For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அக்ஷ்ய த்ருத்யை அன்று கனகதாரா ஸ்தோத்ரம் சொன்னால் தங்கம் கொழிக்கும்!! அந்த கதை பற்றி தெரியுமா?

By Divyalakshmi Soundarrajan
|

கனகதாரா ஸ்தோத்ரம் மகாலட்சுமி தேவியை துதித்துப் பாடுவது. "கனகதாரா" கனகம் மற்றும் தாரா என்னும் இரண்டு சமஸ்கிருத வார்த்தைகள் சேர்ந்தது.

கனகம் என்பது தங்கம் மற்றும் செலவத்தைக் குறிப்பது மற்றும் தாரா என்பது ஒருவர் வைத்திருப்பதை குறிப்பதாகும். மகாலட்சுமி தேவி கையில் தங்கம் வைத்திருப்பதை புகழ்ந்து அழைக்கும் பெயராக இது கருதப்படுகிறது.

அட்சயத் திரிதியை அன்று வணங்கப்படும் முதன்மை கடவுள் மகாலட்சுமி தேவி. மகா விஷ்ணு, குபேரர் மற்றும் விநாயகர் போன்றவர்களும் அட்சயத் திரிதியை அன்று வணங்கப்படக் கூடிய தெய்வங்கள் ஆவர்.

அட்சய திரிதியை அன்று இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ஸ்லோகங்களை சொல்லி வணங்குவதால் சகல விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கனகதாரா ஸ்தோத்ரம் பிறந்த கதை :

கனகதாரா ஸ்தோத்ரம் பிறந்த கதை :

ஒரு நாள் ஆதி சங்கரர் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தாராம். அப்போது அவர் மிகவும் ஏழையான பெண் ஒருவரின் வீட்டிற்குப் பிச்சை கேட்டு வந்தாராம். அந்த பெண்ணின் வீட்டில் தர்மம் செய்வதற்கு என்று எதுவுமே இல்லை. அவள் சமையல் அறைக்குச் சென்று தேடி பார்த்தால் ஒரே ஒரு பழைய நெல்லிக்காய் மட்டும் இருந்தது.

கனகதாரா ஸ்தோத்ரம் பிறந்த கதை :

கனகதாரா ஸ்தோத்ரம் பிறந்த கதை :

அதை எப்படி தருவது என்று யோசித்தால். மேலும், வெறும் கையோடும் அணுப்ப முடியாது என்பதால் வேறு வழி இல்லாமல் அந்த நெல்லிக்காயைக் கொடுத்தாள். அந்தப் பெண்ணின் தூய உள்ளத்தை கண்டார் ஆதி சங்கரர். மேலும், அந்தப் பெண்ணின் ஏழ்மையைக் கண்டு வருத்தமடைந்தார். எனவே, அவர் மகாலட்சுமி தேவியை போற்றி பாடல் ஒன்றைப் பாடினார்.

கனகதாரா ஸ்தோத்ரம் பிறந்த கதை :

கனகதாரா ஸ்தோத்ரம் பிறந்த கதை :

அந்தப் பாடலின் முடிவில் மகாலட்சுமி தேவி ஆதி சங்கரர் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு ஆதி சங்கரர் எனக்கு எதுவும் வேண்டாம், இந்த பெண்ணிற்கு செல்வ வளத்துடன் வாழ ஆசி வழங்கும் படி கேட்டார். ஆனால், மகாலட்சுமி தேவி அதற்கு இவள் எந்த ஒரு நல்ல காரியமும் செய்ததில்லை. அவளுக்கு எப்படி வரம் அளிப்பது என்று கேட்டார்.

கனகதாரா ஸ்தோத்ரம் பிறந்த கதை :

கனகதாரா ஸ்தோத்ரம் பிறந்த கதை :

அதற்கு ஆதி சங்கரர் கூறினார், ஒருவர் செய்ய அத்தனை பாவங்களையும் போக்க அவர்கள் செய்த ஒரு நல்லதே போதுமானது அல்லவா. பின்னர் அவர் கூறியது சரி என்று உணர்ந்த மகாலட்சுமி தேவி, அந்த பெண்ணிற்கு அனைத்து செல்வங்களும் கிடைக்க ஆசி வழங்கினார். ஆதி சங்கரர் பாடிய கனகதாரா ஸ்தோத்ரத்தை கேட்டு உள்ளம் மகிழ்ந்த மகாலட்சுமி தேவி அந்த பெண்ணின் வீட்டில் தங்க நெல்லிக்காய் மழையை பெய்ய வைத்தார்.

கனகதாரா ஸ்தோத்ரம் பிறந்த கதை :

கனகதாரா ஸ்தோத்ரம் பிறந்த கதை :

கனகதாரா ஸ்தோத்திரத்திற்கு இருக்கும் பெருமை எடுத்துக் கூற இதுவே போதுமானது. எனவே, அட்சயத் திரிதியை அன்று இந்த ஸ்தோத்திரத்தைக் கூறி மகாலட்சுமி தேவியைப் போற்றி மனதாரா வழிபட்டால் சர்வ ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெற்று சந்தோஷமாக வாழலாம். வாருங்கள், இப்போது கனகதாரா ஸ்தோத்திரத்தை பார்ப்போம்...

 கனகதாரா ஸ்தோத்ரம் :

கனகதாரா ஸ்தோத்ரம் :

அங்கம் ஹரே புலக பூஷணமாச்ரயந்தீ

ப்ருங்காங்கனேவ முகுலாபரணம் தமாலம்

அங்கீக்ருதாகில விபூதிரபாங்க லீலா

மாங்கல்யதாஸ்து மம மங்கல தேவதாயா

ஆமீலிதாக்ஷமதிகம்ய முதா முகுந்தம்

ஆனந்த கந்த மநிமேஷ மனங்கதந்த்ரம்

ஆகேரஸ்தித கநீநிக பக்ஷநேத்ரம்

பூத்யை பவேத் மம புஜங்கசயாங்கநாயா

பாஹ்வந்தரே மதுஜித:ச்ரித கௌஸ்துபே யா

ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி

காமப்ரதா பகவதோபி கடாக்ஷமாலா

கல்யாணமாவஹதுமே கமலாலயாயா

காலாம்புதாலிலலிதோரஸி கைடபாரே

தாராதரே ஸ்புரதியா தடிதங்கனேவ

மாது:ஸம்ஸ்தஜகதாம் மஹனீயமூர்த்தி

பத்ரானி மே திசது பார்கவந்தனாயா

ப்ராப்தம் பதம் ப்ரதமத:கலு யத்ப்ரபாவாத்

மாங்கல்யபாஜி மதுமாதினி மன்மதே ந

மய்யாபதேத் ததிஹ மந்தரமீக்ஷணார்தம்

மந்தாலஸ ம் ச மகராலய கன்காயா

விச்வாமரேந்த்ர பதவிப்ரம தானதக்ஷம்

ஆனந்த ஹேது ரதிகம் முரவித்விஷோபி

ஈஷந்நிஷீதது மயி க்ஷண மீக்ஷணார்தம்

இந்தீவரோதரஸஹோதரமிந்திராயா

இஷ்டாவிசிஷ்டமதயோபி யயா தயார்த்ர

த்ருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் ஸுலபம் லபந்தே

த்ருஷ்டி: ப்ரஹ்ருஷ்டகமலோகரதீப்திரிஷ்டாம்

புஷ்டீம் க்ருஷீஷ்ட மம புஷ்கரவிஷ்டராயா

தத்யாத்தயானுபவனோ த்ரவிணாம்புதாராம்

அஸ்மின் அகிஞ்சன விஹங்கசிசௌ விஷண்ணே

துஷ்கர்மகர்மமபநீய சிராய தூரம்

நாராயணப்ரணயினீ நயனாம் புவாஹ

கீர்தேவதேதி கருடத்வஜஸுந்தரீதி

சாகம்பரீதி சசிசேகர வல்லபேதி

சிருஷ்டிஸ்திதி ப்ரலய கேலிஷ ஸம்ஸ்திதாயை

தஸ்யை நம:த்ரிபுவணே குரோஸ் தருண்யை

 கனகதாரா ஸ்தோத்ரம் :

கனகதாரா ஸ்தோத்ரம் :

நமோஸ்து நாலீக நிபானனாயை

நமோஸ்து துக்தோததி ஜன்ம பூம்யை

நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை

நமோஸ்து நாராயண வல்லபாயை

நமோஸ்து ஹேமம்புஜ பீடிகயை

நமோஸ்து ஃபூ மண்டல நயிகயை

நமோஸ்து தேவதி தயா ப்ராயை

நமோஸ்து சர்ஙயுதா வல்லாபாயை

நமோஸ்து தேவ்யை ப்ருகு நந்நயை

நமோஸ்து விஷ்ணோர்ரஷி ஸ்திதயை

நமோஸ்து லக்ஷ்ம்யை கமலாலயை

நமோஸ்து தாமோதர வல்லாபயை

நமோஸ்து காந்த்யை கமலேக்ஸனயை

நமோஸ்து பூத்யை புனவப்ரசூத்யை

நமோஸ்து தேவதிபிர் அர்ஷிதயை

நமோஸ்து நந்தாத்மஜா வல்லாபயை

. ஸம்பத்கராணி ஸகலேந்த்ரிய நந்தனாநி

ஸாம்ராஜ்ய தான விபவானி ஸரோருஹா

த்வத்வந்தனாநி துரிதாஹரணோத்யதாநி

மாமேவ மாதரநிசம் கலயந்து மான்யே

யத்கடாக்ஷஸமுபாஸனாவிதி

ஸேவகஸ்ய ஸகலார்த்தஸம்பத

ஸந்தநோதி வசனாங்க மானஸை

த்வாம் முராரிஹ்ருதயேச்வரீம் பஜே

ஸரஸிஜநிலயே ஸரோஜ ஹஸ்தே

தவல தமாம்சுக கந்த மால்யசோபே

பகவதி ஹரிவல்லபே மனோஜ்ஞே

த்ரிபுவன பூதிகரி ப்ரஸீத மஹ்யம்

திக்ஹஸ்திபி:கனக கும்ப முகாவஸ்ருஷ்ட

ஸ்வர்வாஹினீ விமல சாரு ஜலுப்லுதாங்கீம்

ப்ராதர்நமாமி ஜகதாம் ஜனனீமசேஷ

லோகாதிநாத க்ருஹீணீ மம்ருதாப்திபுத்ரீம்

கமலே கமலாக்ஷ வல்லபே த்வம்

கருணா பூரதரங்கிதை ரபாங்கை

அவலோகய மாமகிஞ்சனானாம்

ப்ரதமம் பாத்ரமக்ருத்ரிமம் தயாயா

ஸ்துவந்த யே ஸ்துதிபிரமூபிரன்வஹம்

த்ரயீமயீம் த்ரிபுவன மாதரம் ரமாம்

குணாதிகா குருதர பாக்ய பாஜினோ பாஜனா

பவந்தி தே புவி புதபாவிதாசாய

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Kanakadhara Stotram to chant on Akshaya tritiya

Kanakadhara Stotram To Chant On Akshaya Tritiya
Story first published: Saturday, April 29, 2017, 12:00 [IST]