Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
ஆங்கில எழுத்துக்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் பேசப்படுவது ஆங்கில மொழி. ஆங்கிலம் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
ஆங்கில மோகம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது இந்த சூழலில் ஆங்கில எழுத்துக்கள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கில எழுத்துக்கள் தோன்றிவிட்டன ஆனால் இப்போது நாம் பயன்படுத்தும் எழுத்து ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து தான் பழக்கத்திற்கு வந்தது. இதில் பல மாற்றங்களை செய்து 15 ஆம் நூற்றாண்டில் வில்லியம் கேக்ஸ்டன் என்பவர் நவீன ஆங்கில எழுத்துக்களை அறிமுகப்படுத்தினார் அதனைத் தான் இன்று வரை நாம் பயன்படுத்துகிறோம்.

26 எழுத்துக்கள் :
ஆங்கில எழுத்துக்கள் 26யும் பயன்படுத்தி வருகின்ற வாக்கியத்தை பனகிராம் என்று சொல்லப்படுகிறது. அப்படி பலரும் பயன்படுத்துகிற பனகிராம் "The quick brown fox jumps over the lazy dog.", "Pack my box with five dozen liquor jugs."

100 மொழிகள் :
உலகம் முழுவதிலும் சுமார் நூறு மொழிகள் ஆங்கில மொழியின் எழுத்துக்களை தான் பயன்படுத்துகிறார்கள்.சில மொழிகளில் மட்டும் எழுத்துக்களின் அளவு கூடுவதும் குறைவதும் உண்டு. ஆனால் ஆங்கில எழுத்தின் 23 எழுத்துக்கள் நிச்சயம் இடம்பெறும்.

முயற்சித்துப் பார்க்கலாம்! :
ஆங்கில எழுத்துக்களை உச்சரிக்கும் போது உதடுகளை அசைக்காமல் உச்சரிக்கவேண்டும் என்று முயன்றால் எல்லா எழுத்துகளின் உச்சிரிப்பும் ஒரே மாதிரி இருப்பதாய் தோன்றும்.

26ல் 40 :
ஆங்கில எழுத்துக்கள் 26ஐ கொண்டு 40க்கும் மேற்பட்ட ஓசைகளை எழுப்ப முடியும். ஆங்கில எழுத்துக்களில் குறைவாக பயன்படுத்தியது Z.அதிகமாக பயன்படுத்தியது E.

பெயர்க்காரணம் :
ஆங்கில எழுத்துக்களை ஆல்ஃபபெட்ஸ் என்று ஏன் சொல்கிறொம் தெரியுமா? கிரேக்க எழுத்துக்களில் முதன்மையான ஆல்ஃபா மற்றும் பீட்டா ஆகிய இரண்டையும் இணைத்து தான் ஆல்ஃவபெட்ஸ் என்று சொல்லப்படுகிறது.

ரொம்ப நீளம் :
ஆங்கிலத்தில் மிகவும் நீளமான வார்த்தை:
‘Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis'தான். இதில் 45 எழுத்துக்கள் இருக்கின்றன. புகைப்பிடிப்பது மற்றும் அதிக மாசினால் ஏற்படும் நுரையில் பாதிப்பு குறித்த நோயின் பெயர் தான் இது.

ஆங்கில மோகம் :
உலகில் உள்ள ஐந்தில் ஒரு பகுதி மக்கள் ஆங்கிலத்தையே பிரதான மொழியாக பேசுகிறார்கள். இணையத்தில் சேமிக்கப்படும் டேட்டாக்கள் 80 சதவீதத்திற்கும் அதிகமாக ஆங்கிலத்திலேயே இருக்கின்றன.



Click it and Unblock the Notifications
