Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
உங்க சுண்டு விரல் சைஸ் வெச்சு, உங்க இரகசியங்கள் என்னென்ன தெரிஞ்சுக்கலாமா?
ஒரு நபரின் சுண்டு விரல் அமைப்பு மற்றும் அதன் வளர்ச்சி வைத்து அவரது குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என அறிந்துக் கொள்ள முடியுமாம்!
கைரேகை ஜோதிடத்தில் பல முறையில் ஒருவரது குணாதிசயங்கள் கூறப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் இது போன்ற ஒரு ஜோதிட முறை பின்பற்ற படுகிறது.
சிலர் இதை அறிவியல் பூர்வமாகவும் நிரூபணம் செய்துள்ளனர். ஒருசிலார் இந்த தொழில்நுட்ப யுகத்தில் இந்த பொய்யும் புரட்டும் எப்போது அழியும் என காத்திருக்கின்றனர்.
இது தென்கொரியாவில் பரவலாக காணப்படும் சுண்டு விரல் கொண்டு ஒரு நபரின் குணாதிசயங்கள் , இரகசியங்கள் அறியும் முறை...

குட்டி!
சுண்டுவிரல் தான் இருப்பதிலேயே மிகவும் சிறிய விரல். அதிலும், மோதிர விரலுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறிய சுண்டு விரல் இருப்பவர்கள் வெட்கம், கூச்சம் அதிகம் கொள்ளும் நபராக இருப்பார்கள்.
புதிய நபர்கள் மத்தியில் இது தலைதூக்கி நிற்கும். இவர்கள் பெரிய கனவுகள் கொண்டிருப்பார்கள். ஆனால், கூச்ச மனோபாவத்தால் தாங்கள் அடைய வேண்டிய தூரத்தை / உயரத்தை விட குறைவாகவே அடைவார்கள்.

இயல்பு அளவு!
மோதிர விரலின் முதல் அடுக்கு (கோடுக்கு) இணை அளவு சுண்டு விரல் இருக்கும் நபர்கள் குணாதிசயங்களும் சமநிலையாக இருக்கும். இவர்கள் ஒருவரை பற்றி நன்கு அறிந்த பிறகு அவர்களுடன் நெருங்கி பழகுவார்கள்.

நீளமாக!
மோதிர விரலை முதல் கோடினை காட்டிலும் சுண்டு விரல் நீளமாக கொண்டுள்ளவர்கள். மிக சகஜமாக, சிரித்த முகத்துடன் பழகுவார்கள். அவர்களுக்கு எல்லாவற்றிலும் லக் இருக்காது. கடினமாக உழைக்கும் குணம் கொண்டிருப்பார். இவர்களுடன் நம்பி பழகலாம்.

கீழ் அடுக்கு!
ஆள்காட்டி, பெருவிரல், மோதிர விரலுடன் ஒப்பிடுகையில் சுண்டு விரல் மட்டும்சற்றே கீழ் நிலை கொண்டிருப்பவர்கள்., கனவுலகில் வாழ்பவர்களாக இருப்பார்கள். தங்கள் கனவுகளை நிஜமாக்க சிரமப்படுவார்கள்.

சமம்!
மோதிர விரல், சுண்டு விரல் ஒரே அளவில் கொண்டிருப்பவர்கள் மிகவும் அரிதானவர்கள். இவர்கள் தனித்தன்மை கொண்டிருப்பார்கள். அதிக பலமும், ஆளுமை சக்தியும் கொண்டு திகழ்வார்கள்.

சதுரம்!
சுண்டு விரல் மேடு சதுரமாக கொண்டிருபப்வர்கள் ரோல்மாடலாக திகழ்வார்கள், எதையும் நேரடியாக பேசுபவர்களாக இருப்பார்கள். ஒளிவுமறைவு இல்லாமல் பழகுவார்கள்.

முக்கோணம்!
சுண்டுவிரல் மேடு முக்கோணம் போல கொண்டிருப்பவர்கள் சிறந்த எழுத்தாளராக திகழ்வார்கள். மக்கள் மத்தியில் ஈர்ப்புடன் பேசுவார்கள். ஒரு கூட்டத்தில் தனித்து சிறப்பு குணத்தோடு காணப்படுவார்கள்.

வளைவு!
சுண்டு விரல் மேடு வளைந்து காணப்படுபவர்கள் சற்றே அச்ச உணர்வு அதிகம் கொண்டிருப்பார்கள். அமைதியாக இருந்துவிட்டு போகலாம் என எண்ணுவார்கள். எதுவாக இருந்தாலும் டீல் பேசி முடிவெடுப்பார்கள்.



Click it and Unblock the Notifications
