உலகிற்கு தமிழ் கலாச்சாரம் அளித்த நான்கு அற்புத பங்களிப்பு

Posted By:
Subscribe to Boldsky

குமரியில் தோன்றிய இனம், கன்னியாகுமரியின் எல்லையில் வள்ளுவனை இன்றும் கண்டு வியக்கும் பெருமை கொண்ட மொழியை பேசும் மக்கள். உலகம் இன்றும் வியக்கும் விஷயங்களை அன்றே பாக்களில் பாடி சென்றவர்கள் நமது முன்னோர்கள்.

இன்று பெரிதாக நமது கவனத்தை ஈர்க்காத சில விஷயங்கள் உலகம் வியக்கும் விஷயங்களாக, அறியா விஷயங்களாக திகழ்கின்றன. தமிழனின் பெருமை கூட பலநூறு விஷயங்கள் இருக்கின்றன. இந்த நான்கு அற்புத விஷயங்களாக திகழ்கின்றன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூத்தகுடி தமிழன்!

மூத்தகுடி தமிழன்!

உலகம் மொழி அறியாது, உறவு அறியாது சுழன்று கொண்டிருந்த போது வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து. முத்தமிழ் சங்கம் உருவாக்கி சிறந்து விளங்கியவன் தமிழன் என்பதில் நாம் பெருமை அடைய வேண்டும்.

யாதும் ஊரே...

யாதும் ஊரே...

சங்கக்கால புலவர் கனியன் பூங்குன்றனார் சங்க காலத்தில் "யாதும் ஊரே, யாவரும் கேளீர்" என பாடியவர். இதை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் மறைந்த மக்கள் ஜனாதிபதி டாக்டர். அப்துல் கலாம் அவர்கள் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகெங்கும் இருப்பவர்கள் அனைவரும் ஒருவர் என்ற உயர்ந்த கொள்கையை பாராட்டும் வாக்கியம் இது.

பஞ்சலோகம்!

பஞ்சலோகம்!

ஐந்து உலோகங்களை சேர்த்து உருவாக்கப்படும் சிலைகள் தான் இந்த பஞ்சலோக சிலைகள். கும்பகோணத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் இந்த பஞ்சலோக சிலைகளை காணலாம்.

நவபாஷனம்!

நவபாஷனம்!

நவபாஷாணம் என்பது சித்தர்களால் அறியப்பட்ட ஒரு அற்புதம். ஒன்பது வகை பாஷனங்களை சேர்த்து உருவாக்கப்பட்டது. பழனி முருகனின் சிலை இதனால் உருவாக்கப்பட்டது ஆகும்.

நாடி ஜோதிடம்!

நாடி ஜோதிடம்!

ஓலைசுவடியில் ஒரு மனிதனின் எதிர்காலம் பற்றி குறிக்கப்பட்ட ஜோதிட முறை. வைத்தீஸ்வரன் கோவில் இதற்கு புகழ்பெற்றது.

தமிழ் வழி பின்பற்றுவோம்...

தமிழ் வழி பின்பற்றுவோம்...

இயற்கையே மருந்து, இயற்கையே உணவு என வாழ்ந்தவர்கள் நாம். இனிமேலும், வெளிநாட்டு பானங்கள், கெமிக்கல் உணவுகள், மேற்கத்திய கலாச்சாரம் போன்றவற்றை ஆதரிக்காமல், தமிழ் வழி நிற்போம். இதுவே, தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும் சிறந்தோங்க செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tamil Culture’s Amazing contribution to the world

Tamil Culture’s Amazing contribution to the world
Please Wait while comments are loading...
Subscribe Newsletter