For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெள்ளையனை தொடைநடுங்க செய்த கட்டபொம்மன் தூக்கு மேடையில் என்ன கூறினான்?

இந்த நாள், அந்த வருடம் - அக்டோபர் 16!

|

"கிஸ்தி, திறை, வரி, வட்டி. வானம் பொழிகிறது, பூமி விளைகிறது, உனக்கேன் கொடுப்பது கிஸ்தி? எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? நாற்று நட்டாயா? களை பறித்தாயா? கழனிவாழ் உழவருக்கு கஞ்சிக் களையம் சுமந்தாயா? அங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துப் பணிபுரிந்தாயா? அல்லது நீ மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே! எதற்க்குக் கேட்கிறாய் திறை, யாரைக் கேட்கிறாய் வரி? போரடித்து நெற்குவிக்கும் மேழிநாட்டு உழவர் கூட்டம், பரங்கியரின் உடலையும் போரடித்து, தலைகளை நேர்க்கதிர்களாய் குவித்துவிடும் ஜாக்கிரதை.", நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் கட்டபொம்மன் வேடமேற்று நடித்த போது திரையில் பேசிய வசனம் இது.

ஆங்கிலயர்கள் தன்னை தூக்கிலிடும் போது உண்மையான வீரப்பாண்டியன் கட்டபொம்மன் நிஜத்தில் பேசியவை...

"எனது தாய்மண்ணைக் காப்பதற்காக, ஆங்கிலேயர்களுக்கு எதிராக பாளையகாரர்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்" என்று முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன். மேலும், "இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்'' என்று கட்டபொம்மன் மனவேதனையுடன் கூறினார் வீரபாண்டியன் கட்டபொம்மன்.

இனி, இந்த நாள், அந்த வருடம் - அக்டோபர் 16

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இறப்பு!

இறப்பு!

வெள்ளையனை தொடைநடுங்க செய்த கட்டபொம்மன் மாமன்னன் இறந்த தினம் (1799)

  • 18ம் நூற்றாண்டை சேர்ந்த பாளையக்கார மன்னன். இவர் தெலுங்கு மொழியும் பேசும் ராஜகம்பளம் நாயக்கர் ஆவார். இவரது முன்னோர்கள் ஆந்திர பகுதியில் இருந்து தமிழகத்திற்கு குடிபெயர்ந்து வந்தவர்.
  • இன்று ஒட்டபிடாரம் என அழைக்கப்படும் அன்றைய அழகிய வீரபாண்டியபுரத்தில் ஆட்சி செய்து வந்த ஜெகவீரபாண்டியனின் அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இருந்தார்.
  • இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். கெட்டி என்பது வீரமிகுந்தவர் என்ற பொருளை தரும் தெலுங்கு சொல். இதுவே நாளடையில் கட்டபொம்மு என்று மாறி, பிறகு தமிழில் கட்டபொம்மன் என திரிந்தது.
  • ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு, பின்னாட்களில்ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன் ஆவார்.
  • பிறப்பு!

    பிறப்பு!

    தமிழ் அறிஞர் பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் அவர்கள் பிறந்த தினம் (1881)

    • ஏழு மாதம் கூட பள்ளியில் படிக்காமல் பல்கலைகழகத்தில் பணியாற்றிய பெருமை பண்டிதமணி மு. கதிரேசன் அய்யாவை சேரும்.
    • பல தமிழ் அறிஞர்களுக்கு பாடம் கற்பித்த ஆசான் இவர்.
    • சிறந்த சொற்பொழிவு திறன் கொண்ட இவர், ஒரே நேரத்தில் இருபொருள் பட பேசுவதில் கில்லாடி.
    • 'மகாமகோபாத்தியாயப் பட்டம்' ஒரு குறிப்பிட்ட இனத்தவர்க்கே உரியது என எண்ணி அதற்குப் பதிலாக 'இராவ் பகதூர்' என்ற பட்டம் வழங்க விரும்பியது.
    • அரசின் சின்ன புத்தியையும், அறியாமையையும் அறிந்த பண்டிதமணி 'இராவ் பகதூர்' பட்டத்தை ஏற்க மறுத்தார்.
    • இவரின் தன்மானம் காக்கப்பட்டதோடு மட்டுமன்றி, துணிவுக்குப் பரிசாக 'மகாமகோபாத்தியாயப் பட்டம்' இவரை நாடி வந்தது.
    • நிகழ்வுகள்!

      நிகழ்வுகள்!

      1905 - பிரித்தானிய இந்தியாவில் வங்காளப் பிரிப்பு இடம்பெற்றது.

      1923 - வால்ட் டிஸ்னி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

      1964 - மக்கள் சீனக் குடியரசு தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.

      போர்கள்!

      போர்கள்!

      1781 - ஜோர்ஜ் வாஷிங்டன் வேர்ஜீனியாவின் யோர்க்டவுன் நகரைக் கைப்பற்றினார்.

      1813 - ஆறாவது கூட்டணி நாடுகள் நெப்போலியன் பொனபார்ட் மீது லீப்சிக் நகரில் தாக்குதலை ஆரம்பித்தன.

      அசம்பாவிதங்கள்!

      அசம்பாவிதங்கள்!

      1775 - ஐக்கிய அமெரிக்காவில் மேய்ன் மாநிலத்தின் போர்ட்லண்ட் நகரம் பிரித்தானியரால் எரிக்கப்பட்டது.

      1834 - லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் தொன்மைப் பொருட்கள் பல எரிந்து சேதமடைந்தன.

      1951 - பாகிஸ்தானின் முதலாவது பிரதமர் லியாகட் அலி கான் ராவல்பிண்டியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

      1987 - தெற்கு இங்கிலாந்தில் இடம்பெற்ற சூறாவளியில் 23 பேர் உயிரிழந்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

This Day That Year: October 16

This Day That Year: October 16
Story first published: Saturday, October 14, 2017, 17:57 [IST]
Desktop Bottom Promotion