For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எம புராணத்தின் படி உங்களின் இந்த செயல்கள் உங்களை நோக்கி எமனை விரைவில் அழைத்துவரும்

|

மரணத்தை கண்டு பயப்படாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். முடிந்தவரை தங்களின் மரணத்தை தள்ளி போடவே அனைவரும் விரும்புவார்கள். சாகாவரம் விரும்பாத மனிதர்களே இல்லை எனலாம். ஆனால் நம்மை மரணத்தை நோக்கி அழைத்து செல்வதும், இறந்த பின் நரகத்திற்கு கூட்டி செல்வதும் நம்முடைய பழக்கவழக்கங்களும், நாம் செய்யும் பாவங்களும்தான்.

according to Yama Purana these habits lead to early death

எம புராணத்தின் படி ஒருவரும் செய்யும் செயல்களே அவருக்கு எவ்வளவு சீக்கிரம் மரணம் ஏற்படக்கூடும் என்பதை நிர்ணயிக்கிறது. அதன்படி மனிதர்கள் செய்யக்கூடாத சில செயல்கள் எவை என்பதை எம புராணம் சொல்கிறது. இந்த பதிவில் எமனை உங்களை நோக்கி வேகமாக அழைத்து வரும் செயல்கள் எவை என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிரகணம்

கிரகணம்

பூமியில் அனைத்து உயிர்களும் நன்றாய் வாழ சூரிய ஒளி மிகவும் அவசியம். அதே சூரிய ஒளிதான் உங்கள் ஆயுளையும் குறைப்பதாக எம புராணம் கூறுகிறது. கிரகணத்தன்று சூரியனை ஊற்றி பார்ப்பது உங்கள் ஆயுளை குறைக்க கூடுமாம்.

கடவுள் நம்பிக்கை இல்லாமல் வாழுதல்

கடவுள் நம்பிக்கை இல்லாமல் வாழுதல்

அனைத்திற்கும் மேலே இருக்கும் கடவுளென்னும் அற்புத சக்தியை நம்பாதவர்கள், தர்மத்தின் படி நடக்காதவர்க்ளுக்கு மரணம் விரைவில் வரும். கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருப்பது மனிதத்தின் மேல் நம்பிக்கை இல்லாமல் இருப்பதற்கு சமம். ஆனால் கடவுள் பக்தி என்ற பெயரில் மனிதத்தை அழிப்பவர்களுக்கு எக்காலத்திலும் கடவுளிடம் மன்னிப்பு கிடையாது.

மூத்தோரை அவமதித்தல்

மூத்தோரை அவமதித்தல்

வயதானவர்கள் அனைவருமே கிட்டத்தட்ட கடவுளுக்கு சமமானவர்கள். அப்படி பட்டவர்களை அவமதிப்பது உங்களுக்காக நரகத்தின் வாசலை திறந்து வைக்கும்.

தவறான பாதை

தவறான பாதை

தர்மத்தின் வழி நடப்பவர்கள் எதற்கும் பயப்பட தேவையில்லை. ஆனால் தவறான பாதையில் செல்பவர்கள் நிச்சயம் மரணத்தை நினைத்து பயப்பட வேண்டும். ஏனெனில் அது அவர்களை நோக்கி விரைவாக வரும்.

MOST READ: கணவருக்கு தாய்ப்பால் கொடுப்பது நல்லதா? கெட்டதா?

தீயவர்களுடன் வாழுதல்

தீயவர்களுடன் வாழுதல்

நம்மை சுற்றியிருப்பவர்களின் எண்ணமே நம்மிடம் பிரதிபலிக்கும். எனவே தவறான எண்ணங்களுடன் வாழ்வது எமனை நீங்களே வரவேற்பது போன்றது. பெண்கள், குழந்தைகள், மனிதநேயம் பற்றி தவறான கருத்து உள்ளவர்களுடன் வாழ்வது நீங்கள் சாவதற்கு சமமானது.

கால் மேல் கால் போட்டு அமர்வது

கால் மேல் கால் போட்டு அமர்வது

நீங்கள் இந்த நிலையில் அமரும்போது, இடுப்புப்பகுதி முன்னோக்கி நகர்த்தப்படுகிறது, முதுகெலும்பு வளைந்து உடலின் கீழ்ப்பகுதியில் அதிக அழுத்தம் தரப்படுகிறது. இது பல இடைநிலை நோய்களை உருவாக்கும்.

இந்த நாட்களில் உடலுறவு வைத்தால்

இந்த நாட்களில் உடலுறவு வைத்தால்

கருட புராணத்தின் படி சில குறிப்பிட்ட நாட்களில் உடல்ரீதியான தொடர்புகள் வைத்து கொள்வது ஆபத்தானது. சதுர்த்தசி, ஒவ்வொரு மாதத்தின் அஷ்டமி நாட்கள் போன்ற நாட்களில் உறவு வைத்துக்கொள்வது மரணத்தை வரவேற்க கூடியதாகும்.

தவறான திசையில் தூங்குதல்

தவறான திசையில் தூங்குதல்

நாம் தூங்கும் முறையும், திசையும் கூட மரணத்தை விரைவில் வரவைக்கும். தெற்கு மற்றும் தென் மேற்கு திசைகளில் தலை வைத்து தூங்குவது மரணத்தை விரைவில் ஏற்படுத்தும்.

MOST READ: இந்த மூனு ராசிக்காரங்களும் இன்னைக்கு ஒரே ஜாலிதான்... மிஸ் பண்ணாம என்ஜாய் பண்ணுங்க...

இருட்டில் தூங்குதல்

இருட்டில் தூங்குதல்

இருளாக உள்ள அறையில் எப்பொழுதும் நுழையவோ, தூங்கவோ முயலாதீர்கள். எப்பொழுதும் ஒரு சிறிய விளக்கையோ அல்லது ஜன்னலை திறந்து வைத்தோ தூங்கவும்.

உடைந்த கட்டிலில் தூங்குதல்

உடைந்த கட்டிலில் தூங்குதல்

உடைந்த கட்டிலில் படுப்பதோ அல்லது தூங்குவதோ சாஸ்த்ரிங்களின்படி துர்சகுனமாக கருதப்படுகிறது. இப்படி உடைந்த கட்டிலில் படுப்பது விரைவில் மரணத்தை ஏற்படுத்தும்.

ஊனமுற்றவர்களை கேலி செய்வது

ஊனமுற்றவர்களை கேலி செய்வது

மற்றவர்களின் குறைகளை சுட்டி காட்டி வெளிப்புறமாகவோ அல்லது மனதிற்குள்ளோ எள்ளி நகையாடுவது அதிக பாவத்தை சேர்க்கக்கூடிய செயலாகும்.

தலைக்கு எண்ணெய் வைப்பது

தலைக்கு எண்ணெய் வைப்பது

தலைக்கு எண்ணெய் வைத்த பிறகு அதே எண்ணெயுடன் உடலின் மற்ற பாகங்களை தொடுவது வேதங்களின் படி அபசகுனமான ஒன்றாகும். எனவே தலைக்கு எண்ணெய் வைத்த பிறகு குளிக்கும் வரை உடலின் எந்த பாகத்தையும் தொடக்கூடாது.

MOST READ: சர்க்கரை நோயை அடியோடு காலி பண்ணும் முருங்கை டீ... ட்ரை பண்ணிப் பாருங்க...

அழுக்கடைந்த கைகள்

அழுக்கடைந்த கைகள்

வீட்டை சுத்தப்படுத்திய பின்போ அல்லது விளையாடிய பின்போ கைகளை சுத்தம் செய்யாமல் எழுதுவதோ, படிப்பதோ அல்லது மற்றவர்களுக்கு சொல்லித்தருவதோ எம புராணத்தின் படி பெரும் பாவச்செயலாகும்.

புறம்பேசுதல்

புறம்பேசுதல்

ஒருவரை பற்றி அவர்கள் இல்லாத போது புறம் பேசுபவர்கள் மற்றும் பொய் கூறுபவர்கள், அடுத்தவரின் வளர்ச்சியை தடுக்க நினைப்பவர்கள் போன்றவர்களை மரணம் சீக்கிரம் நெருங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

according to Yama Purana these habits lead to early death

Yama Purana explains that a person’s wrong habits in their lifetime can reduce their lifespan. Check out habits which can educe their lifespan.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more