For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழை வளர்த்தவரும், வெள்ளையனே வெளியேறு உரைத்தவரும்!

தமிழை வளர்த்தவரும், வெள்ளையனே வெளியேறு உரைத்தவரும்!

|

இருபதாம் நூற்றாண்டின் முதல் தமிழ் ஆராய்ச்சியாளர் எஸ். வையாபுரிப்பிள்ளை. இவர் தமிழ் நூல் பதிப்புகளில் சிறந்த ஆசிரியராக விளங்கினார்.

ஆய்வு, திறனாய்வு, கால மொழி, மொழி பெயர்ப்பு, சொற்பொழிவு, புனைவுகள், கவிதைகள், கதைகள் என பல பரிமாணங்களில் திறமை பெற்றவர்.

இவர் சென்னை பல்கலைகழகம் வெளியிட்ட பேரகராதியின் ஆக்கக் குழு தலைவராக செயலாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி, இந்த நாள் அந்த வருடம் - அக்டோபர் 12

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறப்பு !

பிறப்பு !

1891 - தமிழறிஞர். எஸ். வையாபுரிப்பிள்ளை, பிறந்த தினம்!

  • இவர் நெல்லை மாவட்டத்தில் இருக்கும் சிக்கநரசய்யன்பேட்டை என்ற ஊரில் பிறந்தவர். இவரது தந்தை சரவணப் பெருமாள் , தாயார் பாப்பம்மாள்.
  • இவர் தனது பள்ளிப்படிப்பை பாளையங்கோட்டையிலும், கல்லூரி படிப்பை திருநெல்வேலியிலும், மேற்படிப்பை சென்னையிலும் முடித்தாய்.
  • இவர் படித்து முடித்த அந்த ஆண்டில் சென்னை மாகாணத்தில் தமிழில் அதிக மதிப்பெண் சேதுபதி தங்க பதக்கம் வென்ற பெருமைக்கு உரியவர்.
  • தமிழில் அதிக ஆர்வம் கொண்ட வையாபுரி பிள்ளை திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் படித்து வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.
  • தமிழ் நூல்கள் குறித்து பல ஆய்வுகள் மேற்கொண்ட பெருமை கொண்டவர் இவர்.
  • இறப்பு!

    இறப்பு!

    1967 - இந்திய அரசியல்வாதி ராம் மனோகர் லோகியா, இறந்த தினம்!

    • இந்தியர்களுக்கு ஏற்ப பொதுவுடைமை தத்துவங்களை மாற்றி அமைத்தவர்.
    • வெள்ளையனே வெளியேறு உட்பட பல இந்திய விடுதலை போராட்டங்களில் பங்குகொண்ட போராட்ட வீரர்.
    • இந்திய பொதுவுடைமை
    • அரசியல்வாதிகளுக்கு ஆசானாக திகழும் நபர்.
    • புரட்சிகரமான சிந்தனையாளர்.
    • பொதுசெயலாளராக பிரஜா சோஷலிஸ்ட் கட்சியில் பணியாற்றினார்.
    • பெர்லின் பல்கலைகழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்.
    • பொதுவாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்து கொண்டு, கடைசி வரை திருமணமே செய்துக் கொள்ளாதவர்.
    • முதல் முறை!

      முதல் முறை!

      தமிழ்நாட்டில் முதல் செய்தி தாளான (பத்திரிக்கை) மெட்ராஸ் கொரியர் என்ற வாரத்திற்கு ஒரு நாள் வெளியாகும் வார இதழ் ரிச்சர்ட் ஜான்சன் என்பவரால் துவக்கப்பட்ட தினம் இன்று - 1785

      முதல் முறை ஒரே விண்கலத்தில் பல விண்வெளி வீரர்கள் பயணித்த நிகழ்வு நடந்த தினம் இன்று (1964) சோவியத் ஒன்றியம் வஸ்கோத் 1 விண்கலம் மூலம் இந்த நிகழ்வை நடத்தியது.

      நிகழ்வுகள் !

      நிகழ்வுகள் !

      எக்குவட்டோரியல் கினி எனும் நாடு ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்ற தினம் இன்று - 1968.

      இந்தியாவில் தேசிய உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட நாள் இன்று - 1993.

      உலக மக்கள் தொகை ஆறுநூறு கோடிகளை எட்டிய தினம் இன்று - 1999.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

This Day That Year - October 12!

This Day That Year - October 12
Desktop Bottom Promotion