For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

களிநடம் புரிந்த மேகங்களின் கூடல் விளையாட்டு - பிரமிக்க வைக்கும் புகைப்படத் தொகுப்பு!

களிநடம் புரிந்த மேகங்களின் கூடல் விளையாட்டு - பிரமிக்க வைக்கும் புகைப்படத் தொகுப்பு!

|

இயற்கையின் சில விஷயங்களை நாம் நமது வாழ்க்கையோடு ஒப்பிட்டுக் கொள்வது உண்டு. வாழ்க்கை ஓடத்தை போன்றது என்போம்... மலை போன்ற நிலையான உறவுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்போம்... காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்போம்... இதில்.., வாழ்க்கையில், வெற்றி, தோல்வி, நல்ல உறவுகளின் பிரிவு, மோசமான சூழல் என எது ஏற்பட்டாலும் நாம் முதலில் கூறும் ஒரு வார்த்தை.. எல்லாமே மேகத்தை போல... இதுவும் கடந்து செல்லும்...!

ஆம்! இயற்கையில் மனிதனின் கைக்கு எட்டாதது, அகப்படாதது மேகம். மேகம் மழைநீரை சுமக்கும் ஊர்தி மட்டுமல்ல. சில சமயம் பல வண்ணக் கோலமிடும். சில சமயம் நாம் ஆச்சரியப்படும் படி கேலிக் கூத்தடித்து பிரம்மிக்க செய்யும். இதோ! இந்த படங்களை போல...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முத்தம்!

முத்தம்!

சீனாவின் ஜீஜியாங் மாகாணத்தின் ஷோக்ஸிங் எனும் பகுதியில் ஜூலை 28, 2018ம் நாளன்று மக்கள் பலர் மேகத்தில் ஒரு ஆச்சரியத்தை கண்டனர். புகைப்படங்களும் எடுத்தனர். சாலையில் ட்ராபிக் நிறைந்துக் காணப்பட்ட அந்த கருமை சூழப்பட்டிருந்த மாலை வேளையில் மேகத்தில் ஒரு ஆணும், பெண்ணும் முத்தமிட்டுக் கொள்வது போன்ற அழகிய பிம்பம் தோன்றியது. கமலே தோற்கும் அளவிற்கு ஒரு லிப்லாக் காட்சி என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இயற்கையை யார் தான் வெல்ல முடியும்.

Image Source: imaginechina

கடவுளின் கைகள்!

கடவுளின் கைகள்!

இந்த படம் எப்போது எடுக்கப்பட்டது என்ற தெளிவான தகவல் கிடைக்கப்படவில்லை. ஆனால், போர்ச்சுகல் நாட்டில் எடுத்ததாக அறியப்படுகிறது. போர்ச்சுகலின் மதேயரா (Madeira) தீவில் இத்தகைய காட்சி புகைப்படமாக எடுக்கப்பட்டிருந்தது. சமூக வலைதளங்களில் இந்த புகைப்படன் கடவுளின் கைகள் என்று பிரபலமாக பகிரப்பட்டது. வானில் இருந்து எரிகல் விழுவது போன்ற பிம்பமும் இந்த மேக உருவத்தில் காணப்பட்டது. வானில் இருந்து ஏதோ எரிகல் தான் விழுகிறது என்று நினைத்து ஒருவர் இந்த காட்சியை புகைப்படமாக எடுத்திருக்கிறார்.

Image Source: meteomadeira

பனிப்பந்து!

பனிப்பந்து!

வானில் நாம் பலவிதமான உருவங்களின் பிம்பங்களை போன்ற தோற்றத்தில் மேகங்களை பார்த்திருப்போம். ஆனால், இப்படி பார்ப்பதற்கு பனிப்பந்து போன்ற தோற்றம் அளிக்கும் மேகத்தை காண்பது மிகவும் அரிது. ஜப்பானில் காரில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென மேகத்தின் இப்படியான விசித்திர தோற்றத்தை / வடிவத்தை கண்டு, தனது மொபைலில் புகைப்படமாக எடுத்திருக்கிறார். அதை இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர. அது வைரலாக பரவியது.

Image Source: @pmxpvrtmx / Twitter

ஓநாய்!

ஓநாய்!

பெரும்பாலும் நாம் மேகங்களில் காணும் தோற்றங்கள் விலங்குகளை போல தெரியும். நரி, கரடி, பூனை, நாய், பறவை போன்ற பிம்பங்களை அடிக்கடி காண இயலும். ஆனால், இப்படி சரியாக சூரியனுக்கு முன்னே, ஓநாய் ஊளையிடுவது போன்ற பிம்பங்களை காண்பது என்பது அரிதிலும் அரிது.

ஏலியன் வருகை!

ஏலியன் வருகை!

நாம் கண்ட பல ஏலியன் கதையம்சம் கொண்ட ஆங்கில திரைப்படங்களில் இந்த காட்சியை நீங்கள் பார்த்திருக்கலாம். திடீரென மேகத்தில் ஒரு பெரும் சுழல் ஏற்படும், ஒரு பெரிய ஓட்டை தென்படும்.. அதன் வழியாக ஒரு பறக்கும் தட்டு.. பூமிக்குள் வந்து இறங்கும். இதோ! இந்த மேகத்தின் பிம்பமும் அப்படியானதாக தான் இருக்கிறது.

Image Source: imgur

அணு ஆயுத பரிசோதனை!

அணு ஆயுத பரிசோதனை!

ஹிரோஷிமா, நாகசாகி குண்டுகள் வெடித்த புகைப்படங்கள் என்று நீங்கள் கூகுலில் சென்று தேடினால்.. இப்படியான ஒரு கருப்பு, வெள்ளை படங்களை தான் காண்பிக்கும். அணு ஆயுத வெடிகுண்டுகள் வெடித்தால் வானில் பல நூறு அடி உயரத்திற்கு அதன் தாக்கத்தை காண இயலும். இதோ! சூரிய அஸ்தமன நேரத்தில் வானில் அந்த வகையில் தோன்றிய ஒரு அற்புதமான மேக பிம்பம்.

Image Source: nicholas_t

ட்ராகன்!

ட்ராகன்!

பூமியில் வாழ்ந்திருக்கலாம் என்று இன்றும் கதைகளில், படங்களில் கண்டு உயிரினம் ட்ராகன். அதெப்படி ஒரு உயிரினத்தின் மூச்சு காற்றில் நெருப்பு வெளிப்படும் என்ற ஆச்சரியம் இன்னும் நமக்குள் இருக்கிறது. ட்ராகன் போன்ற பிம்பம் கொண்ட மேகம் தோன்றினாலே ஆச்சரியம் எனில், அது நெருப்பை கக்குவது போன்ற பிம்பம் கொண்ட மேகம்.. பேராச்சரியம்!

Image Source: catersnews

இலைகள்!

இலைகள்!

இயற்கை அழகு எனில், அந்த அழகை சற்றும் சீர்குலையாமல் சேமிக்கும் புகைப்படம் என்பது ஒரு அதிசய கலை. முதலில் எழுத்தாக வர்ணித்தனர், பிறகு சிற்பமாக வடித்தனர், பிறகு ஓவியமாக வரைந்தனர், இப்போது புகைப்படமாக க்ளிக்கி வருகிறார்கள். எதுவாக இருப்பினும் அது மனிதனின் விரல் நுனியில் இருந்த பிறந்தது ஒரு சிறப்பம்சம். இதோ! இலைகள் இன்றி காய்ந்துபோன மரத்திற்கு, செயற்கை இலைகளாக தோன்றி அழகு சேர்த்த மேகத்தின் கூட்டமைப்பு.

Image Source:Kees Terberg

கலை!

கலை!

இதில் மேகத்தின் பங்களிப்பு மிகவும் சிறியது. அந்த சிலையில் இருந்து வேற தூரத்தில், வேறு கோணத்தில் நின்று பார்த்தால்.. இந்த அதிசயம் உலகிற்கு அறியாமல் போயிருக்கும். இந்த படத்தின் அழகுக்கு முற்றிலும் காரணமானவர் இதை கிளிக்கிய அந்த புகைப்பட கலைஞர்/கலைஞி தான்.

Image Source: bukagambar

நெருப்பை கக்கும்....

நெருப்பை கக்கும்....

ட்ராகன் நெருப்பை கக்கும் என்பதை படங்களில், திரைப்படங்களில், அனிமேஷன் வீடியோக்களில் கண்டிருப்போம். ஆனால், நேரில் பார்க்க முடியுமா... நிச்சயம் முடியாது என்பதே நிதர்சனம். ஆனால், நிதர்சனத்தை தாண்டியது தானே அதிசயம். அதோ! அந்த வகையில், ட்ராகன் சிலையும், வான மேகமும் ஒன்றிணைந்து ஒரு அழகிய காட்சியளிக்கிறது.

Image Source: imgur

பறக்கும் தட்டுக்கள்!

பறக்கும் தட்டுக்கள்!

நாம் இதே தொகுப்பில் முன்பு ஓரிடத்தில் கூறி இருந்ததை போல... 80களில் வந்த ஏலியன் படங்களில், விண்வெளி படங்களில் பறக்கும் தட்டுக்களை இந்த வடிவத்தில் தான் கண்டிருந்தோம். இதோ! ஏலியன்களின் ஊர்தியாக கருதப்படும் அந்த பறக்கும் தட்டுகளின் பிம்பத்தை பிரதிபலிக்கின்றன இந்த மேகங்கள். நிச்சயம் பலமான காற்றின் லீலையே இந்த பிம்பத்திற்கு காரணமாக இருந்திருக்க வேண்டும்.

Image Source: Jean-Michel Priaux

தொப்பி!

தொப்பி!

பண்டையக் காலத்து ஜப்பானியர்களின் தொப்பியும், சீனாவின் ஒருசில இடங்களில் வீடுகளின் மேற்கூரை அமைப்பும் இப்படியாக தான் காணப்படும். இதோ! இங்கே பெரும் பனிமலை உச்சியில் ஒரு மிருதுவான வெல்வட் தொப்பியை போன்ற பிம்பத்தை கொண்டிருக்கிறது இந்த மேகங்கள். இயற்கையின் அழகு மனிதரின் கற்பனைக்கு அப்பாற்ப்பட்டது என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி.

Image Source: Dementievskiy Ivan

கைரேகை!

கைரேகை!

சிலருக்கு இது பறக்கும் தட்டு வரும் வழியாக, ஒரு சுழல் போல தெரியலாம். சிலருக்கு இரு கட்டைவிரல் கைரேகை போல தெரியலாம். அவரவர் கண்ணோட்டம், மனவோட்டதிற்கு ஏற்ப ஒரு பொருள் பிறக்கலாம். ஆனால், இதில் வெளிப்படும் அந்த இயற்கையின் அழகு அனைவரும் ஒன்றாகவும், சமமாகவுமே உணரப்படுகிறது.

Image Source: ladigue_99

துளிகள்!

துளிகள்!

மலை நின்ற பிறகு பேருந்தின் ஜன்னல் கம்பிகளில், மரத்தின் கிளைகளில், புல் நுனியில், அதிக நாள் யாராலும் கண்டுகொள்ளாமல் / பயன்படுத்தப்படாமல் இருந்த ஃபிரிட்ஜின் ஃப்ரீசரில் இத்தைய ஒரு நீர் மொட்டுகளை நாம் காண இயலும். ஆனால், அதுவே மேகத்தில் பிம்பமாக காண இயலுமா... சொல்லுங்கஎடிட் பண்ணது தானேன்னு சிலர் கேட்கலாம். கேமராவின் சில அமைப்புகளை (Settings) மாற்றினால் இப்படியான படங்களை எடுக்கலாம். இதில் கூடுதலாக ட்ரிக்ஸ் இருந்தாலும்... அதற்கு உதவியது மேகங்கள் தானே!

Image Source: Vincent Fryhover

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Beautiful and Incredible Cloud Formation Images

Here we have shown some of the beautiful and incredible cloud formation images that captured in all around the world. Lets, Check it out!
Story first published: Friday, August 3, 2018, 12:09 [IST]
Desktop Bottom Promotion