For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விளையாட்டு மைதானத்தில் போராட்டம் இதுவே முதல் முறை இல்லை. இதன் முன் 5 முறை நடந்துள்ளது !

விளையாட்டு மைதானங்களில் மக்களுக்காக நடந்த 5 மாபெரும் போராட்டங்கள்! #UnknownHistory

|

காவிரி நீர் வாரியம் அமைக்க நீதிமன்றம் கொடுத்த கால அவகாசத்தை வீணடித்து விட்டு. மீண்டும் நேரம் கேட்டிருக்கிறது மத்திய அரசு. மத்திய அரசு கர்நாடகத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தான் தமிழகத்தை வஞ்சிக்கிறது என தமிழக அரசியல் அமைப்புகள் மற்றும் தலைவர்கள் கூறி போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் காவிரி நீர் வாரியம் மற்றும் ஸ்டெர்லைட் தடை குறித்து போராட்டங்கள் மாநிலமெங்கும் நடைப்பெற்று வருகிறது. இதன் ஒரு அங்கமாக தமிழகத்தில் சோறுக்கு வழியில்லாத போது ஸ்கோர் அவசியமா என்று கேளிக்கை தொடரான ஐபிஎல் சென்னையில் நடத்தக் கூடாது என பெரும் போராட்டம் வெடித்தது.

Biggest Protests That Happened in Play Ground For People Welfare!

சில இடங்களில் இது வன்முறையாகவும் மாறியது. இந்த போராட்டம் சரியானது என்று ஒருபுறமும், சரியான முறை அல்ல என்று கூறி மறுபுறும் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. வெளிநாட்டு வீரர்கள் மீது செருப்பை கொண்டு எறிந்தது எல்லாம் தவறான முறை என்றும் சிலர் சமூக தளங்களில் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் இப்படியான போராட்டம் இதுவே முதல் முறையாகும். ஆகையால் தான் இது பல கலவையான விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளது. ஆனால், உலக அரங்கில் விளையாட்டு இடங்களில் இப்படி மக்கள் உரிமைக்காக ஏற்கனவே ஐந்து போராட்டங்கள் நடந்துள்ளன. அவற்றை குறித்த சிறு தொகுப்பை இந்த கட்டுரையில் காணவிருக்கிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வியட்நாம் போர்!

வியட்நாம் போர்!

வரலாற்றில் மறக்க முடியாத போர்களில் ஒன்று வியட்நாம் - அமெரிக்கா போர். இந்த போர் நடந்துக் கொண்டிருந்த போது, குத்துச் சண்டை வீரர் முகமது அலியை, வியட்நாமுக்கு எதிராக அமெரிக்க இராணுவத்தில் சேர்ந்து போரிட வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்தனர்.

ஆனால், அமெரிக்காவில் கறுப்பின மக்களை நாய்களை போல நடத்தி, ஒரு மனிதனுக்கான அடிப்படை உரிமைகள் கூட அளிக்க மறுக்கப்பட்டு வந்த காலம் அது. ஆகையால், அந்த சந்தர்பத்தில் மாநிற மக்கள் வசிக்கும் வியட்நாமில் அமெரிக்கா பக்கமிருந்து தான் போரிட மாட்டேன், என்று தனது எதிர்ப்பை விளையாட்டு இடத்தில் இருந்து பதிவு செய்தார் முகமது அலி.

வறுமை!

அமெரிக்காவில் கறுப்பின மக்கள் அடிமைகளாகவும், வறுமையில் வாடியதையும் வரலாறு என்றும் மறக்காது. அடிமை தனம் உடைந்த போதிலும், சமநிலை உரிமைகள், வறுமை போன்றவை அவர்களை விட்டு நீங்காமல் இருந்தன.

அப்படியான சமயத்தில் தான் 1968ல் மெக்சிகோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்ற டாமி ஸ்மித் மற்றும் ஜான் கார்லோஸ் இருவரும், அமெரிக்க தேசிய கீதம் ஒலித்த போது தங்கள் கையில் கருப்பு நிற கையுறை அணிந்து கைகளை மேலே தூக்கி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

ஆப்கான் - ரஷ்யா!

ஆப்கான் - ரஷ்யா!

ரஷ்யா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிப்பு செய்திருந்தது. இந்த நிகழ்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் 1980ல் மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெறாமல் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் புறக்கணிப்பு செய்தது. இதன் மூலம் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டியது.

இதே பாணியில், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதன் பிறகு 1984ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளை ரஷ்யா மற்றும் அதன் தோழமை நாடுகளும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெறாமல் அமெரிக்காவுக்கு தங்கள் எதிர்ப்பை பதிலடியாக காட்டியது.

ஜனநாயகம் அழிவு!

ஜனநாயகம் அழிவு!

ஜிம்பாப்வேவில் 2000களின் ஆரம்பத்தில் ஜனநாயகம் அழிந்து வருகிறது என ராபர்ட் முகாபே ஆட்சியில் புரட்சி வெடித்தது. மக்கள் பலர் இதையொட்டி தங்கள் கருத்துகளை பதிவு செய்து வந்தனர்.

அதே சமயத்தில் 2003ம் ஆண்டு உலகக் கோப்பை விளையாட்டு போட்டியில் ஜிம்பாப்வேவின் ஆண்டி பிளவர் மற்றும் ஹென்றி ஒலாங்கோ கருப்புநிற ஆர்ம்பேன்ட் அணிந்து விளையாடி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

அடக்குமுறை!

அடக்குமுறை!

கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்காவில் கறுப்பின மக்கள் மீது போலீஸார் அடக்குமுறை கையாள்வதாக எதிர்ப்பு கிளம்பியது. கறுப்பின மக்களுக்கு ஆதரவாகவும், அமெரிக்க போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், அந்நாட்டு தேசிய லீக் கால்பந்து போட்டியில் தேசிய கீதம் ஒலித்த போது மண்டியிட்டு தனது எதிர்ப்பை பதிவு செய்தார் கால்பந்து வீரர் கோலின் கேப்பர்னிக்.

இவரை தொடர்ந்து பல விளையாட்டு வீரர்கள் இனவெறி, இனவாதம், அவர்களுக்கு எதிரான அநீதி போன்றவற்றுக்கு எதிர்ப்பு தொடர்ந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்து சென்றனர்.

Image Source: commons.wikimedia

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Biggest Protests That Happened in Play Ground For People Welfare!

Biggest Protests That Happened in Play Ground For People Welfare!
Desktop Bottom Promotion