For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவராத்திரி ஒவ்வொரு நாளும் என்னென்ன அலங்காரம் செய்ய வேண்டும் என்று தெரியுமா ?

ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி அன்று ஒவ்வொரு நாளும் என்னென்ன அலங்காரம் செய்ய வேண்டும் என்று தெரியுமா?

|

நவராத்திரி விழா துவங்குவதற்கு இன்னும் சில தினங்களே இருக்கிறது. இந்நிலையில் நவராத்திரி குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களுக்கு சகல நலங்களையும் கிடைக்கும்.

ஒன்பது நாட்கள் மூன்று மூன்றாக பிரித்து கொண்டாடப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூன்று மூன்றாக பிரிக்க காரணம் :

மூன்று மூன்றாக பிரிக்க காரணம் :

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் லட்சுமிக்கும் அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் கொலு கொண்டாடுவார்கள். இதற்கு காரணம் என்ன தெரியுமா?

வாழ்க்கைக்கு தேவை பணம்.இதைப் பெறுவதற்கு லட்சுமியை முதலில் துதிக்கிறோம். அதனை பாதுகாக்க அதற்குரிய தைரியத்தையும், வழ்முறையையும் வேண்டி சக்தி வேண்டி துர்க்கை, காளி என காவல் தெய்வத்தை வணங்குகிறோம்.

கிடைக்கும் பணத்தை பயனுள்ள காரியங்களுக்கு பயன்படுத்து வேண்டுமே, அதற்காக அறிவு வேண்டி சரஸ்வதியை வணங்குகிறோம்.

முதல் மூன்று நாள் :

முதல் மூன்று நாள் :

சக்தித்தாயை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோபக்காரி. நீதியைக் காக்கவே இவள் கோபமாக உள்ளாள்.

இரண்டாம் நாளில் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபடவேண்டும். ஏவல், பில்லி சூனியம், எதிரிகள் தொல்லையிலிருந்து விடுபட இவளின் அருளைப் பெறுவது அவசியம்.

மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திராணியாக வழிபட வேண் டும். இவளை மாஹேந்தரி, சாம் ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். பெரிய பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களிற்கு இவளின் அருட்பார்வை வேண்டும்.

நான்கு, ஐந்து, ஆறு :

நான்கு, ஐந்து, ஆறு :

இன்று வைஷ்ணவி தேவியாக வழிபட வேண்டும். ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவி யாக வழிபடவேண்டும். இவள், அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.

ஆறாம் நாள் அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். சகல பாவங்களையும் விலக்கிடுபவள்,வீரத்தை தருபவள்.

ஏழு,எட்டு,ஒன்பது :

ஏழு,எட்டு,ஒன்பது :

ஏழாம் நாள் அன்னையை மகாலட்சுமியாக வழிபட வேண்டும். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள் இவள். எட்டாம் நாள் அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும்.

ஒன்பதாம் நாள் அன்னையை ப்ராஹ்மி ஆக வழி பட வேண்டும். கல்விச் செல்வம் பெற அன்னையின் அருள் அவசியமாகும்.

நவராத்திரி பெண்களின் பண்டிகையா ? :

நவராத்திரி பெண்களின் பண்டிகையா ? :

நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பது போலவும் ஒரு எண்ணம் நிலவுகிறது.

இதனை ஆண்களும் அனுஷ்டிக்கலாம். ஏனென்றால் எல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுவதால் யார்வேண்டுமானாலும் வணங்கலாம்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Navratri alankaram for nine days!

Navratri alankaram for nine days!
Story first published: Saturday, September 16, 2017, 15:16 [IST]
Desktop Bottom Promotion