சித்தார்த் மல்லையா பற்றி பலரும் அறியாத அதிர வைக்கும் உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

சிதார்த்த விஜய் மல்லையா தனது பெயரை சித் மல்லையா என ஸ்டைலாக மாற்றிக் கொண்டார். இவர் 1987-ம் ஆண்டு மே 7 நாள் பிறந்தவர்.யூபி குரூப்ஸ் சேர்மேன். விட்டல் மல்லையாவின் பேரன் ஆவார்.

இவர் பிஸினஸ் மட்டுமின்றி மாடலின், நடிப்பு, கிரிக்கெட் அணி இயக்குனர், சிலபல காதல் கிசுகிசுக்கள் மூலம் பிரபலமானவர்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

சித் பிறந்தது லாஸ் ஏஞ்சல்ஸில். சித் விஜய் மல்லையாவிற்கும் முன்னாள் ஏர் ஹோஸ்ட் சமிரா மல்லையாவிற்கும் பிறந்த மகனாவார்.

#2

#2

பிறந்த சில காலத்திலேயே இவர் குடும்பத்துடன் இங்கிலாந்து சென்றுவிட்டார். அங்கு தான் சித் வளர்ந்தது, படித்து எல்லாம். சில காலம் இவர் பெற்றோருடன் துபாயில் இருந்தார்.

15 வயதில் PappleWick பள்ளியிலும், அதன் பிறகு Wellington கல்லூரியிலும், குயின் மேரி பல்கலைகழகத்திலும் இவர் பயின்றுள்ளார். கல்லூரி காலத்தில் இவர் ஒரு ஹாக்கி வீரராக இருந்தார்.

#3

#3

பலகலைகழக படிப்பை முடித்த பிறகு சித் டியாகோ பான நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். பிறகு கின்னஸ் பான நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் பிராண்ட் மேனாஜராக பணிபுரிந்தார்.

#4

#4

பிறகு 2010-ல் ராயல் சேலஞ்சர் பெங்களூர் அணியின் இயக்குனரானார் சித். இந்த அணி இவரது தந்தை நடத்தி வந்த யூ.பி குரூப்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது. இவர் ராயல் சேலஞ்சர் அணியில் இருந்த போது பசுமை திட்டங்கள் எல்லாம் கொண்டு வந்தார்.

#5

#5

2012-ல் நோ பவுண்டரிஸ் (எல்லைகள் இல்லை) என்ற பெயரில் ஒரு ஆன்லைன் சாட் நிகழ்ச்சி துவக்கினார். இந்த நிகழ்ச்சியை இவரே எழுதி, தொகுத்து வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இவரது அணியின் வீரர்கள் பங்கெடுத்தனர்.

#6

#6

பிறகு தி ஹன்ட் ஆப் கிங்பிஷர் காலண்டர் கேர்ள் என்ற நிகழ்ச்சிக்கு ஜட்ஜாக விளங்கினார். இந்த நிகழ்ச்சி NDTV Good Times சேனலில் ஒளிப்பரப்பானது.

#7

#7

மேலும், லேக்மி ஃபேஷன் வீக் 2012-ல் மாடலாகவும் உருவெடுத்தார் சித் மல்லையா. இவர் சாந்தனு, நிகில் போன்ற டிசைனர்களின் உடையை அணிந்து இந்தியன் பிரைடல் வீக்கில் ராம்ப் வாக் செய்தார்.

#8

#8

2013-ல் ABC Talent Showcase எனும் ப்ரோக்ராமில் 7000 பேரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நபர்களில் ஒருவராக பட்டியலில் இடம் பெற்றார் சித் மல்லையா. பிறகு 2014-ல் சித் சீசன்ஸ் என ஒரு யூடியூப் ஷோ ஆரம்பித்தார்.

#9

#9

மேலும், சித் பிராமன் நாமன் என்ற செக்ஸ் காமெடி படத்தில் நடிகராகவும் நடித்துள்ளார். இதில் பணக்கார், அழகான பெண்களை மயக்கும் கிரிக்கெட் விளையாடும் நபாக ரூனி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

#10

#10

இவர் ராயல் சேலஞ்சர் அணியில் இருக்கும் போது இவருக்கும் கத்ரீனா கைப் மற்றும் தீபிகா படுகோனே போன்ற பாலிவுட் முன்னணி நடிகைகளுன் காதல் உறவில் இருந்தார் என்ற கிசுகிசுக்களும், பல பார்டி படங்களும் வெளியாக பரபரப்பை உண்டாக்கின.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Lesser Known Facts About Siddharth Mallaya, Son of Vijay Mallaya!

Lesser Known Facts About Siddharth Mallaya, Son of Vijay Mallaya!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter