For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொகைனால் உலகளவில் ஆண்களுக்கு ஏற்படும் மாபெரும் பாதிப்புகள்!

கொகைன் பற்றிய அதிர்ச்சியளிக்கும் உண்மைகள்!

|

கொகைன் உலகளவில் பெருமளவு கடத்தி விற்கப்படும் போதை பொருள். ஆரம்பக் காலத்தில் இதை மருந்தாக பார்த்தனர், பயன்படுத்தினர். பின்னர் இதிலிருக்கும் பக்க விளைவுகள் அறிந்து தடை செய்தனர். ருசி கண்ட பூனை விடாது என்பது போல, மனிதர்களால் இதை கைவிட முடியவில்லை. உலகளவில் கணக்கிட்டு பார்த்ததில் அமெரிக்காவில் தான் அதிகளவில் கொகைன் பயன்படுத்தப்படுகிறது.

பிரேசில் போன்ற நாடுகளில் இந்த கொகைன் மிக குறைவான விலையில் கிடைக்கிறது. உங்களுக்கொன்று தெரியுமா? கொகைனை விட அடிக்ஷனை அதிகரிக்க கூடிய தன்மை நாம் தினந்தோறும் பயன்படுத்தி வரும் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரைக்கு இருக்கிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மைக்ரோசாப்ட்!

மைக்ரோசாப்ட்!

மைக்ரோசாப்ட், மெக் டொனால்ட், கெல்லாக்ஸ் போன்றவற்றின் வருட வருமானத்தை காட்டிலும், அதிக வருமானம் கொகைன் பயன்பாட்டின் மூலம் வருகிறது. இது உலகளவில் விற்கப்படும் கொகைனை கொண்டு அறியப்படும் தகவலாகும்.

மாரடைப்பு

மாரடைப்பு

கொகைன் பயன்படுத்துவது, ஒரு மணிநேரத்திற்குள் 2,400% மாரடைப்பு ஏற்பட காரணியாக அமைகிறது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும், ஆரம்பக் காலத்தில் கொகைனை மருந்தாக பயனடுத்தி வந்த முறையும் இருந்தது. பிறகு இதன் தாக்கத்தை அறிந்து தடை செய்தனர்.

37%

37%

அமெரிக்காவில் மட்டுமே, கொகைன் மற்றும் ஹெராயின் மூலமாக ஏற்படும் மரணத்தை காட்டிலும், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வலிநிவாரண மருந்துகளால் அதிகப்படியான மரணங்கள் ஏற்படுகிறதாம். உலக மக்கள் தொகையில் ஐந்து சதவீதம் பேர் தான் அமெரிக்காவில் வாழ்கிறார்கள். ஆனால், உலகளவில் கொகைன் பயன்படுத்தும் மக்களின் சதவீதத்தில் 37% பேர் அமெரிக்கர்கள்.

வெள்ளை சர்க்கரை

வெள்ளை சர்க்கரை

சுத்திகரிப்பு செய்யப்பட்ட சர்க்கரையானது கொகைனை விட பெரிய அடிக்ஷனை ஏற்படுத்துகிறது என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். நோஸ் கேண்டி, ஒயிட் லேடி, ஸ்டார் டஸ்ட், சார்லி போன்றவை கொகைனின் வேறு பெயர்களாகும். வருடத்திற்கு, 1.4 - 2.1 கோடி பேர் கொகைன் பயன்படுத்துகிறார்கள்.

ஸ்காட்லாந்து!

ஸ்காட்லாந்து!

உலகிலேயே அதிகமானோரால் கொகைன் பயன்பாடு ஸ்காட்லாந்தில் தான் இருக்கிறது. காரணம் நாற்பதில் ஒருவர் இந்நாட்டில் கொகைன் பயன்படுத்துகிறார்கள். மேலும், ஒரு கிராம் கொகைன் ஆஸ்திரேலியாவில் 207 டாலர். ஆனால், பிரேசிலில் வெறும் ஒன்பதே டாலர்.

குழந்தைகள்

குழந்தைகள்

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளில் ஒரு இலட்சம் குழந்தைகள் பிறக்கும் போதே கொகைனுக்கு அடிமையாக பிறக்கிறார்கள். இதற்கு காரணம், கர்ப்ப காலத்தில், அவர்களது தாய்மார்கள் கொகைன் பயன்படுத்தியது தன் என நிபுணர்கள் கூறுகிறார்கள். ஓர் ஆய்வில், கொகைன் பயன்படுத்தும் அல்லது கொகைன் அடிக்ஷன் கொண்டிருக்கும் ஆண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நினைவுகள் சேமிப்பதில் குறைபாடு ஏற்படுகிறது என கண்டறியப்பட்டது.

மரணங்கள்

மரணங்கள்

அமெரிக்காவில் புகையிலை காரணமாக ஏற்படும் மரணங்களை காட்டிலும், கொலம்பியாவில் கொகைன் பயன்பாடு காரணமாக ஏற்படும் மரணத்தின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும். அமெரிக்காவில் மட்டுமே, ஒரு நாளுக்கு புதிதாக முதல் 2500 பேர் கொகைன் உட்கொள்கிறார்கள். இதற்கு காரணம் அமெரிக்காவில் குறைந்தபட்சம் நூறு டாலர்களுக்கு தான் கொகைன் கிடைக்கிறது. ஆனால், கொலம்பியாவில் ஐந்து டாலர்களுக்கு எல்லாம் கொகைன் கிடைக்கிறது.

டோபமைன்

டோபமைன்

கொகைன் ஆனது, உடலில் டோபமைனை 250% அதிகரிக்க செய்கிறது. இந்த டோபமைன் செக்ஸ் மூலமாக நூறு சதவிதமும், உணவு மூலமாக ஐம்பது சதவிதமும் உடலில் வெளிப்படுகிறது என கூறப்படுகிறது. கொகைன் அடிக்ஷன் கொண்டுள்ளவர்களின் இதயம், உடலுக்கு வெளியேவும் 25 நிமிடங்கள் துடிக்குமாம்.

மருத்துவ துறை

மருத்துவ துறை

கொகைனை மிகவும் குறைந்த அளவில் மருத்துவ துறையில் பயன்படுத்துகிறார்கள். உணர்ச்சியின்மை, இரத்தபோக்கை குறைக்க, மூக்கு பகுதியில் அறுவை சிகிச்சை போன்றவை மேற்கொள்ள கொகனை சிலர் பயன்படுத்துகிறார்கள்.

புறாக்கள்

புறாக்கள்

புறாக்கள் மூலம் பல நாடுகளின் எல்லைகளில், சிறைகளுக்குள் கொகைன் பட்டுவாடா செய்யப்படுகிறது. இதன் மூலமாக மாட்டிக் கொள்ளாமல் கொகைன் விற்பனை செய்ய முடியும். இந்த வகையில் ஒரு புறாவின் மூலம் மூவாயிரம் டாலர்கள் மதிப்பிலான கொகைன் விற்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Shocking Facts About Cocaine!

Shocking Facts About Cocaine!
Story first published: Saturday, October 28, 2017, 15:49 [IST]
Desktop Bottom Promotion