ஒரு பெண்ணுக்கு தெரியாம ஃபோட்டோ எடுக்கறீங்களா? அதுக்கு என்ன தண்டனை தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

ஒரு பெண்ணின் அனுமதியின்றி அவர்களை தவறான முறையில் அணுகுவது கண்ணியமில்லை. பெண் குழந்தைகளையும் விட்டு வைக்காத இதயமற்ற மிருகங்களிடம் அதை எதிர்பார்க்கக் கூடாதுதான். மாறாக அவர்களுக்கு தரும் கடுமையான தண்டனை ஒன்றே இது போன்ற குற்றங்களை குறைக்கவாவது முடியும்.

பெண்களுக்கு எதிராக நடக்கும் எந்த மாதிரியான விஷயங்கள் இந்திய சட்டப்படி குற்றம் என பெண்களுக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பெண்கள் தைரியமாக சென்று புகார் கொடுக்க முன்வர வேண்டும். அதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று, பெண்ணை சீண்டும் வகையில் எவையெல்லாம் குற்றங்களில் அடங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பீப் சாங் பாட்டு பாடுவது :

பீப் சாங் பாட்டு பாடுவது :

பீப் சாங் போல பெண்களை மிகக் கேவலமாக முறையில் அல்லது பாடுவது IPS Section-294 படி குற்றம். 3 மாத சிறை தண்டனையுடன் அபராதமும் வசூலிக்கப்படும்.

கட்டாயப்படுத்துவது :

கட்டாயப்படுத்துவது :

ஒரு பெண்ணின் விருப்பமில்லாமல் அவளிடம் தவறாக நடக்க முற்படுவதும் குற்றமே. IPS Section 354 படி 1-3 ஆண்டு வரை ஜெயில் தண்டனை.

 பின் தொடர்வது :

பின் தொடர்வது :

ஒரு பெண்ணிற்கு தெரியாமல் பின்தொடர்வதும் சட்டப்படி குற்றம். IPS Section 354 படி 3-5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் வசூலிக்கப்படும்.

உடலளவில் துன்பம் :

உடலளவில் துன்பம் :

பெண் நிராகரித்தபின் அவளை துன்புறுத்தினால், அதனால் உடலில் காயம் பட்டால் IPS Section- 503 படி 2 ஆண்டுகள் தண்டனை மற்றும் அபராதம்.

 புகைப்படம் எடுத்தல் :

புகைப்படம் எடுத்தல் :

ஒரு பெண்ணிற்கு தெரியாமல் அவளை ஃபோட்டோ எடுப்பது, அதனை ஷேர் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் IPS Section-354 படி 1-3 வருட சிறை தண்டனை. மீண்டும் அதே செய்கைகளில் ஈடுபட்டால் 7 வருடம் வரை சிறை தண்டனை.

மேலதிகாரியின் தொல்லை:

மேலதிகாரியின் தொல்லை:

ஒரு பெண்ணின் மேலதிகாரி, புரோமோஷனுக்காக அல்லது சம்பள உயர்வு தர, தனக்கு சாதகமாக நடக்க செக்ஸ் தொல்லை தந்தால் தண்டனை பெற்றுத் தரலாம்.

மார்பிங்க் செய்தல் :

மார்பிங்க் செய்தல் :

ஒரு பெண்ணின் புகைப்படத்தை மாற்றி வேறொரு தவறான முறையில் சித்தகரிப்பது அல்லது வேறொருவரோடு இணைந்து மார்ஃபிங்க் செய்வது போன்ற கேவலமான வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு IPS Section-499 படி 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம்.

பொது இடத்தில் அவமானப்படுத்துதல் :

பொது இடத்தில் அவமானப்படுத்துதல் :

ஒரு பெண்ணை அவமானதப்படுத்தும் நோக்கத்தில் அவளை பொது இடத்தில் தவறாக விமர்சிப்பது, மோசமாக பேசுவது ஆகியவைகளும் IPS Section-67 படி 2 ஆண்டுகள் சிறை தண்டனை.

பெண்ணின் நடத்தை :

பெண்ணின் நடத்தை :

ஒரு பெண்ணை தவறானவளாகவும் நடத்தை கெட்டவளாகவும் சித்தரிப்பதும் குற்றமாகும் என்பது உங்களுக்கு தெரியுமா? IPS Section- 509 படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை.

தொடுதல் :

தொடுதல் :

பெண்களின் அந்தரங்க பகுதிகளை தொட முயல்வதும் அல்லது தொடுவதும் சட்டப்படி குற்றமாகும். IPS Section-354 படி 3 ஆண்டு வரை தண்டனை.

வளர்ப்புமுறை :

வளர்ப்புமுறை :

இப்படி சட்டம் இருக்கிறதால மட்டும் தவறுகள் நடக்காமலிருக்கிறதா? திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை எபப்டி ஒழிக்க முடியாதோ அப்படிதான் இதுவும். இதற்கு உங்கள் பிள்ளைகளின் வளர்ப்பு முறையும் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Sexual Harassment Laws All Women Should Know In India

Sexual Harassment Laws All Women Should Know In India
Story first published: Friday, March 17, 2017, 12:42 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter