள், தோட்டங்கள், ஹோட்டல்கள், கிளப்புகள், ஆடம்பரமான தாங்கும் விடுதிகள் என ஒரு உயர்தர இடமாக மாறியது. அதன் இதயமாக பரோன் அரண்மனை விளங்கி வந்தது.

மேலும், பரோனே தனது சொந்த செலவில் ஹெலியோபொலிஸ் பேலஸ் ஹோட்டல் என்ற ஒரு கட்டிடத்தை கட்டினார். அது இப்போது பிரசிடென்ட் ஹோட்டல் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

Image Source: Gab!S

மரணம்!

மரணம்!

இப்படி ஒரு கேளிக்கை சுரங்கமாக திகழ்ந்து வந்த பரோன் அரண்மனைக்கு ஒரு கருப்பு பக்கமும் இருக்கிறது. பரோனின் சகோதரி ஹெலெனா மர்மமான முறையில் பால்கனியில் இருந்து கோபுரத்தின் மேல் தவறி விழுந்து மரணம் அடைந்தார். மேலும், பரோனின் மகள் மிரியாம் திடீரென மனநல ரீதியாக பாதிக்கப்பட்டார். பரோன் 1929 உயிர் மாய்ந்தார். அவரது குடும்பத்தில் பல அசாதாரண நிகழ்வுகள் நடந்தன. அவரது மகன்கள் மற்றும் பேரன்கள் அங்கேயே வாழ்ந்து வந்தனர்.

Image Source: Hossam el-Hamalawy

1952ல்

1952ல்

அப்போது அரசராக இருந்த பாராக் பெரியளவில் வெளிநாட்டவர்களை அங்கிருந்த அகற்ற கூறினார். அப்போது பரோனின் குடும்பம் பாரிஸ் நகரத்திற்கு குடிபெயர்ந்து சென்றனர். பிறகு சவுதியை சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு அந்த அரண்மனை 1957ல் விற்கப்பட்டது.

Image Source: Peter Snelling

பேய் பங்களா!

பேய் பங்களா!

சவுதியை சேர்ந்த உரிமையாளர்கள் இந்த வீட்டை வெறுமென பூட்டியே வைத்திருந்தனர். இந்த அரண்மனியில் இருந்த பல கலை பொருட்கள் மற்றும் சிலைகள் திருடப்பட்டன, சிதைக்கப்பட்டன. அப்போது தான் இந்த அரண்மனை கேட்பாரற்ற நிலைக்கு தள்ளப்பட்டது, பேய் பங்களா என்றும் அழைக்க துவங்கினார்கள்.

கண்ணாடியில் இரத்தம்...

கண்ணாடியில் இரத்தம்...

1990-களில் பல கட்டுக்கதைகள் உருவாகின. உள்ளே அரண்மனை கண்ணாடிகளில் இரத்தக்கறை இருக்கிறது என்றும். சிலர் அந்த அரண்மனையில் பேய் நடமாட்டம் கண்டதாகவும் கூற ஆரம்பித்தனர்.

அப்படியே மெல்ல, மெல்ல எகிப்தில் பேய் நடமாட்டம் உள்ள பகுதிகளில் இதுவும் ஒன்றென உருவானது.

மறுவுருவாக்கம்!

மறுவுருவாக்கம்!

1990களில் இருந்த அரண்மனை பகுதியில் ஹோட்டல் மற்றும் கேஸினோ உருவாக்க திட்டமிட்டனர். ஆனால், அது கைவிடப்பட்டது. இடையே இந்திய தூதரகம் இதை கலாச்சார கட்டிடமாக உருவாக்க பிரபோசல் கொடுத்தது. ஆனால், அந்த திட்டமும் தவிர்க்கப்பட்டது.

Image Source: Youssef Abdelaal

மீண்டும்!

மீண்டும்!

2005ல் எகிப்து அரசாங்கள் இந்த சொத்தை தன்வசம் படுத்தியது. பிறகு மறுவுருவாக்கம் செய்ய திட்டமிட்டது. 2011 பல தடைகள் வந்தன திடீரென முயற்சிகள் கைவிடப்பட்டன. எப்படியோ சென்ற ஆண்டு (2017) மீண்டும் இந்த அரண்மனையின் மறுவுருவாக்கம் துவக்கப்பட்டது.

Image Source: abandonedplaygrounds

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Cairo’s ‘Haunted’ Temple-Palace

Cairo’s ‘Haunted’ Temple-Palace.
Desktop Bottom Promotion