Latest Updates
-
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும்
லண்டன் செல்லவிருந்த இந்திரா காந்தி பிரதமரானது எப்படி? - ஒரு நிகழ்வு, புரட்டிப்போடப்பட்ட வரலாறு!
லண்டன் செல்லவிருந்த இந்திரா காந்தி பிரதமரானது எப்படி? - ஒரு நிகழ்வு, புரட்டிப்போடப்பட்ட வரலாறு!
யார் ஒருவரின் வாழ்க்கையும் ஒரு நீண்ட நேர் பாதையாக அமைவதில்லை. சில மேடு பள்ளங்கள், ஏற்ற இறக்கங்கள், ஒரு டைவர்ஷன், யு டர்ன், திடீர் தடை, அழுத்தம், புறக்கணிப்பு, உரிமை பறிப்பு, அவமானம், அடையாள திருட்டு என ஏதோ ஒரு தாக்கம் வாழ்க்கையில் குறுக்கிடும்... அதை தகர்த்து, தாண்டி எப்படி நாம் மீண்டும் நமது நேர்(மையான) பயணத்தை தொடர்கிறோம் என்ற விளையாட்டு தான் வாழ்க்கை.

சிலசமயம் நாமாக சரி செய்துக் கொள்வோம், சில சமயம் சிலர் வந்து திருத்துவார்கள்... சில சமயம் அதுவாகவே சரியாகிவிடும். நம்மை வெற்றியை நோக்கி, இலட்சியங்களை நோக்கி ஓட ஒரு ஊக்க சக்தி வேண்டும். அது ஒரு நபராக, நிகழ்வாக எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
அப்படி காந்தி, மால்கம் எக்ஸ், இந்திரா காந்தி மற்றும் பாபர் போன்றவர்களின் வாழ்வில் உண்டான அந்த ஒரு நிகழ்வை குறித்து தான் இங்கே பார்க்க போகிறோம்.

காந்தி!
இந்தியாவின் சுதந்திரத்தை உறுதி செய்த அந்த ரயில் பயணம்...
1893ம் ஆண்டு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, டர்பனில் இருந்து பிரிட்டோரியாவுக்கு முதல் வகுப்பில் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். அந்த கோச்சில் ஐரோப்பியாவை சேர்ந்த வேறு ஒருவரும் பயணித்துக் கொண்டிருந்தார். அவருக்கு காந்தியின் தோற்றத்தை கண்டதும் பிடிக்கவில்லை. காந்தி பார்ப்பதற்கு ஒரு கூலியை போல இருந்தது அவரை உறுத்தியது.

வெளியேற்றம்!
காந்தியை தனது கம்பார்ட்மெண்டில் இருந்து வெளியேற கூறுகிறார் அவர். வெளியேற மறுத்த காந்தியை ரயில் பீட்டர்மாரிட்ஸ்பர்க் ஸ்டேஷனை அடைந்த போது ரயிலில் இருந்து வெளியே தள்ளினார்கள். அப்போது தான் காந்திக்குள் ஒரு புரட்சியாளர் பிறந்தார். தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் உரிமைகளுக்காக போராடினார். பிறகு, இந்தியாவிற்கு வந்து இந்திய மக்களின் விடுதலைக்காக போராடி தேசப்பிதாவாக உயர்ந்தார்.

மால்கம் எக்ஸ்
ஒரு தண்டனை குற்றவாளியை புரட்சியாளன் ஆக்கியது...
மால்கம் எக்ஸ் ஆப்ரிக்கன் அமெரிக்கன் மனித உரிமை ஆர்வலர். மால்கம் லிட்டில் என்ற பெயருடன் பிறந்த இவர், போதை மருந்து கடத்தல், சூதாட்டம், திருட்டு போன்ற குற்றங்களில் தனது இளம் வயதில் ஈடுபட்டு வந்தார். கடைசியாக இவரை ஒரு கொள்ளை சம்பவத்தின் போது கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வேட்கை!
சிறை சென்ற போது தான் ஜான் பெம்ப்ரி என்ற குற்றவாளியை சந்தித்தார் மால்கம் எக்ஸ். அவருடன் ஏற்பட்ட நட்பு, அவரிடம் இருந்து உண்டான பெரும் வேட்கையானது மால்கம் எக்ஸ்'ஐ ஒரு அரசியல் தலைவராக உருவாக்கியது.
Image Source: Wikipedia

பாபர்!
முகலாய பேரரசர் பாபருக்கு ஒயின் மீது கொஞ்சம் ஆவல் அதிகம். முதலாம் பானிபட் போரின் போது ஏற்பட்ட விளைவால் முகலாய படையில் வீரர்கள் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்தது, மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். அப்போது தான் பாபர் துவண்டி போயிருந்த தனது படையினரிடம் எழுச்சியூட்டும் படியாக பேசினார். தனது அரண்மனையில் இருந்த ஒயின் முற்றிலுமாக ஒழித்தார்.

வெற்றி!
இதனை எல்லாம் கண்டு ஊக்கம் பெற்றனர் முகலாய போர் வீரர்கள். முந்தைய போரில் அடைந்த தோல்வி மற்றும் வருத்தத்தை எல்லாம் துடைக்க மீண்டும் ராஜ்புத் மீது போர் எடுத்து வெற்றிக் கண்டனர். வெற்றி அடையும் வரை ஒயினை தொடாத பாபர், வெற்றிக் கண்ட பிறகே ஓயினை மீண்டும் கையில் எடுத்தார்.

இந்திரா காந்தி!
இந்திரா காந்தி சாதாரணமாக அரசியலில் நுழையவில்லை. இந்திரா காந்தி பெரும் பேச்சாற்றல் கொண்டவரும் கூட கிடையாது. நேருவின் மரணத்திற்கு பிறகு காங்கிரசை நிறைய நல்ல தலைவர்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர். பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி அவர்களுக்கு நல்ல பெயரும் புகழும் இருந்த போதே இறந்துவிட்டார். அப்போது பலரும் காமராஜ் அய்யா அவர்கள் தான் அடுத்த பிரதமராக தேர்வாவார் என்று கணித்தனர்.

கிங் மேக்கர்!
ஆனால், காமராஜர் அவர்கள் தானே தனது பிரதமர் ஆகும் வாய்ப்பில் இருந்து விளக்கிக் கொண்டார். மாற்றாக லண்டன் சென்றுவிடலாம் என்று திட்டமிட்டிருந்த இந்திரா காந்தியை தேர்வு செய்து, அவரிடம் ஆளுமை இருக்கிறது, அவரை பிரதமராக்கலாம் என்று முடிவெடுத்தார் காமராஜ். இந்திரா காந்தியை பிரதமராக தேர்வு செய்ததால் தான் காமராஜர் அய்யாவை கிங் மேக்கர் என்றும் அழைக்கின்றனர்.



Click it and Unblock the Notifications