உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பிரபலங்களின் வீடுகள்!

Posted By:
Subscribe to Boldsky

வார இறுதி நாட்கள் வெளியில் செல்ல வேண்டும் சின்னதா ஒரு டூர் ப்ளான் பண்லாம் என்று ஆரம்பிக்கும் போதே தடையாய் வந்து நிற்பது பணம். ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளுக்கு இவ்வளவு செலவா என்று யோசித்து பல டூர்களை கேன்சல் செய்திருப்போம் அல்லது வருசா வருசம் போற இடம் தான் என்ன பண்றது பட்ஜெட் உதைக்குதே என்று சொல்லி ஏதோ ஓர் இடத்திற்கு செல்வோம்.

ஏனென்றால் நமக்குத் தெரியும் பணத்தை சம்பாதிப்பது எவ்வளவு கடினம் என்று. உங்களையே உங்களது உழைப்பையே உறிஞ்சிடும் இந்த பணத்தை செலவழிக்கும் போது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். வரப்போகின்ற படங்களைப் பார்த்தால் அதிர்ச்சியில் மாரடைப்பு வந்தாலும் சொல்வதற்கில்லை.

கோடிகளில் புரளும் திரை நட்சத்திரங்கள் தங்கும் சொகுசு வீடுகள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆடம் லிவின் :

ஆடம் லிவின் :

சுமார் 9000 ஏக்கர் பரப்பளவில் 1960 ஹாலிவுட் ரீஜன்சி ஸ்டைலில் கட்டப்பட்டிருக்கும் இவரது வீடு கடந்த வருட மார்க்கெட் நிலவரப்படி 27.5 மில்லியன் டாலர் மதிப்பில் இருந்தது. இங்கு ஐந்து படுக்கையறைகள், மூன்று கெஸ்ட் ஹவுஸ், 4 கார் கேரேஜ், நீச்சல் குளம், பார் என்று சகல வசதியும் இருக்கிறது.

Image Courtesy

டைலர் ஷிஃப்ட் :

டைலர் ஷிஃப்ட் :

கடந்த இரண்டு வருடங்களாக ஷிஃப்ட் இங்கே தான் வசிக்கிறார். இதனை 25 மில்லியன் டாலர் கொடுத்து விலைக்கு வாங்கியிருக்கிறார் ஷிஃப்ட் . பிரம்மாண்டமான இந்த வீட்டில் இல்லாத வசதிகளே இல்லை என்று சொல்லலாம்.

Image Courtesy

பிராட் பிட் மற்றும் ஏஞ்சலினா ஜோலி :

பிராட் பிட் மற்றும் ஏஞ்சலினா ஜோலி :

2.65 மில்லியன் யூரோ மதிப்பிட்டீல் கட்டப்பட்டுள்ள இந்த வில்லா 900 சதுர கி.மீ., பரப்பளவில் இருக்கிறது. இங்கு எட்டு படுக்கையறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு படுக்கையறையும்,பால்கனியும் நீச்சல் குளத்தை பார்த்தமாதிரியே திட்டமிட்டு கட்டப்பட்டிருக்கிறது. சாப்பாட்டு அறையில் இருக்கு சிகப்பு மார்பில் தூண் இந்த வீட்டில் மிகவும் பிரபலம்.

Image Courtesy

ஷாருக்கான் :

ஷாருக்கான் :

மும்பையில் இருக்கும் இந்த வீட்டை 13.32 கோடி கொடுத்து 2001 ஆம் ஆண்டு வாங்கினார் ஷாருக்கான். அரபிக் கடலை பார்த்தப்படி இருக்கும் இந்த வீட்டின் பரப்பளவு 2,446 சதுர கிலோமீட்டர். ஆறு மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடத்தில் எல்லா அறைகளிலும் புகழ்ப்பெற்ற ஓவியங்கள் மாட்டப் பட்டிருக்கிறதாம்!

Image Courtesy

எட்டீ முர்ஃபி :

எட்டீ முர்ஃபி :

லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் இந்த வீடு 20,000 சதர கி.மீ., பரப்பளவில் இருக்கிறது. அருகில் ஒரு கெஸ்ட் ஹவுஸ் 7000 சதுர கி.மீ., பரப்பளவில் அமைத்திருக்கிறார்கள். வீடு முழுவதும், கைவேலைப்பாடு நிறைந்த கதவுகள், ஜன்னல்கள், உத்திரங்கள் இருக்கும்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

top celebrities stunned house

top celebrities stunned house
Story first published: Friday, August 11, 2017, 16:48 [IST]