உலகின் கொடூரமான பெண்கள் - டாப் 25!

Posted By:
Subscribe to Boldsky

பெண்கள் என்றாலே இளகிய மனம் கொண்டவர்கள் என்ற பொது கூற்றுக்கு நேர் எதிர்மறையான தொகுப்பு தான் இது. இந்த பெண்கள் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய சில கொடூரமான குணங்கள் கொண்டவர்கள்.

சீரியல் கில்லர், சித்திரவதை செய்து குழந்தைகளை கொன்றவர்கள், தங்கள் கீழ் இருந்து அடிமைகளை படுபயங்கரமாக கொடுமை செய்தவர்கள் என 14ம் நூற்றாண்டில் இருந்து 21ம் நூற்றாண்டு வரையில் பல பயங்கரமான குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட உலகின் டாப் 25 கொடூரமான பெண்களை பற்றி தான் நாம் இந்த தொகுப்பில் காணவுள்ளோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#25 ஜெர்ட்ரூடு பானீஸ்ஸெவ்ஸ்கி!

#25 ஜெர்ட்ரூடு பானீஸ்ஸெவ்ஸ்கி!

கொடூரமான தாய் என்றும் பெயர் பெற்றவர். இன்டியானாவை சேர்ந்த இந்த விவாகரத்து பெற்ற ஜெர்ட்ரூடு தனது சொந்த மகளையே மிகுதியான சித்திரவதைக்கு உட்படுத்திய கொடூரமான தாய். சிலிவியா எனும் இவரது மகளின் இறப்பிற்கு பிறகு தான், எத்தகைய கொடூரங்களை தனது சொந்த பிள்ளைகள் மீது திணித்துள்ளார் இவர் என்பது குறித்து மக்கள் அறிந்தனர். 1965ல் நடந்த அந்த முதல் கொலை குறித்த வழக்கு இன்று வரையும் இன்டியானாவில் ""the single worst crime perpetuated against an individual in Indiana's history." என்ற பெயரில் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

Image Source: Wikimedia commons

#24 எலிசபெத் பாத்தரி

#24 எலிசபெத் பாத்தரி

ஹங்கேரியாவை சேர்ந்த படித்த பெண் இந்த எலிசபெத். இவர் அந்த காலத்தில் அறியப்பட்ட பெரிய சீரியல் கில்லர் ஆவார். 16,17 நூற்றாண்டில் வாழ்ந்த இவர் 650க்கும் மேற்ப்பட்ட பெண்களை கொலை செய்துள்ளார்.

பெண்களை கொன்று அவர்களது இரத்தத்தை எடுத்து அதில் குளிக்கும் குணம் கொண்டிருந்தார் இந்த கொடூர பெண்மணி. தனது சருமம் என்றும் இளமையாக இருக்க வேண்டும் என இத்தகைய கொலைகளை செய்து வந்துள்ளார் இவர்.

Image Source:commons.wikimedia

#23 இலஸ் கோச்

#23 இலஸ் கோச்

புஞ்சன்வால்டின் சூனியக்காரி என்ற பெயர் பெற்றவர் இந்த இலஸ் கோச். சிறை வாசிகளை மிகவும் சித்திரவதை செய்து வந்தவர். இவர் நாசி படையில் வேலை செய்து வந்த அதிகாரியின் மனைவி. இவரது சைக்கோத்தனமான குணம் மிக கொடூரமான தண்டனைகள் தரவைத்தது. சிறைவாசிகளை கொடூரமாக தாக்குவது இவருக்கு பிடித்த செயல். மேலும், அவர்களை செக்சுவல் செயல்களில் ஈடுபடுத்தி இன்பம் கண்டுள்ளார். மேலும், டாட்டூக்கள் குத்தியிருந்தால், அவர்களது தோலை உரித்து எடுப்பது போன்ற செயல்களிலும் இவர் ஈடுபட்டு வந்துள்ளார்.

Image Source: Wikimedia commons

#22 மா பேக்கர்!

#22 மா பேக்கர்!

அமெரிக்கா தனது வரலாற்றில் கண்ட மிகவும் கொடூரமான பெண் குற்றவாளி இவர். இவர் பல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர். இது மட்டுமின்றி, கொலை, ஆட்கடத்தல் சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளார். 1930-களில் இவர் பெரிய குற்றவாளியாக இருந்து வந்தார். 1935ல் இவரை எப்.பி,ஐ. ப்ளோரிடாவில் சுட்டக் கொன்றது. இவரை மிகவும் கொடூரமான குற்றவாளி என அறிவித்தனர்.

Image Source:en.wikipedia.org

#21 மைரா ஹிண்ட்லி

#21 மைரா ஹிண்ட்லி

ஒரு காலத்தில் பிரிட்டனில் மிகவும் வெறுக்கப்பட்ட பெண்ணாக இருந்த பெண், மைரா ஹிண்ட்லி. இவரும், இவரது காதலரும் சேர்ந்து 1960களில் பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். தி மூன் மர்டர்ஸ் என்ற வழக்கில் இந்த தம்பதி கற்பழிப்பு, சித்திரவதை, குழந்தை கொலைகள் மற்றும் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டனர். இவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மைரா ஹிண்ட்லி கடந்த 2002 நவம்பர்-ல் மைரா ஹிண்ட்லி சிறையிலேயே மாரடைப்பு மற்றும் சுவாச கோளாறு காரணத்தால் இறந்து போனார்.

Image Source:flickr

#20 கிரிசல்டா பிளான்கோ

#20 கிரிசல்டா பிளான்கோ

தி பிளாக் விடோ என்ற பெயர் பெற்றவர் இவர். மனிதத்தன்மையற்ற குற்றவாளியாக கருதப்பட்டவர். 1943ல் பிறந்த கிரிசல்டா கொலம்பியாவை சேர்ந்த குற்றவாளி. இவர் போதை பொருள் கடத்தல், பயன்பாடு குற்றங்களில் ஈடுபட்டு வந்தவர். இவர் கொகைன் பரிமாற்றம் செய்யும் போது 200க்கும் மேற்பட்ட கொலைகள் செய்துள்ளார்.

Image Source: Wikimedia commons

#19 மேரி டுடோர்

#19 மேரி டுடோர்

அரசர் எட்டாம் ஹென்ரியின் ஒரே மகள் . இங்கிலாந்தின் முதல் ராணி என்றும் அறியப்படுகிறார். கொடுங்கோல் ஆட்சி செய்து வந்த நபராக இவரை காண்கிறார்கள். ஆங்கிலேயே வரலாற்றில் கொடூரமான ஆட்சி செய்தவர் என்றும், இவரை பிளடி மேரி என்றும் அழைக்கிறார்கள். மதவெறிப் பிடித்த இவர் 300க்கும் மேற்பட்டவர்களை மரண தண்டனை மூலம் கொன்றுள்ளார்.

Image Source: Wikimedia commons

#18 டக்மார் ஓவர் பாய்

#18 டக்மார் ஓவர் பாய்

டக்மார் ஓவர் பாய், ஒரு டானிஷ் சீரியல் கில்லர். இவர் 25 சிறுவர்களை கொன்றுள்ளார். இதில், இவரது சொந்த குழந்தையும் அடங்கும். 1913-1920க்குள் இவர் இத்தனை கொலைகள் செய்துள்ளார். குழந்தைகளை பாதுகாக்கும் வேலை செய்து வந்தவர் டக்மார்.குழந்தைகளை கொடுமைப்படுத்தி கொலை செய்து வந்த இவருக்கு 1921ல் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 1929ல் டக்மார் தனது 42 வது வயதில் இறந்து போனார்.

Image Source:murderpedia

#17 கிரிஸ்டினா எட்மண்ட்ஸ்

#17 கிரிஸ்டினா எட்மண்ட்ஸ்

கிரிஸ்டினா, சாக்லேட் க்ரீம் கில்லர் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்தார். இவர் ஒரு ஆங்கிலேயே சீரியல் கில்லர். இவர் ஒரு மனநோயாளியும் ஆவார். இவர் கடைகளில் சாக்லேட் வாங்கி வந்து, அதில் விஷம் கலந்து மீண்டும் அதை கடைகளிலேயே கொடுத்துவிடுவார். அந்த சாக்லேட்களை வாங்கி உண்ணும் பிறர் இறந்துவிடுவார்கள். இந்த சம்பவம் 1871ல் நான்கு வயது சிறுவன் இறந்த போது தான் கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது. பிறகு, இவரது மன நோயை அறிந்து, வாழ்நாள் சிறை தண்டனை அளித்தனர்.

Image Source:murderpedia

#16 ரணவலன் I

#16 ரணவலன் I

மடகாஸ்கர்-ன் பைத்தியக்கார் அரசி என்ற பெயர் பெற்றவர். ஆப்ரிக்க தீவான மடகாஸ்கர் பகுதியை இவர் ஆண்டுவந்தார். 33 வயதான இவர் அச்சம், தீவிரவாதம், கொடூரம் போன்ற கலவையான குணாதிசயங்கள் கொண்டிருந்தார். இவர் ஒழுக்கம், பண்புகள் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மக்களை கொன்றார்.

Image Source: Wikimedia commons

#15 இர்மா கிரீஸ்!

#15 இர்மா கிரீஸ்!

நாசி போர் குற்றவாளியில் மிகவும் பேர்போன நபர் இர்மா கிரீஸ். இவர் 30,000-திற்கும் மேற்ப்பட்ட பெண் சிறை வாசிகளை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளார். தனது பளுவான பூட்ஸ் கால்களால் உதைத்து, துப்பாக்கி கொண்டு சுட்டு, அவர்களது இரத்தம் தெறிப்பதை கண்டு ஆனந்தம் கொள்வாராம் இந்த இர்மா கிரீஸ். இவர் செக்சுவல் ரீதியான கொடுமைகள் அளித்து வந்துள்ளார்.

Image Source: Wikimedia commons

#14 அமீலியா டயர்

#14 அமீலியா டயர்

1837ல் பிறந்தவர் அமீலியா டயர். மிக பிரபலமான சீரியல் கில்லராக இருந்தவர். இவர் அந்த காலத்தில் 300-400 குழந்தைகளை கொலை செய்ததாக அறியப்படுகிறது. பிரிட்டன் அரசு இவரை கைது செய்ய முடியாமல் திணறியதாகவும் கூறப்படுகிறது. இவரை 1869ல் கைது செய்து, இரண்டே மாதத்தில் தூக்கிலிட்டு கொன்றனர்.

Image Source: Wikimedia commons

#13 பெல்லி கன்னஸ்!

#13 பெல்லி கன்னஸ்!

பிளாக் விடோ என அழைக்கப்பட்ட இவர் அமெரிக்காவின் பெரிய பெண் சீரியல் கில்லர். இவர் ஆறடி உயரமும், 91 கிலோ எடையும் கொண்டிருந்தவர். மிகவும் வலிமையான பெண்ணாக இருந்த இவர், தனது கணவன் மற்றும் குழந்தைகளையும் கொலை செய்தவர். மேலும், தனது காதலன், மற்றும் மகள்கள் என கின்னஸ் 25-40 பேரை கொலை செய்துள்ளார்.

Image Source: Wikimedia commons

#12 கிளாரா மோவெரோவா

#12 கிளாரா மோவெரோவா

கிளாரா மோவெரோவா தனது இரண்டு மகன்களையே கொடுமை செய்து கொன்றவர். இதில், தனது ஒரு மகனை, அவனது சொந்த தசையை உண்ண கூறி சித்திரவதை செய்தவர் இவர். கிட்டத்தட்ட சொல்ல முடியாத அளவில் செக்சுவல் ரீதியாக கொடுமை செய்து 2007ல் கொலை செய்தார் இவர். இவர் செய்த கொலைகள், எதிர்பாராத விதமாக, பக்கத்து வீட்டின் குழந்தைகளை கண்காணிக்கும் டிவியில் பதிவானது. அதில் குழந்தைகளை நிர்வாணப்படுத்தி, சங்கிலியால் கட்டிப்போட்டு அடித்து கொடுமை செய்யும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

Image Source: blesk

#11 கார்லா ஹோமோல்கா

#11 கார்லா ஹோமோல்கா

கனடா தனது வரலாற்றில் கண்ட மிகப்பெரிய சீரியல் கில்லர். கார்லா ஹோமோல்கா மற்றும் இவரது கணவரும் சேர்ந்து பல கடத்தல், கற்பழிப்பு மற்றும் கொலை குற்றங்களில் ஈடுப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட இவர்கள் விடுதலை மனு அளித்து, 2005ல் விடுதலை பெற்றனர். இப்போது இவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். கார்லா, புது கணவருடன் மூன்று குழந்தைகள் பெற்று கரீபியனில் வாழ்ந்து வருகிறார்.

Image Source:murderpedia

#10 மிரியா மொரேனோ!

#10 மிரியா மொரேனோ!

போதை பொருள் கடத்தல் டீலராக பணியாற்றி வந்த கொடூரமான பெண்மணி. மெக்சிகோவில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த மிரியா மொரேனோ ஆரம்பத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக வேலை செய்து வந்தவர். கடைசியாக இவரை, இவரது காருடன் பிடித்தனர், அதில் மதிப்பிட முடியாத அளவிற்கு போதை பொருட்கள் சிக்கின.

Image Source:wikipedia

#09 டில்லி க்ளிமேக்

#09 டில்லி க்ளிமேக்

இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் அமெரிக்காவை கலக்கிய சிகாகோவை சேர்ந்த சீரியல் கில்லர். இவர் ஒரு சைக்கோ. இவர் தனது கனவில் வரும் நபர்களின் மரண தேதியை தீர்மானித்து வந்தார். 1912-23 வரை இவர் 20க்கும் மேற்ப்பட்ட நபர்களை விஷம் கொடுத்து கொன்றுள்ளார். சிலர் இவரிடம் இருந்து தப்பித்துள்ளனர். பலர் இறந்துள்ளனர். இதில் இவரது நான்கு கணவர்களும் அடங்குவர். இவருக்கு பிறகு வாழ்நாள் சிறைத்தண்டனை 1923ல் வழங்கப்பட்டது. தனது 60வயதில் இவர் சிறையிலேயே காலமானார்.

Image Source:murderpedia

#08 சார்லின் கலேகோ!

#08 சார்லின் கலேகோ!

இவர் தனது கணவருடன் சேர்ந்து கொலை, கற்பழிப்பு வழக்குகளில் ஈடுபட்டு வந்த நபர். வடக்கு கலிபோர்னியா பகுதியில் வாழ்ந்து வந்தவர்கள் இவர்கள். 1978-80 வரை இந்த சைக்கோ தம்பதி பல பதின் வயது மற்றும் இளம் பெண்களை கொன்றுள்ளார். சார்லின்-க்கு கேஸ் சாம்பார் மூலம் மரண தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இவரது கணவர் புற்றுநோய் சிகிச்சை பெற்று வரும் போது இறந்து போனார்.

Image Source:wikipedia

#07 கேதரின் டி மெடிசி

#07 கேதரின் டி மெடிசி

ஐரோப்பியாவில் வாழ்ந்த ஒரு சக்தி வாய்ந்த, மனிதத்தன்மையற்ற பெண்மணி. இவர் பிரான்ஸ் நாட்டின் ராணியாக இருந்தவர். இவர் 30,000 பேரின் உயிரை பறித்த கொடூரமான பெண் ஆவார்.

Image Source: Dennis Jarvis from Halifax, Canada, France-001575 - Catherine de' Medici (15291148568)

#06 டெல்பின் லாலரி

#06 டெல்பின் லாலரி

இவர் தன்னிடம் அடிமைகளாக இருந்த கறுப்பின மக்களை கொடுமை செய்து கொலை செய்து வந்தார். ஒருமுறை இவரது வீட்டில் தீவிபத்து உண்டான போதுதான் இவர் செய்து வந்த கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்தது. இதன் காரணத்தால் பிரான்சில் இருந்து தப்பித்து வேறு நாட்டிற்கு ஓடினார் இவர்.

Image Source: Wikimedia commons

#05 டரியா சாலிட்டோவா

#05 டரியா சாலிட்டோவா

ரஷ்யாவை சேர்ந்த பிரபல சீரியல் கில்லர். இவர் 18ம் நூற்றாண்டை சேர்ந்த சீமாட்டி. இவர் தன்னிடம் அடிமையாக இருந்த 140 பேரை கொடுமை செய்து கொலை செய்துள்ளார். மிக வித்தியாசமான முறையில் சித்திரவதை செய்து, அவர்களது இரத்தத்தின் மூலம் சுகம் கொள்ளும் குணம் கொண்டிருந்தார்.

Image Source: Wikimedia commons

#04 லியோனார்டோ சியான்சிலி!

#04 லியோனார்டோ சியான்சிலி!

இத்தாலியை சேர்ந்த சீரியல் கில்லர். இவர் தனது அக்கம்பக்கத்து வீடுகளில் வசித்து வந்த மூன்று பெண்மணிகளை 1939-1940 வரையிலான காலத்தில் கொலை செய்திருந்தார். இவர் மூடநம்பிக்கையின் உச்சபட்ச நம்பிக்கை கொண்டிருந்தவர். தனது குடும்பத்தின் சாபம் நீங்க வேண்டும் என்பதற்காக இவர் கொலை செய்து வந்தார்.

Image Source: Wikimedia commons

#03 ஜுனா பாரசா

#03 ஜுனா பாரசா

குடிக்கு அடிமையான இந்த தாய் மெக்சிகோவை சேர்ந்த ஒரு குத்து சண்டை வீராங்கனை. இவர் முதிய வயதில் கொலை குற்றங்களில் ஈடுபட்ட காரணத்தால் ஓல்ட் லேடி கில்லர் என அழைக்கப்பட்டு வந்தார். நீண்ட காலமாக இவர் செய்த கொலைகளை ஒரு ஆண் தான் செய்திருப்பார் என கருதி வந்தனர். பிறகு தான் இவர் என கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்கு 756 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது.

Image Source: alchetron

#02 ஐலேன் வூர்னோஸ்

#02 ஐலேன் வூர்னோஸ்

ஐலேன் வூர்னோஸ், அமெரிக்காவில் பலரால் அறியப்படாத குற்றவாளி, சீரியல் கில்லர். இவர் செக்சுவல் கொடுமைகள் அனுபவித்து வீட்டில் இருந்து வெளிவந்த பெண். ப்ளோரிடாவில் ஒரு பாலியல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். தன்னை பிக்கப் செய்ய வந்த ஆணை இவர் முதல் முறை கொலை செய்தார். அதன் பிறகு ஐந்து பேரை கொலை செய்தார். இவரை கைது செய்து 2002ல் விஷ ஊசி போட்டு கொன்றனர்.

Image Source: wikimedia commons

#01 மியுக்கி இஷிகாவா

#01 மியுக்கி இஷிகாவா

ஜப்பானை சேர்ந்த ஒரு நடுவயது பெண்மணி. ஜப்பான் வரலாற்றில் பெரிய சீரியல் கில்லராக இருந்தவர். தனது கணவர் உட்பட 85 பெரியவர்கள் மற்றும் 169 குழந்தைகளை இவர் கொலை செய்துள்ளார். இவ்வளவு கொலைகள் செய்த இவருக்கு வெறும் 8 ஆண்டுகளே தண்டனை அளிக்கப்பட்டது. அதிலும், பாதி ஆண்டுகள் தான் இவர் தண்டனை அனுபவித்தார், மேல்முறையீடு செய்து விடுதலை ஆகிவிட்டார்.

Image Source: wikimedia commons

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top 25: The Most Evil Women In History!

Top 25: The Most Evil Women In History!
Subscribe Newsletter