Just In
- 3 hrs ago
தவா மஸ்ரூம்
- 6 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பல எதிர்மறை எண்ணங்கள் மனதில் வரலாம்...
- 15 hrs ago
வீட்டிலேயே ஈஸியாக செய்யும் இந்த ஹேர் மாஸ்க்குகள் உங்க முடியை அடர்த்தியாகவும் நீளமாகவும் மாற்றுமாம்!
- 15 hrs ago
புதன் மிதுன ராசிக்கு செல்வதால் அடுத்த 15 நாட்கள் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது...
Don't Miss
- News
வானில் தோன்றிய மர்ம பொருட்கள்.. கொரோனாவுக்கு காரணம் "ஏலியன்?" வட கொரியா கொடுத்த வினோத விளக்கம்
- Technology
OnePlus Nord 2T வாங்கலாமா? இல்ல Nothing Phone 1 போனுக்கு வெயிட் பண்ணலாமா? எது பெஸ்ட்?
- Movies
பாக்கியலட்சுமி தொடர்ல அடுத்த மூணு வாரம் இப்படித்தான் இருக்கப்போகுது.. நவரசங்களை பார்க்க தயாராகுங்க!
- Sports
மரத்தடியில் மருத்துவரை பார்க்கும் தோனி.. சிகிச்சைக்கு வெறும் ரூ.40 மட்டுமே.. அப்படி என்ன ஸ்பெஷல்
- Finance
பிளாஸ்டிக் தடை எதிரொலி... அமேசான் - டாடா மோட்டார்ஸ் வேற லெவல் ஒப்பந்தம்!
- Automobiles
விநோத தோற்றத்தில் சுற்றி திரிந்த ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வியந்து வேடிக்கை பார்த்த பெங்களூர் வாசிகள்!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
இப்ப புதுசா நடிகை தீபிகா படுகோனேவின் வாழ்வில் நுழைந்தது யார் தெரியுமா?
மாடலிங்கில் தனது வாழ்க்கையை ஆரம்பித்து, பாலிவுட் திரையுலகில் மிகவும் கஷ்டப்பட்டு நுழைந்தவர் தான் தீபிகா படுகோனே. ஆரம்ப காலத்தில் சம்பளமே வாங்காமல் நடித்தவர், தற்போது உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளுள் ஒருவராகியுள்ளார். மேலும் பாலிவுட்டில் தன் திறமையைக் காட்டி கலக்கியதோடு, ஹாலிவுட்டிலும் தனது முத்திரையை பதித்தவர்.
இவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த ஹாலிவுட் திரைப்படமான XXX படத்தை நடித்த பின்பு, என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற கேள்வி பலரது மனதிலும் எழுந்திருக்கும். தீபிகா படுகோனேவின் வாழ்வில் அடுத்ததாக ஒரு பெரிய விஷயம் நடக்கவிருக்கிறது. அதுவும் ஒரு மொபைல் போனால்.
என்ன புரியவில்லையா? சீன மொபைல் தயாரிப்பாளரான ஒப்போ நிறுவனம், மார்ச் மாதம் 23 ஆம் தேதி வெளியிடவுள்ள ஒப்போ F3 ப்ளஸ் போனின் புதிய பிராண்ட் அம்பாஸிடராக தீபிகா படுகோனேவை தேர்ந்தெடுத்துள்ளது.
பொதுவாக ஒப்போ போன் அதன் செல்ஃபீ சிறப்பம்சத்தால் மிகவும் பிரபலமாகியுள்ளது. இதுவரை இந்த ஒப்போ வெளியிட்ட போன்களுக்கு பல பாலிவுட் பிரபலங்கள் பிராண்ட் அம்பாஸிடராக இருந்தனர்.
முதன்முதலில் வெளிவந்த ஒப்போ F1 போனின் பிராண்ட் அம்பாஸிடராக ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் சோனம் கபூர் வந்தனர். இந்த போனின் செல்ஃபீ சிறப்பம்சத்தால், மார்கெட்டில் கொடிகட்டி பறந்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
நடிகைகளான ஏமி ஜாக்சன் மற்றும் தமன்னா மற்றும் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் போன்றோர் ஒப்போ F1S ஸ்மார்ட்போனின் பிராண்ட் அம்பாஸிடர்களாக வந்தனர். இந்த ஃபோனின் கேமராவின் தரம் அருமையாக இருப்பதோடு, கூடுதலாக இதில் 64GB ROM மற்றும் 4GB RAM கொண்டிருந்தது. இந்திய மொபைல் மார்கெட்டிலேயே இவ்வளவு சிறப்பம்சம் கொண்டு வெளிவந்த முதல் போன் இது தான்.
அடுத்ததாக ஒப்போ F1 S ஸ்மார்ட்போனின் பிராண்ட் அம்பாஸிடர்களாக நடிகை பிபாசா பாசுவும், அவரது கணவர் கரண் சிங் க்ரோவரும் வந்தனர்.
தற்போது புதிதாக வெளிவரவுள்ள ஒப்போ F3 ப்ளஸ் போனின் பிராண்ட் அம்பாஸிடராக நடிகை தீபிகா படுகோனே வரவுள்ளார். இந்த போனின் சிறப்பம்சம் டியூயல் செல்ஃபீ கேமரா மட்டுமின்றி, 5 நிமிடம் சார்ஜ் செய்தாலே 2 மணிநேரம் பேசக்கூடிய தனித்துவமான VOOC சார்ஜ் கொண்டது.
நிச்சயம் தீபிகா படுகோனேவால் இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன், மக்களிடையே மேன்மேலும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போன் பற்றிய வீடியோவைப் பார்க்க, கீழே கிளிக் செய்யுங்கள்:
https://www.youtube.com/watch?v=NfIYcJg2Z3k