Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
இணையத்தை கலக்கிய விசித்திர சவால்கள்!!
இணையத்தில் பிரபலமான சில சேலஞ்ச்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான செய்திகளுடன் தான் விழிக்க வேண்டியதாய் இருக்கிறது. யாரோ ஒருவர் விளையாட்டாய் ஆரம்பிக்க அதனை பலரும் செய்ய ஆரம்பித்து ட்ரெண்ட் ஆவது வாடிக்கையாகிவிட்டது.
ஏஎல் எஸ் என்ற நோய்க்காக சாமானியர்கள் முதல் பிரபலங்கள் வரையில் பலரும் பங்கெடுத்த ஐஸ் பக்கெட் சேலஞ்ச் பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள் அதைப்போலவே, ஏதோ ஒரு காரணத்திற்காகவும் அல்லத் காரணமேயில்லாமலும் சேலஞ்ச் ஒன்றை ஆரம்பித்து பலரும் செய்ய ஆரம்பித்து வைரலானது.
இப்படி இணையத்தில் ட்ரெண்டான முகத்தை சுழிக்க வைக்கும் சில சேலஞ்சகள் பற்றி ஒர் பார்வை .

ஹோல்டிங் கோக் சேலஞ்ச் :
மார்பக புற்று நோய்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடந்தது. இதில் பெண்கள் தங்கள் மார்பகங்களுக்கு இடையே கோக் பாட்டிலை வைத்தபடி போட்டோ எடுத்து ஹேஸ் டேக்வுடன் சமூகவலைதளங்களில் பகிர்ந்தனர்.
Image Courtesy

ஹார்ட் ஷேப் சேலஞ்ச் :
இந்த சேலேஞ்ச் சீனாவில் ஆரம்பிக்கப்பட்டு வைரலானது.ட்விட்டர் போலவே இருக்கும் விபோ என்ற சமூக வலைதளத்தை சீன மக்கள் பயன்படுத்துகிறார்கள். தங்கள் உடலின் அழகையும், விரல்களின் நெகிழ்வுத் தன்மையை வெளிப்படுத்தும் விதமாக தங்கள் மார்பகங்களை ஹார்ட் வடிவத்தில் பிடித்தப்படி போட்டோ எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பகிர வேண்டும். கிட்டத்தட்ட இரண்டு கோடிக்கும் அதிகமானோர் இந்த சேல்ஞ்சில் பங்கெடுத்திருக்கிறார்கள்.
உடல் பருமனானவர்கள் மட்டுமே இப்படிச் செய்ய முடியும், மெலிந்த உடல் உள்ளவர்கள் இதனை செய்ய முடியாது என்று கண்டங்களும் எழுந்தது. இதே போல சில ஆண்களும் இந்த சேலஞ்சை பகடி செய்து பகிர்ந்துள்ளனர்.
Image Courtesy

வாமிட்டிங் சேலஞ்ச் :
ஒரே நேரத்தில் இரண்டு வாழைப்பழங்களும் ஸ்ப்ரைட் குளிர்பானத்தையும் குடிக்க வேண்டும். பொதுவாக நம் உடலுக்கும் இந்த இரண்டு பொருளையும் ஒரே நேரத்தில் ஜூரணிக்க முடியாது. அதிலிருக்கும் வேதிப்பொருட்களால் நமக்கு வாந்தி வரும். குறைந்த நேரத்தில் அதிகமாக உட்கொண்டால் இப்படித்தான் என்று சொல்வதற்காக இந்த சேலஞ்ச் நடத்தப்பட்டதாம்!
Image Courtesy

பட்டைத்தூள் சேலஞ்ச் :
எளிதாக தோன்றினாலும் உயிருக்கே ஆபத்து விளைவிக்க கூடியது இந்த சேலஞ்ச். கிண்ணத்தில் இருக்கும் பட்டைத்தூளை ஒவ்வொரு ஸ்பூனாக எடுத்து வாயில் போட்டுக் கொள்ள வேண்டும், நடுவில் வேறு எதுவும் சாப்பிடக்கூடாது, குடிக்கவும் கூடாது, முக்கியமாக தாமதப்படுத்தக்கூடாது. 60 வினாடிகளுக்குள் கிண்ணத்தில் இருக்கும் தூளை காளியாக்குவதை அப்படியே வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பகிர்ந்திட வேண்டும்.
இது குறித்து மருத்துவர்கள் சிலர் கூறுகையில் பட்டைத்தூள், நம் வாயை உலரச் செய்திடும் அதே நேரத்தில் மூச்சு விட சிரமம் ஏற்படுவது, தொண்டை எரிச்சல்,நுரையிரல் பிரச்சனை போன்றவை ஏற்படும் என்று எச்சரித்தனர்.
Image Courtesy

உப்பு ஐஸ் சேலஞ்ச் :
இதில் கலந்து கொள்கிறவர்கள் தங்கள் உடலின் ஏதாவது ஒரு பாகத்தில் உப்பை கொட்டிக் கொள்ள வேண்டும். பின்னர், அதில் ஐஸ் க்யூபை வைத்து வேகமாக தேய்க்க வேண்டும். இது சருமத்திற்கு பயங்கரமான எரிச்சலைத்தரும். அப்படியே எரிவது போல இருக்குமாம் இதனை வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்தனர்.
Image Courtesy

காண்டம் சேலஞ்ச் :
காண்டத்தில் தண்ணீரை நிரப்பி அதனை ஒருவர் தலையில் போட்டால் காண்டத்தால் முகமுடி அணிந்தது போல ஆகிவிடுகிறது, இதனை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பகிர்ந்தனர்.
Image Courtesy

பன்றி உதடு சேலஞ்ச் :
கண்ணாடி பாட்டிலில் உதட்டைக் குவித்து சிறிது நேரம் வைத்திருந்தால் அங்கே ரத்த ஓட்டம் இல்லாமல் உதடு வீங்கிடுகிறது. இதனை பன்றி உதடுகள் என்ற பெயரில் வைரலாக பலரும் முயற்சித்து தங்களின் சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்தனர்.
Image Courtesy

டோண்ட் ஜட்ஜ் சேலஞ்ச் :
ஒருவரின் வெளிப்புறத்தோற்றத்தை வைத்து, அவரை மதிப்பிடக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த சேலஞ்ச் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் தங்கள் உருவத்தையே அசிங்கமாக உருமாறிய ஒரு புகைப்படமும், நார்மலான ஒரு புகைப்படம் எடுத்து இரண்டையும் இணைத்து பகிர்ந்தார்கள்.
Image Courtesy

பென் சேலஞ்ச் :
பெண்மையை வெளிப்படுத்தும் விதமாக, தங்கள் மார்பகங்களை அனைவரும் பார்க்கும் விதமாக சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். பலரும் மார்பகங்களுக்கு கீழே பேனாவை வைத்தபடி போட்டோ எடுத்திருந்தனர். இன்னும் சிலர் தங்களது மார்பகங்களுக்கு கீழே பென்சில், மேக்கப் பிரஷ், பூக்கள் என பல்வேறு பொருட்களை வைத்திருந்தனர்.
Image Courtesy

போன் பின்ச்சிங் சேலஞ்ச் :
டுவண்ட்டி ஒன் பைலட்ஸ் என்னும் பேண்டை சேர்ந்தவர்கள் ஒரு வீடியோவை பகிர அதிலிருந்து நம் நெட்டிசன்கள் எக்ஸ்ட்ரீம் போன் பின்ச்சிங் சேலஞ்சை ஆரம்பித்துவிட்டனர். கட்டை விரல் மற்றும் ஆட்காட்டி விரலின் நுனியில் போனை பிடித்துக் கொண்டு நீங்கள் போன் விழுந்து விடக்கூடாது என்று நினைக்கும் இடங்களிலிருந்து போஸ் கொடுக்க வேண்டும். பல நேரங்களில் இந்த சேலஞ்ச் சொதப்பியதும் உண்டு.
Image Courtesy

பெல்லி பட்டன் சேலஞ்ச் :
சீனாவில் ஆரம்பிக்கப்பட்டு உலகம் முழுவதும் பிரபலமானது இந்த சேலஞ்ச். கைகளை பின்புறமாக வந்து தொப்புளை தொட வேண்டும். இப்படி தொடுவது போன்ற போட்டோக்களை எடுத்து சமூகவலைதளத்தில் பகிர்ந்தனர்.உடல் ஆரோக்கியத்தை பறை சாற்றும் விதமாக இதனை பலரும் விரும்பி செய்தனர்.
Image Courtesy

பிகினி ப்ரிட்ஜ் சேலஞ்ச் :
பிகினி உடையில் தொடை எலும்பு தெரியுமாறு உள்ளாடை அணிந்தபடி படுத்தபடி போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். எடைக்குறைவாக இருப்பவர்களை ஆதரிக்கும் பொருட்டு இந்த சேலஞ்ச் நடந்தது.
Image Courtesy

காலர் போன் சேலஞ்ச் :
சீனாவில் நடந்த இந்த சேலஞ்சில் 30 கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். உங்களது காறை எலும்பில் சில்லறைக்காசுகளை வைத்தப்படி போட்டோ எடுத்து பகிர வேண்டும். அதிகமான காயின்களை வைத்திருந்தால் நல்ல ஃபிகர் என்று கமெண்ட்ஸ் பறக்கிறது.
Image Courtesy

பேண்ட்டீ சேலஞ்ச் :
பெண்கள் இந்த சேலஞ்சை மேற்கொண்டார்கள். பெண்கள் உள்ளாடையை அணியும் போது பாதி அணிந்த நிலையில் படமெடுத்து பேண்ட்டீ சேலஞ்ச் என்ற பெயரில் பகிர்ந்தனர்.
Image Courtesy

ஃபிங்கர் சேலஞ்ச் :
நிர்வாணமாக கண்ணாடி முன்பு நிற்ப்பவர்கள் தங்கள் மார்பகத்தை ஒற்றை விரலால் மறைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் கண்ணாடியில் தெரியும் உருவத்தை படமெடுத்து பகிர வேண்டும்.
Image Courtesy



Click it and Unblock the Notifications