For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கையை காதலித்துக் கொண்டே அக்காவிற்கும் ஒகே சொன்ன கில்லாடி ஆண்! my story #250

அக்கா தங்கையை ஒருவருக்குத் தெரியாமல் காதலித்து ஏமாற்ற நினைத்தவனின் முகத்திரையை கிழிக்கப்பட்ட உண்மைக்கதை.

|

என்னுடன் பிறந்தவர்கள் மூன்று பேர் நான் அக்கா,தம்பி. அக்கா ரொம்பவும் அமைதி தம்பியும் நானும் சேர்ந்து தான் இருக்கிற எல்லா சேட்டைகளையும் செய்வோம் எங்கள் இருவருக்கும் சேர்த்து ஆட்டத்திலேயே பங்கேற்காத அக்கா திட்டு வாங்குவாள்.

சின்ன சின்ன விஷயத்திற்காக எல்லாம் போட்டிப் போட்டு சண்டையிட்டு எங்கள் வீடே கலகலப்பாக இருக்கும். அக்கா பள்ளிப்படிப்போடு நின்றுவிட்டாள் தொலைநிலைக் கல்வி மூலமாக டிகிரி முடித்திருந்தாள். நான் உள்ளூரில் இருக்கிற கல்லூரிக்குச் சென்றேன் தம்பியை வெளியூருக்கு அனுப்பி படிக்க வைத்தார்கள். சந்தோசம் வசதி என்று எதற்குமே குறைவில்லை. எங்கள் வீட்டிற்குள்ளும் இப்படியொரு புயல் வீசும் என்று நாங்கள் யாருமே எதிர்ப்பார்த்திருக்கவில்லை. எங்கள் வீட்டிலும் பிரச்சனை உருவெடுத்து வந்தது. அது திருமணம் என்ற ரூபத்தில் உருவெடுத்து வருவதை அறியாமல் எங்கள் விட்டில் அக்காவிற்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பையன் எப்டி இருக்கணும்னு சொல்லு :

பையன் எப்டி இருக்கணும்னு சொல்லு :

கோவிலில் அக்காவின் ஜாதகத்தை வைத்து பூஜை செய்து மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை ஆரம்பித்தார்கள். அக்கா சொல்லு உனக்கு எப்ப்டி பையன் வேணும்னு நான் தேடிக் கொண்டு வரேன் அமைதியாக இருந்தாள் வாயவே திறக்கவில்லை. அம்மா மாமா வந்தா கூட நான் ஊர்ல இருந்து வந்தா அக்கா கூடத்தான் படுப்பேன் வெளியூர் மாப்பிள வேண்டாம் தினமும் போய் பாக்குற மாதிரி இல்ல வேண்டாம் நம்ம வீட்டோடயே எதாவது மாப்பிள ஜாதகம் வந்தா பாருங்க என்றேன்....

ஏண்டி அதுவே அமைதியா கிடக்கு இன்னும் அதப்போட்டு நசுக்கப்போறியா கல்யாணம் கட்டிட்டாவது சந்தோசமா போகட்டும். நீ மட்டும் இங்கயே இருக்கப் போறியாக்கும்? நீ எந்த ஊருக்கு வாக்கப்பட்டு போவியோ....

நம்ம ரூட் க்ளியர் :

நம்ம ரூட் க்ளியர் :

அக்காவின் திருமணத்திற்கு அவசரப்படுத்த இன்னொரு காரணமும் இருந்தது. நானும் ஆனந்தும் கடந்த ஒரு வருடமாக காதலித்துக் கொண்டிருந்தோம். அவன் வீட்டில் திருமணத்திற்கு அவசரப்படுத்த நான் தான் முதலில் அக்கா கல்யாணம் அதன் பிறகு தான் என் கல்யாணம் அதனால கொஞ்ச வெயிட் பண்ணு என்று சொல்லி வைத்திருந்தேன்.

அவனும் அதிக சம்பளம் கிடைக்கட்டும் என்று வீட்டில் சொல்லி திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தான். அக்காவிற்கு எப்படியாவது திருமணம் முடித்துவிட்டால் அதன் பிறகு விட்டினரிடம் நம் காதல் டாப்பிக்கை ஓப்பன் செய்திடலாம் என்று ஐடியா செய்து வைத்திருந்தேன்.

 பையன் :

பையன் :

நிறைய வரன்கள் வந்தது ஆனாலும் பல காரணங்களைச் சொல்லி அம்மா தட்டி கழித்துக் கொண்டேயிருந்தார். ஒவ்வொரு முறை போன் செய்யும் போதும் அக்காவின் குரல் கவலையடைந்து விரக்தியாவதை உணர்ந்திருந்தேன். மாப்பிள பாக்க ஆரம்பிச்சு இன்னும் மூணு மாசம் கூட ஆகல அதுக்குள்ள ஏன்க்கா இப்டி கவலப்படுற.... உனக்கு கண்டிப்பா நல்ல மாப்பிள கிடைப்பான் வீணா கவலப்படாத என்று சமாதானம் சொல்வேன்.

அக்காவை பள்ளிக்காலத்திலிருந்தே ஒருவன் ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறான் அவனும் வீட்டிற்கு பெண் கேட்டு வந்தான். ஆனால் குடும்பம், கௌரவம்,வருமானமில்லை என்று சொல்லி அப்பாவும் தம்பியும் சேர்ந்து அவனை அடித்து துரத்தி விட்டார்கள்.

மாப்பிள பாக்க வராங்க :

மாப்பிள பாக்க வராங்க :

கண்டிப்பா இந்த வாட்டி என்னால வெளிய வர முடியாது பசங்களோட வெளிய போறேன். போனவாட்டி வரமுடியாதுன்னு சொன்னதுக்கே மூஞ்சி காமிச்சிட்டாங்க இப்பவும் முடியாதுன்னு சொன்னா அவ்ளோ தான். ஊருக்கு நீயா போய்ட்டு வா என்று சொல்லிச் சென்றான் ஆனந்த்.

இவ்வளவு கெஞ்சியும் வரவில்லையே என்ற கோபம் ஒருபக்கம் இருந்தாலும் அவன் பக்கமும் கொஞ்சம் நியாயம் இருப்பதாகவே பட்டது. அக்காவிற்கு பெண் பார்க்க வருகிறார்கள் அதனால் வீட்டை க்ளீன் செய்ய வேண்டும் என்று சொல்லி இரண்டு நாட்கள் முன்னதாகவே வரச்சொல்லிவிட்டாள். அவர்கள் ஞாயிற்றுக்கிழமை வருவதாய் இருந்தது எனக்கு மறுநாள் பரிட்சை இருக்கிறது என்பதால் ஞாயிறு காலையே ஊருக்கு கிளம்பிவிட்டேன்.

ஸ்விட்ச் ஆஃப் :

ஸ்விட்ச் ஆஃப் :

ஊருக்கு வந்து இறங்கியதும் ஆனந்துக்கு கால் செய்தேன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது . ஒரு மணி நேரம் கழித்து கால் செய்தேன் மீண்டும் ஸ்விட்ச் ஆஃப், லேசாக பயம் தொற்றிக் கொள்ள அவனின் நண்பர்களுக்கு போன் செய்தேன். எடுத்தவர்கள் இன்னொரு குண்டை தூக்கிப் போட்டார்கள்.

அவன் எங்களோட வர்லயே என்னன்னு தெர்ல வர்ல மச்சின்னான் ரெண்டுவாட்டி கூப்டும் அப்டி சொன்னான் அதனால நாங்க கம்பல் பண்ணல என்றார். ப்ராக்டிக்கல் பரிட்சையை முடித்துக் கொண்டு மீண்டும் ஊருக்குச் சென்றேன் இடையில் ஏகப்பட்ட மெசேஜ் அனுப்பியிருந்தேன்.

மீண்டும் ஊருக்கு வந்திருக்கிறேன் சோகமாக உட்கார்ந்திருப்பதை பார்த்து அக்கா கண்டுபிடித்துவிட்டாள். என்னடி ஆச்சு ஏன் இப்டி அடஞ்சு கிடக்குற வா வெளிய போலாம் என்று கூட்டிச் சென்றால் தனியாக அக்காவைப் பார்த்ததும் அழ ஆரம்பித்துவிட்டேன்.

அக்காவிடம் எல்லாவிஷயத்தை கூறி அவனில்லாமல் என்னால் வாழ முடியாதுக்கா என்றேன். தானே அப்பாவிடம் பேசி சம்மதம் வாங்குவதாய் வாக்குறுதி அளித்தாள்.

மாப்பிள்ளை ஓ.கே :

மாப்பிள்ளை ஓ.கே :

ஞாயிற்றுக்கிழமை வந்து பாத்தவரையே முடிச்சிடலாமாங்க. நல்லா படிச்சவராவும் இருக்காரு நிறமாவும் இருக்காரு பெரியவளுக்கு பொருத்தமா இருப்பாரு என்று அம்மாவும் அப்பாவும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அக்காவிற்கு ஒரு பக்கம் சந்தோஷம். ஆனால் என்னை நினைத்து உள்ளே கவலைப் பட்டுக் கொண்டிருந்தாள்.

அக்கா நான் லவ் பண்ற பையன் காபி ஷாப் கூப்டுறான் அக்கா நீயும் வா கூட என்று அழைத்தேன் முடியவே முடியாது என்று சொல்லிவிட்டாள்.

முதலில் நானும் போகக்கூடாது என்று சொன்னவள் பின் என்னை மட்டும் போக அனுமதித்தால். நான் தான் சொன்னேன்ல உன்ன உண்மையா காதலிச்சா திரும்ப உன்கிட்டயே வந்து சேர்வாங்கன்னு ரெண்டு நாள் போன் எடுக்கலையாம் அதுக்காக இவங்க இங்க வந்து ஒப்பாரி வைக்கிறாங்க...

அதிர்ச்சி :

அதிர்ச்சி :

அக்காவும் அவரும் போனில் பேச ஆரம்பித்து விட்டார்கள் இரண்டு மாதங்கள் அப்படியே ஓடியது. விடுமுறைக்கு வீட்டிற்கு வரும்போதெல்லாம் அவளைப் பிடித்து ஓட்ட ஆரம்பித்தேன்.

தினமும் என்னிடமும் அத்தான் திட்டினாரு,முடிய வெட்டிக்கச் சொன்னாரு,கல்யாணம் ஆனதும் வண்டி ஓட்ட சொல்லித்தராராம்... மார்க்கெட்டுக்கு எல்லாம் நானே வண்டி ஓட்டிட்டு போய் வாங்கிக்கணுமாம், அவருக்கு என்ன கிஃப்ட் கொடுக்க, என்று கேட்டு நச்சரிப்பாள். ஒரு பக்கம் சிரிப்பாய் இருக்கும். இன்னொரு பக்கம் அக்காவிற்கு அவளை நேசிக்கும் ஒரு மாப்பிள்ளை கிடைத்துவிட்டார்.

அவள் நினைத்தபடியே நல்ல வாழ்க்கை அமையப்போகிறது என்று சந்தோஷமாய் இருக்கும்.

ஒரு முறை நானும் அவரும் சேர்ந்து படத்துக்குப்போனோம் என்று சொல்லி ஒரு படத்தை அனுப்பி வைத்தாள்.

விளையாடுறீயா நீ :

விளையாடுறீயா நீ :

படத்தைப் பார்ததும் அவளுக்கு கால் செய்தேன்... அக்கா விளையாடுறீயா நீ சும்மா பொய் சொல்லாதக்கா என்றேன் ஏய் இதுல என்னடி பொய் சொல்ல இருக்கு நீ அவர பாத்ததே இல்லையா? அன்னக்கி நம்ம வீட்டுக்கு... அட ஆமால்ல நீ தான் எக்ஸாம்னு ஓடிட்டல்ல போட்டோ கூட பாக்கலயா? இவரு தாண்டி என்றாள். அமைதியாக இருந்தேன். இரண்டு முறை ஹலோ ஹலோ என்ற குரல் கேட்டது போன் கட் செய்துவிட்டேன்.

அன்று இரவே ஊருக்கு கிளம்பிச் சென்றேன் அம்மாவிடமும் அப்பாவிடமும் மீண்டும் மீண்டும் அவர் தானா மாப்பிள்ளை என்று உறுதி செய்து கொண்டேன். இப்ப உனக்கு என்னப் பிரச்சனை ஏன் அதையே திரும்ப திரும்ப கேக்குற என்று கேட்டாள் அக்கா... ஒண்ணுமில்லக்கா சும்மா தான். அறைக்குள் வந்து படுத்துக் கொண்டேன்.

ஆனந்துக்கு மெசேஜ் செய்து அக்காவின் பெயரைப் போட்டு இதைப் பற்றி ஏன் என்னிடம் இருந்து மறைத்தாய் என்று அனுப்பினேன். மறுநிமிடம் கால் வந்தது, முதல் கேள்வியே உனக்கு எப்டி தெரியும் என்பதாகத்தான் இருந்தது. என்ன நினச்சுட்டு இருக்க நீ என்று நானும் கத்த.... ஏய் அன்னக்கி சட்டனா வீட்ல இருந்து பொண்ணு பாக்க போறோம் வான்னு கூட்டிட்டு போய்ட்டாங்க வேற வழி தெர்ல.... சடனா போனனால தான் ஃபிரண்ட்ஸ் கிட்ட முன்னாடியே வெளிய வரமுடியாதுன்னு சொல்லி வச்சியா? அது சடனா நடந்தது சரி... போய்ட்டு வந்தாவது சொல்லியிருக்கலாம் அதுவும் சொல்லல டெய்லி அவகூட பேசிட்டு இருந்துருக்க அப்பக்கூட உனக்கு இது தப்புன்னு தோணலயா

ஏன் வேண்டாம் :

ஏன் வேண்டாம் :

ஏய்... நான் எங்கடி பேசினேன் அவங்களா அன்னக்கி போன் பண்ணாங்க அட்டெண்ட் பண்ணேன் அவ்ளோ தான் என்றான் வாய்கூசாமல். உன்னைய அவ அத்தான்னு தான கூப்டுவா என்பதில் ஆரம்பித்து அக்கா என்னிடம் பகிர்ந்த உரையாடல்களில் சிலவற்றை அவிழ்த்துவிட்டேன். அந்தப் பக்கத்திலிருந்து பதிலே வரவில்லை.

நீ யாரதான் கல்யாணம் பண்ணப்போற இப்போவாது சொல்லித்தொல... ஏய் ஏண்டி இப்டியெல்லாம் பேசுற உன்னைய என்று சொல்லி முடிக்கும் முன்பே அப்போ இவ்ளோ நாள் எங்க அக்காகிட்ட பேசினது? வீட்ல எல்லாரும் உன்னைய தான மாப்பிளன்னு சொல்லிட்டு இருக்காங்க அவங்க எல்லாம்.... என்றதும் தான் அவனுக்கு விஷயமே புரிந்திருக்கிறது.

உங்க அக்காவா? என்று அதிர்ச்சியானான். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எங்களுக்குள் விவாதம் சென்று கொண்டிருந்தது.

அக்கா :

அக்கா :

இனி என் மூஞ்சிலயே முழிக்காத... என்னைய நீ ஏமத்திட்ட ஒவ்வொருவாட்டி அவகிட்ட பேசும் போது கூட என் நியாபகம் உனக்கு வரவேயில்லயா? என்று கேட்டுவிட்டு போனை வைத்துவிட்டேன் திரும்பினால் பின்னால் கதவுக்கு அருகில் அக்கா நின்று கொண்டிருக்கிறாள். ஓடிச் சென்று அக்காவை கட்டிக் கொண்டேன்.

சத்தியமா அது நீ லவ் பண்ண பையன்னு தெரியாதுடீ.... தெரிஞ்சிருந்தா நான் ஆரம்பத்துலயே வேண்டாம்னு சொல்லியிருப்பேன் உனக்கு துரோகம் செய்யணும்னு ஏமாத்தணும்னு நான் நினச்சதுகூட இல்ல என்று அவள் தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்தாள்.

அறைக்குள் இருவரும் அழுவதை கேட்டு அம்மா ஓடி வந்தார். பதற்றத்துடன் இருவரும் இப்படி அழுவதைப் பார்த்தவர் பயந்துவிட்டார். அவரை ஆசுவாசப்படுத்தி விஷயத்தை சொன்னாள் அக்கா. மூன்று பேருமே குழப்பத்தில் உட்கார்ந்திருந்தோம்.

அக்காவின் பக்கம் நிற்பதா அல்லது காதல் தான் பெரிது என்று சொல்லி அவன் எனக்குத்தான் வேண்டும் என்பதா? இந்த முடிவை விட இவ்வளவு நாள் நம்மை ஏமாற்றிக் கொண்டிருந்திருக்கிறானே என்ற உண்மை தான் பயங்கரமாய் சுட்டது.

 இப்போ என்னவாம் ? :

இப்போ என்னவாம் ? :

இரவு தாமதமாகத்தான் அப்பா வந்தார். நாங்கள் இருவரும் அறையை விட்டு வெளியே வரவேயில்லை. இந்த சம்மந்தம் நமக்கு வேணுமான்னு நல்லா யோசிச்சுக்கங்க என்று ஆரம்பித்தார். என்னடி காலைல சீக்கிரம் நிச்சயத்துக்கு நாள் பாத்துட்டு வாங்கன்னு சொன்ன இப்போ என்ன இப்டி பேசுற என்று கேட்டார்...

அவளுக்கு கல்யாணத்துல இஷ்டமில்லயாம் இன்னக்கி தான் என்று இழுக்க அப்பா அக்காவை கூப்பிட்டார். ஏன் இஷ்டமில்ல அதுக்கு தான் கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ணும் மாப்பிள்ளையையும் பேசவிடக்கூடாதுன்னு சொல்றது.... சின்ன சின்ன சண்டையெல்லாம் பெருசு படுத்தாதம்மா அப்பா தேதி எல்லாம் பாத்துட்டேன் மண்டபமும் பேசி வச்சிட்டேன் பணம் ரெடியானதும் வேலைய ஆரம்பிச்சிடலாம் என்றார்.

இல்லப்பா இந்த கல்யாணம் வேண்டாம்ப்பா... என்றாள் அக்கா

உயிர் கிடைத்தால் போதும் :

உயிர் கிடைத்தால் போதும் :

சரி போய் தூங்கு காலைல பேசிக்கலாம். நீங்க காலைல கேட்டாலும் இதே பதில் தான் என்றாள் அக்கா. அம்மாவை முறைத்துவிட்டு வெளியில் சென்றுவிட்டார். மூன்று பேரும் என்ன செய்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்தோம்.

பேசாம நீயே கட்டிக்கோ என்றாள் அக்கா.... இல்லக்கா வேண்டாம், அவர பாக்கும் போதெல்லாம் உனக்கு அவர் கூட பேசினது,பழகினது தான் நியாபகம் வரும் என்று மறுத்துவிட்டேன்.

அம்மா தம்பிக்கும் தகவல் சொல்லியிருப்பாள் போல இரவோடு இரவாக கிளம்பி விடியற்காலை வந்துவிட்டான். தம்பிக்கு முழு விவரம் தெரிவிக்கப்பட்டது. உன்கிட்ட கேட்டு தான் சம்மதம் சொன்னேன் இப்போ என்ன திடீர்னு வேணாம்....

பொம்பள புள்ளையாச்சே மேல கை வைக்ககூடாதுன்னு பாக்குறேன் என்று சொல்லி அப்பா அக்காவை மிரட்டிக் கொண்டிருந்தார். அம்மா என்ன சொல்வதென்று தெரியாமல் அழுது கொண்டிருந்தார் தம்பியும் அப்பா விடுப்பா, இங்க வா நீ என்று சொல்லி அப்பாவை இழுத்துக் கொண்டிருந்தான். அத்தனை குழப்பங்களுக்கும் நான் தானே காரணம். நான் இல்லையென்றால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லி அறைக்குள் ஓடிச் சென்று கதவை சாத்திக் கொண்டு தூக்கி மாட்டிக் கொள்ள போனேன். என்னை காப்பாற்றிவிட்டார்கள்.

அப்பாவிற்கு ஒரே அதிர்ச்சி இந்த வீட்ல என்னென்னமோ நடக்குது என்று தலையில் கைவைத்து உட்கார்ந்துவிட்டார்.

ரெண்டு பேரு வாழ்க்கைலயும் விளையாடிற்கான்... வீட்டுல அவனால நிம்மதியே போச்சு அவன நான் சும்மா விடமாட்டேன் என்று சொல்லி வீட்டை விட்டு கிளம்பிய தம்பியை அன்று இரவு ரத்தக்காயங்களுடன் மீட்டுக் கொண்டு வந்தார்கள் அவனின் நண்பர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Boy Plays Double Role In front of Sisters

Boy Plays Double Role In front of Sisters
Story first published: Tuesday, May 8, 2018, 16:05 [IST]
Desktop Bottom Promotion