For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏர்போர்ட்டில் ஜாலியாக நடந்துபோன விநோத மிருகம்... பறந்துகொண்டே வீடியோ எடுத்த பயணி (வைரல் வீடியோ)

அலிகேட்டர் என்று சொல்லப்படும் கடல் முதலை இனத்தின் விநோத மிருகம் ஃபுளோரிடா விமான நிலைய தளத்தில் காலை நேரத்தில் ஹாயாக நடந்து சென்றுள்ளது. இதனால் 5 நிமிடம் தாமதமாக விமானப் புறப்பட்டது. அந்த விலங்கு ஜாலிய

|

அலிகேட்டர் என்று சொல்லப்படும் கடல் முதலை இனத்தின் விநோத மிருகம் ஒன்று ஃபுளோரிடா விமான நிலைய தளத்தில் காலை நேரத்தில் ஹாயாக நடந்து சென்றுள்ளது. இதனால் 5 நிமிடம் தாமதமாக விமானப் புறப்பட்டது.

viral stories

அந்த விலங்கு ஜாலியாக நடந்து செல்லும் காட்சியை விமானத்தில் பறந்து கொண்டே ஜன்னல் வழியாக ஒரு பயணி வீடியோ எடுத்துள்ளார். அந்த விநோதமான திகிலூட்டும் காட்சிகள் தற்போது இணைய தளத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விமான தாமதம்

விமான தாமதம்

image courtesy

பொதுவாக நம்மை போன்ற எந்த மனிதர்களாலும் சரியான நேரத்துக்குச் செல்லும் விமானத்தை தடுத்து நிறுத்திவிட முடியாது. மற்ற வாகனங்களைப் போல, கார் குறுக்கே இருந்தது, டிராஃபிக் என்று எந்த காரணமும் விமானத்துக்கு சொல்லிவிட முடியாது. வவானிலை மாற்றம் மட்டும் தான் விமானத்தை தாமதப்படுத்த முடியும். ஆனால் இப்படி எந்த காரணமுமே இல்லாமல் ஒரு விமானம் நேற்று தாமதமாக சென்றிருக்கிறது. அதற்குக் காரணம் யார் தெரியுமா?... சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஒரு விநோத விலங்கால் ஐந்து நிமிடம் விமானம் தாமதமாக கிளம்பியிருக்கிறது.

விநோத விலங்கு

விநோத விலங்கு

ஆலிகேட்டர் என்பது கடல்முதலை இனத்தில் ஒன்று. இது நான்கு கால்களாலும் நடந்து செல்லும். முதலையைப் போல் ஊர்ந்தும் செல்லும். இப்படி ஒரு விநோத மிருகம் விமானம் கிளம்பிச் செல்லும் ஹைவேயில் ஹாயாக வாக்கிங் போவது நடந்து போனால், விமானம் தாமதமாகத் தானே செல்லும். அப்படித்தான் ஆலிகேட்டர் என்னும் அந்த விநோத மிருகம் ஒர்லாண்டோ விமான நிலையத்தில் காலை நேரத்தில் மிகவும் ஹாயாக வாக்கிங் சென்றிருக்கிறது.

ஸ்பிரிட் ஏர்லைன்ஸ்

ஸ்பிரிட் ஏர்லைன்ஸ்

நேற்று காலை வாஷிங்டன் டி.சியில் இருந்து ஃபுளோரிடாவை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்க ஐந்து நிமிடம் தாமதம் ஆனது. தாமதத்திற்கான காரணத்தை அதில் விமான ஓட்டுநர் கட்டுப்பாட்டு மையத்துக்கு தெரிவித்துள்ளார்.

விடியோ எடுத்த பயணி

விடியோ எடுத்த பயணி

அந்த விநோத மிருகமான ஆலிகேட்டர் ஹைவேயை மிகவும் ஜாலியாக கடந்து செல்லும்வரை காத்திருந்த விமானத்தில், பயணம் செய்த ஒரு பயணி (ஆண்டனி வெலர்டி) தன்னுடைய செல்போகில் அந்த விநோத விலங்கு ஹைவேயில் ஹாயாக நடந்து செல்லும் காட்சியை வீடியோ எடுத்துள்ளார். அதை தன்னுடைய புஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நீங்களும் அந்த வீடிவைப் பார்த்து மகிழ வேண்டுமா?... கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவை பாருங்க...

?rel=0&wmode=transparent" frameborder="0">

வைரல் விடியோ

இப்படி ஹைவேயில் ஜாலியாக காலை நேரத்தில் வாக்கிங் செல்லும் விநோத உயிரினமான ஆலிகேட்டர் விடியோ தற்போது உலக அளவில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆலிகேட்டர் தான் இன்றைய டிரெண்டிங்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

alligator takes a morning stroll across the runway, passenger captures video

The alligator is seen calmly crossing the runway as it is its regular way of walking! Check the video that was shared by a passenger who shot from the plane window.
Story first published: Thursday, June 14, 2018, 13:21 [IST]
Desktop Bottom Promotion