For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

போட்டோவால் வசமாக சிக்கிக் கொண்ட நபர்கள்!

போட்டோ எடுக்கும் போது அதன் பேக்கிரவுண்டினால் வைரல் ஆன சில புகைப்படங்கள்

|

முன்னணியில் பார்க்கும் விஷயங்களை விட அதற்கு பலம் சேர்க்கிற பின்னணிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவது அந்த காட்சிக்கு பலமாக ரசிகர்களிடையே கைத்தட்டல் வாங்குவதற்கு அதுவும் ஓர் காரணமாய் அமைந்திருந்திருப்பது தான்.

நாம் பார்க்கும் திரைப்படங்களில் கூட பின்னணிக்காட்சிக்காகவே ஏகப்பட்ட மெனக்கடல்கள் எடுத்திருப்பதை கவனித்திருப்போம். இதே கதை தான் நாம் எதார்த்தமாக எடுக்கிற புகைப்படங்களுக்கும் பின்னணி முக்கியம் என்பதை மறந்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட புகைப்படங்கள் வேற லெவல் ஹிட் அடித்திருக்கிறது ஒரு ரவுண்ட் பார்போமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்மைல் ப்ளீஸ் :

ஸ்மைல் ப்ளீஸ் :

போலீஸ் க்ரூப் போட்டோ எடுக்கும் போது உனக்கு என்ன மேன் வேல நடுவுல புகுந்து உள்ளேன் ஐயா என்று அட்டென்ஸ் போடும் ஒட்டகச்சிவிங்கி! போட்டோக்கு போஸ் கொடுக்குறவங்க கூட சாந்தமா நிக்கிறாங்க பின்னாடி போஸ் கொடுக்குற ஐய்யாவ பாருங்க அம்புட்டு பல்லும் தெரியுது.

ராணியம்மா :

ராணியம்மா :

உங்கள போட்டோ புடிக்கல ராணியம்மா இக்கட வாங்கோ..... இது போல ஓராயிரம் சம்பவங்கள கடந்து வந்திருப்போம். நம்ம ஒரு ஆங்கில்ல போட்டோ க்ளிக் பண்ண ட்ரை பண்ணிட்டு இருந்தா ஊடால புகுந்து ரணகளம் பண்ணீருவாங்க.... அது போலத்தான் ஆஸ்திரேலிய ஹாக்கி வீராங்கனை ஜேட் டைலர் அவங்க பாட்டுக்கு செல்ஃபி எடுக்க பின்னாடி எலிசபத் ராணி வாவ் என்று ஸ்மைலீ போஸ் கொடுத்த போது.

நிச்சயமா இந்த போட்டோ ஜேட் டைலருக்கு ரொம்ப ஸ்பெஷலா இருந்திருக்கும்.

டேடி...டேடி :

டேடி...டேடி :

தம்பதிகள்னா இப்டித்தான் இருக்கணும். எவ்ளோ சந்தோஷமா சிரிச்ச முகத்தோட இருக்காங்க என்று புலாங்கிதம் அடையும் அன்பர்கள் அப்படியே பேக்கிரவுண்டில் நிற்கும் ப்ளூ சட்டையை பார்க்கவும். ரியாக்‌ஷன் கைல இருக்குறது கொட்டிடுமோனு வர்ல.... வாண்டுனால தான்

 அப்பா பொண்ணு :

அப்பா பொண்ணு :

இது டைமிங் பிக்சர். இப்டியிருந்த நாங்க அடுத்த பத்து வருசம் கழிச்சு அப்டி இருப்போம் என்று பக்கத்து டேபிளில் தங்கள் எதிர்காலத்தை பார்க்கலாம். அது சரி அப்பாங்க எல்லாரும் காபியத்தான் குடிப்பாங்களா?

என்னடா நடக்குது இங்க?

என்னடா நடக்குது இங்க?

இயற்கை ஆர்வலர், காட்ட சுத்திப்பாக்குறேன், மேட்டுல உக்காந்து போட்டோ புடிக்கிறேன் வந்திடறது. வந்த இடத்துல இப்பிடி..... யோவ் நீ என்னைய பாக்கதான வந்த? எனக்கு எதாவது கொண்டு வந்தியா.... இங்க வச்சு ப்ரோப்போசலா... காண்டாகுறதுக்குல்ல ஓடிப்போயிரு என்று மிரட்டியிருக்குமோ எல்லாம் கண்ணாடிக்கு இந்தப்பக்கம் இருக்கிற தைரியம்.

 ஒரு முத்தா :

ஒரு முத்தா :

சிறு வயது படத்தைப் பார்த்தால் நம்ம தானா என்று சந்தேகமாகத்தான் இருக்கும். என்ன பண்ண எல்லாரும் இது நீதான்னு கைகாட்றாங்க பாக்க வேற கொஞ்சம் பப்ளியா இருப்போமா உடனே.... ம்ம்ம் ஆமாமா அது நான் தான் நான் தான்னு மண்டைய ஆட்டிடறது.

இங்க ஒரு குட்டிப் பொண்ணு தன்னோட சின்ன வயசு போட்டோவ பிடிச்சுட்டு இது நான் தான்னு போஸ் கொடுத்துட்டு இருக்கு பின்னாடி அண்ணங்காரன் என்ன பண்றான்னு பாருங்க நம்மள நம்ம தான் கொஞ்சிக்கணும்

நான் இல்லீங்க :

நான் இல்லீங்க :

இது யாரோட தப்பு. நம்மளோட போட்டோ பிடிக்கிற திறமைய எடிட்டிங் திறமைய எல்லாம் இப்டிதான் காட்றது. சாஞ்சு இருக்கிற கோபுரத்த ஒத்தக்கையல் புடிக்கிறது, தாஜ்மாஹலா எதோ குடுமிய புடுச்சு தூக்குறது, வானத்துல அக்கடான்னு கிடக்குற நிலாவ வச்சு சடுகுடு ஆட்டம் ஆடுறது, செவனேன்னு கொட்டிட்டு இருந்த அருவிய வாய்ல புடுக்கிறது என்ன அழிட்டியம்..... இதோ உங்கள எல்லாம் தட்டி கேக்க ஒரு வந்துட்டான்ல

நம்ம ஒருத்தர ஏமாத்தினா நம்மள ஏமாத்த ஒருத்தன் வருவான்னு இந்த படத்த பாத்து தான் சொல்லியிருப்பாங்களோ

நண்பேண்டா :

நண்பேண்டா :

நட்புனா என்னான்னு தெரியுமான்னு இன்னும் தளபதி டயலாக்க பேசிட்டு இருக்காம இந்த புள்ளைகள பாருங்க. மிஸ் வரலன்னா நீ முன்னாடி தூங்கு உன் மண்டைல அண்டக்கொடுத்துட்டு அப்டியே நானும் ஒரு குட்டித்தூக்கம் போய்ட்றேன்னு சொல்லியிருப்பார் போல

நண்பன் பேச்ச மீற முடியுமா? ஆடாமா அசையாம தம்பி எவ்ளோ சமத்தா தூங்குறாப்ல

பாப்பா :

பாப்பா :

இது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். கண்ணுக்குத் தெரியாமல் திடீரென்று நிகழ்ந்தது என்று சொல்லும் சம்பவங்கள் இப்டி தான் நடந்துச்சுன்னு ஆதரத்தோட காமிச்சா?

அந்த நொடிய திருப்பி போய் நம்ம காப்பாத்தியிருக்க மாட்டோமான்னு நினைக்கத் தோணும். அதே போலத்தான் இந்த படமும். 1989 ஆம் வருசம் ஹாலோவன் திருவிழா அப்போ குழந்தைகளுக்கு வேஷம் போட்டு போட்டோ எடுக்க பின்னாடி ஊஞ்சல்ல விளையாடிட்டு இருந்த குட்டிப்பாப்பா தலைக்குப்புற விழறதும் க்ளிக் ஆகிடுச்சு.

சிரிச்சுட்டா போச்சு :

சிரிச்சுட்டா போச்சு :

ஹோட்டலுக்கு போனா திங்கிறதில்ல மொதோ க்ரூப் போட்டோவோ அல்லது செல்ஃபியோ எடுத்து ஃபேஸ்புக்ல போட்டாதான் தண்ணியே தொண்டையில இறங்கும்னா பாத்துக் கோங்களேன்...

பின்னாடி உக்கார்ந்திருக்குற ஃபேமிலி க்ரூப் போட்டோ எடுக்க முன்னாடிப்பக்கம் வர.... வாவ் நம்மளதான் எடுக்க வந்திருக்காங்கன்னு நினச்சு அம்மணிக கெக்கபெக்கேன்னு சிரிச்ச போது....

பையனால உங்கள இல்ல உங்க பின்னாடி தான் போட்டோ எடுக்கப் போறேன் யூ கண்டினியூன்னு சொல்லவும் முடியாம பய க்ளிக் பண்ணிட்டான்.

ஒண்ணும் சொல்றத்துக்கு இல்ல :

ஒண்ணும் சொல்றத்துக்கு இல்ல :

கையில பபுள்கமை இழுத்துவிட்டு பயபுள்ள போட்டோ எடுக்க நினச்சிருக்கு அடடே..... இவ்ளோ நீளமா கூட இருக்குமான்னு ஆச்சரியப்படுறதுக்கு இல்ல இந்த போட்டோ கீழ பிங்க் கலர்ல என்ன தெரியுது? இந்த காலுக்கு சொந்தக்காரங்க ஷூ போடுங்களா இல்ல செருப்பு போடுவாங்களா??

நிழல் ஜாக்கிறதை :

நிழல் ஜாக்கிறதை :

ஒரு இடம் கொஞ்சம் ஒதுக்குப்புறமா இருந்துறக்கூடாது உடனே டோர ஒப்பன் பண்ணிற வேண்டியது. குடும்பத்தோட பார்ட்டி கொண்டாட டென்ட் எல்லாம் கட்டி ஜாலியா இருக்க அவசரத்துக்கு எங்க போகண்ணு தெரியாம ஒரு அப்பாவி டென்ட்ட விட்டு வெளிய போயிருக்காரு.... சார் எதோ அவசர வேலையா போறாருன்னு எல்லாரும் எந்திருச்சு வழிவிட இந்த அவசரத்துக்குன்னு போட்டோ பாத்த பிறகுதான் தெரிஞ்சதாம்.

இது கார்டன் போட்டோ புடிக்கலாம் :

இது கார்டன் போட்டோ புடிக்கலாம் :

கார்டனுக்கு போலாம்னு கூட்டிட்டு வந்திடறது அப்பறம் சுத்தி பாக்க விடாம இங்க பாரு இங்க பாருன்னு போட்டோவா புடிச்சு தள்ளிடறது. கார்டன் எங்கன்னு கேட்டா அங்க எடுத்த போட்டோன்னு அம்புட்டு போட்டோவ கொட்றது....

கொஞ்சம் பாருங்க ஒரு அம்மா செல்ஃபி எடுக்குது பின்னாடி வர்ற எல்லா அம்மாவும் ஒரு கையில பாப்பாவ தூக்கிட்டு வர்ற ட்ராலி இன்னொரு கையில போனு...

ஒரு எண்டே இல்லையா? :

ஒரு எண்டே இல்லையா? :

முன்னாடி அண்ணன் சீரியசா விதவிதமா போஸ்கொடுத்து செல்ஃபி எடுக்க பின்னாடி தம்பிக்காரன் மைண்ட் வாய்ஸ் கேக்குதா? தம்பி உள்ள புலம்புறது கேக்குதுப்பா..... கேக்குது

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Background Fails Viral Photo

Background Fails Viral Photo
Story first published: Friday, June 22, 2018, 18:05 [IST]
Desktop Bottom Promotion