For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த நாள் அந்த வருடம் - அக்டோபர் 14!

இந்த நாள் அந்த வருடம் - அக்டோபர் 14!

|

ஆற்காடு இலட்சுமணசுவாமி முதலியார் ஒரு சிறந்த கல்வியாளர் மற்றும் மருத்துவர். இவர் மகப்பேறு பற்றி எழுதிய மருத்துவ புத்தகம் இன்றளவும் மாணவர்கள் பயில உதவுகிறது. இவர் மட்டுமின்றி, இவரது இரட்டையர் சகோதரரான ஆற்காடு இராமசாமி முதலியாரும் தனது வழக்கறிஞர் துறையில் சிறந்து விளங்கியவர் ஆவார்.

இலட்சுமணசுவாமி அவர்கள் உலக சுகாதரா மையத்தின் செயற்குழு தலைவாரக 1949-50 வரை பொறுப்பு வகித்தவர் ஆவர்.

இனி, இந்த நாள், அந்த வருடம் - அக்டோபர் 14

This Day That Year - October 14

பிறப்பு!

ஏ. இலட்சுமணசுவாமி, இந்திய மருத்துவர் பிறந்த தினம் (1887)

ஆற்காடு சகோதரர்கள் என அழைக்கப்பட்ட சர் இராமசாமி முதலியார் மற்றும் சர் ஏ. இலட்சுமணசுவாமி முதலியாரும் பிறப்பால் இரட்டையர்கள்.
இவர்கள் இருவரும் கர்னூரில் அக்டோபர் 14,1887ல் பிறந்தவர்கள்.
ஆரம்ப கல்வியை கர்னூரிலும், மேற்படிப்பை சென்னையிலும் பயின்றனர்.
பிறகு அவரவர் துறையான சட்டம் மற்றும் மருத்துவத்தை பயின்றனர். இருவருமே அவரவர் துறையில் சிறந்து விளங்கினர்.
இவர்களது நினைவு கூர்ந்து, 125 பிறந்தநாளை கொண்டாட்டம் 2013 ஆண்டு கொண்டாடப்பட்டது.

மரணம்!

இந்திய பெண் சாதனையாளர் சி. பி. முத்தம்மா இறந்த தினம் (2009)

இவர் கர்நாடகத்தின் குடகு மாவட்டத்தின் விராஜ் பேட்டையில் பிறந்தவர்.
மடிகேரி புனித ஜோசப் பெண்கள் பள்ளியில் படித்தவர்.
இந்திய குடியிரிமை தேர்வில் வெற்றிபெற்ற முதல் பெண்மணி.
இந்தியாவின் வெளியுறவு துறை அதிகாரியாக பணியாற்றிய முதல் பெண்மணி.
இந்திய ஆட்சி பணிகளில் பெண் அதிகாரிகளுக்கு எதிராக இருந்த விதிகளை மாற்ற போராடியவர்.

நிகழ்வுகள்!

1066 - இங்கிலாந்தில் "ஹாஸ்டிங்ஸ்" என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் முதலாம் வில்லியமின் படைகள் இரண்டாம் ஹரோல்ட் மன்னனைக் கொன்றனர்.

1322 - ஸ்கொட்லாந்தின் முதலாம் ரொபேர்ட் பைலாண்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் இரண்டாம் எட்வேர்ட் மன்னனைத் தோற்கடித்தான். ஸ்கொட்லாந்தின் விடுதலையை எட்வேர்ட் ஏற்றுக் கொண்டான்.
1586 - ஸ்கொட்லாந்தின் முதலாம் மேரி இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்துக்கு எதிராக சதி மேற்கொண்டதாக குற்றஞ் சாட்டப்பட்டாள்.
1758 - ஏழாண்டுப் போர்: ஆஸ்திரியா பிரஷ்யாவை வெற்றி கொண்டது.
1773 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் தேயிலைக் கப்பல் மேரிலாந்தில் எரிக்கப்பட்டது.
1806 - முதலாம் நெப்போலியன் புரூசிய இராணுவத்தை தோற்கடித்தான்.
1912 - முன்னாள் அமெரிக்க அதிபர் தியொடோர் ரோசவெல்ட் விஸ்கொன்சின் மாநிலத்தின் மில்வாக்கி நகரில் வைத்து சுடப்பட்டார்.
1913 - ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெற்ற நிலக்கரிச் சுரங்க விபத்தில் 439 பேர் கொல்லப்பட்டனர்.
1925 - டமாஸ்கசில் பிரெஞ்சுக்காரர்களுக்கெதிரான போராட்டம் ஆரம்பமாயிற்று.
1933 - நாசி ஜெர்மனி தேசங்களின் அணியில் இருந்து விலகியது.
1939 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் நீர்மூழ்கிக் கப்பல் பிரித்தானியக் கடற்படையினரின் "ரோயல் ஓக்" என்ற போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது. 800 மாலுமிகள் கொல்லப்பட்டனர்.
1943 - போலந்தில் நாசிகளின் "சோபிபோர்" வதைமுகாமில் இருந்த 600 கைதிகள் கிளர்ச்சியை மேற்கொண்டதில் 11 நாசிகள் கொல்லப்பட்டனர். முன்னூறுக்கும் அதிகமான கைதிகள் சிறையை உடைத்துத் தப்பினர்.
1948 - இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் கூடியது.
1956 - இந்தியத் தலித் தலைவர் அம்பேத்கர் தனது 385,000 ஆதரவாளர்களுடன் பௌத்தத்திற்கு மதம் மாறினார்.
1962 - கியூபாவுக்கு மேல் பறந்த அமெரிக்க U-2 விமானம் சோவியத் அணு ஆயுதங்களைப் படம் பிடித்தது.
1964 - லியோனிட் பிரெஷ்னெவ் சோவியத் ஒன்றியத்தின் அதிபராகவும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் நாயகமும் ஆனார். நிக்கிட்டா குருசேவ் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1964 - ஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
1968 - விண்ணிலிருந்தான முதலாவது நேரடி தொலைக்காட்சி அஞ்சல் அப்போலோ 7 விண்கலத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டது.
1973 - தாய்லாந்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மக்களாட்சிக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டதில் 77 பேர் கொல்லப்பட்டு 857 பேர் காயமடைந்தனர்.
1987 - டெக்சாசில் ஜெசிக்கா என்ற 18-மாதக் குழந்தை கிணறு ஒன்றில் வீழ்ந்தது. 58 மணி நேரத்தின் பின்னர் இது உயிருடன் மீட்கப்பட்டது. இந்த மீட்புப் போராட்டம் தொலைக்காட்சியில் நேரடியாகக் காண்பிக்கப்பட்டது.

English summary

This Day That Year - October 14

This Day That Year - October 14
Story first published: Friday, October 13, 2017, 18:43 [IST]
Desktop Bottom Promotion